இன்றைய நவீன இயந்திர உலகத்தில் இணைய வசதி (Internet) இல்லாமல் எதுவும் அவ்வளவு எளிதில் நடப்பதில்லை. பொது இடங்களைத் தாண்டி, இந்த இணைய வசதி நாம் வசிக்கும் வீடுகளிலும் என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
நாம் வீட்டை எப்படி ஸ்மார்ட் ஆக்கலாம்:
ஸ்மார்ட் தொழில்நுட்பத்தை வீடுகளில் இணைப்பதன் மூலம் அதிகப்படியான வசதி, பாதுகாப்பு மற்றும் ஆற்றல் திறன் ஆகியவற்றை நம்மால் கணிசமாக மேம்படுத்த முடியும். பல்வேறு வீட்டுப் பொருட்கள் மற்றும் சில அமைப்புகள் ஸ்மார்ட்-இணைப்புக்களாக மேம்படுத்தப்பட்டு வீட்டு உரிமையாளர்களுக்கு தேவையற்ற சிரமங்களை குறைக்கிறது மற்றும் அனைத்தையும் ஆட்டோமேஷன் (Automation) (தானியங்கி) ஆக்குகிறது.
இதில், ஸ்மார்ட் லைட்டிங் அமைப்புகள் (Smart lighting systems) என்பது பிரபலமாக அனைத்து வீட்டிலும் செய்யப்படும் மேம்படுத்தல் முறையாகும் , இதன் பயன்பாட்டை குரல் கட்டளைகள்(voice commands) அல்லது சில ஆப்ஸ் மூலம் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. இந்த அமைப்புகள் குறிப்பிட்ட நேரங்களில் நம் வீட்டில் உள்ள லைட்களை ஆன் மற்றும் ஆஃப் செய்ய திட்டமிடலாம், இதன் மூலம் தேவையற்ற ஆற்றல் நுகர்வையும் குறைக்கலாம் மற்றும் அதோடு வீட்டுப் பாதுகாப்பை மேம்படுத்தலாம்.
அதேபோல் ஸ்மார்ட் தெர்மோஸ்டாட்கள் (Smart thermostats) மற்றொரு முக்கிய வசதியாகும், இதை நம் மின்விசிறி மற்றும் ஏசி இயந்திரங்களோடு இணைத்து விடலாம். இது, ஒரு அறையில் மற்றும் வீட்டில் எவ்வளவு பேர் இருக்கிறார்களோ அதன்படி அனைவரும் விரும்பக்கூடிய அடிப்படையில் வெப்பத்தையும் குளிரூட்டலையும் மேம்படுத்தும். தேவையற்ற ஆற்றலைச் வீணாகாமல் சேமிக்கிறது. அதற்கேற்ப பயன்பாட்டு பில்களைக்(Electric Bill) குறைக்கிறது.
தேவையான பாதுகாப்பு அமைப்புகள் ஸ்மார்ட் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டதால் பெரிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளன. ஸ்மார்ட் டோர் பெல்ஸ்(doorbells), கேமராக்கள் மற்றும் பூட்டுகள் ஆகியவை வீட்டு உரிமையாளர்களை தொலைவிலிருந்து தங்கள் வீட்டிற்கு வரும் பலரின் அணுகலைக் கண்காணிக்கவும், தேவைப்பட்டால் அதற்கேற்ப கட்டுப்படுத்தவும் அனுமதிக்கின்றன. அதற்கேற்ற பாதுகாப்பையும் மேம்படுத்துகின்றன. குளிர்சாதனப் பெட்டிகள், வாஷிங் மெஷின்கள் மற்றும் ஓவன்கள் போன்றவை ஸ்மார்ட் சாதனங்களோடு இணையத்துடன்(Via Internet) இணைக்கப்பட்டு, அறிவிப்புகள்(Notifications), ரிமோட் கண்ட்ரோல்(எங்கிருந்தாலும் கட்டுப்படுத்தலாம்) மூலம் நம் தினசரி பணிகளை சுலபமாக்குகின்றன .
நமக்கு வரும் நன்மைகள்:
ஒரு வீட்டில் எல்லாவற்றையும் ஸ்மார்ட்டாக மாற்றுவதால் வரும் நன்மைகளோ ஏராளம். இவை பெரும்பாலும் ஒரே ஆப் அல்லது குரல் கட்டளைகள் மூலம் பல்வேறு சாதனங்களை எளிதாகக் கட்டுப்படுத்த அனுமதிக்கின்றன. நம் வேலை பளுவை குறைக்கின்றன மேம்படுத்தப்பட்ட இதன் பாதுகாப்பு அம்சங்கள் தேவையற்ற, பாதுகாப்பற்ற ஊடுருவல்களிலிருந்து நம் வீட்டை பாதுகாக்கின்றன, ஆற்றல் திறனையும் மேம்படுத்த முடிகிறது. இறுதியில் சுற்றுச்சூழலுக்கும் ஒரு வித பங்களிப்பை நம்மால் செய்ய முடியும்.
தேவையான பராமரிப்புகள்:
ஸ்மார்ட் ஹோம் அமைப்புகளின் தடையற்ற செயல்பாட்டை உறுதிப்படுத்த, வழக்கமான பராமரிப்பு அவசியம். முக்கியமாக சாதனங்களைப் பாதுகாப்பாகவும், சிறப்பாகச் செயல்படவும் மென்பொருளைப் தேவையான நேரங்களில் புதுப்பித்து(Software update) கொண்டிருக்க வேண்டும். இதனால் சாதனங்கள் சரியாகத் செயல்படுவதை உறுதி செய்ய முடியும்.
சாதனங்களின் இணைப்பை கிடைக்கும் நேரங்களில் சரிபார்க்க வேண்டும் மற்றும் அதில் ஏதேனும் பிழைகள் அல்லது இணைப்புச் சிக்கல்களைச் சரிசெய்ய எப்போதாவது கணினிகளை மீட்டமைத்தல்(resetting systems) போன்றவற்றை தவறாமல் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு நாளும் புதுப்புது கண்டுபிடிப்புகள் வருவதால் ஸ்மார்ட் ஹோம் சார்ந்த தொழில்நுட்பத்தில் சமீபத்திய முன்னேற்றங்கள்(Latest updates) பற்றி தொடர்ந்து தெரிந்து கொள்வதும் முக்கியம்.
எனவே, ஸ்மார்ட் டெக்னாலஜியை வீடுகளில் ஒருங்கிணைப்பதன் மூலம், மிகவும் திறமையான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கையை உருவாக்க முடியும். இது போன்ற வசதிகள் ஒரு விதத்தில் நம் மன அமைதியையும் அதிகரிப்பதால் தேவைப்படும் நேரங்களில் இது போல் வசதிகளை நம் வீடுகளில் உருவாக்கி அதன் பலன்களை பெறுவோம். A.N. ராகுல்