If this is the case after marriage then there will be no problem https://formacao.cancaonova.com
வீடு / குடும்பம்

திருமணத்திற்குப் பிறகு இப்படி இருந்தால் பிரச்னையே வராது!

பொ.பாலாஜிகணேஷ்

ண், பெண் இருபாலருக்குமே வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுவது என்றால் அது திருமணத்திற்கு பின்புதான். திருமண வாழ்க்கையில் நாம் அனைவரும் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான உறவை விரும்புகிறோம். ஆனால், அனைத்துத் திருமண உறவும் மகிழ்ச்சியாக அமைவதில்லை. ஒரு திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய கணவன் - மனைவி இடையேயான பிணைப்பு மிகவும் முக்கியம்.

ஏனென்றால், திருமணத்திற்குப் பிறகு தம்பதிகள் ஒருவருக்கொருவர் தனது துணைக்காக நேரத்தை ஒன்றாக செலவிடுகிறார்கள். அதுமட்டுமல்ல, எல்லா சூழ்நிலையிலும் ஒன்றாக இருப்பதால் இவர்களுக்கு இடையிலான அன்பு அதிகரித்து வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமண உறவில் ஏற்படும் சிறிய கவனக்குறைவு அல்லது தவறு உங்கள் உறவை முழுமையாக பாதிக்கலாம்.

எனவே, ஆரம்பத்திலிருந்தே ஒருவர் தங்கள் உறவின் அடித்தளத்தை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். திருமணத்திற்குப் பின் கணவன் - மனைவி உறவு மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் இருக்க சில ஆலோசனைகளை இந்தப் பதிவில் காணலாம்.

ஒருவரை ஒருவர் மதித்தல்:  ஒரு உறவில் எப்படி அன்பு இருக்க வேண்டுமோ, அதேபோல் பரஸ்பரம் மரியாதை இருக்க வேண்டியதும் முக்கியம். உங்கள் உறவில் ஏற்படும் தவறான புரிதலை தவிர்க்க, உங்கள் துணையின் வேலை, குடும்பம் மற்றும் உணர்வுகளை நீங்கள் மதிக்க வேண்டும்.

ஒருவரை ஒருவர் நம்புங்கள்: எல்லா உறவுகளின் அடித்தளமும் நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டதுதான். எனவே, ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைக்க வேண்டியது மிகவும் முக்கியம். உங்கள் உறவை வலுவாக வைத்திருக்க, சின்னச் சின்ன விஷயங்களுக்கு உங்கள் துணையை சந்தேகப்படுவதை தவிர்க்கவும். உங்களின் சந்தேகத்தை நேரடியாகப் பேசி சரிசெய்யவும்.

கோபமாகப் பேசுவதற்கு முன்பு சற்று யோசியுங்கள்:  அனைத்து உறவிலும் சிறு சிறு சண்டைகளும் சச்சரவுகளும் நடப்பது இயல்புதான். ஆனால், அந்தத் தருணத்தில் உங்கள் துணையிடம் வார்த்தைகளை விடுவதற்கு முன் நன்றாக யோசிக்கவும். நீங்கள் அவர் மனது புண்படும்படி பேசுவது உங்கள் உறவில் விரிசலை ஏற்படுத்தும். பல சமயங்களில், நாம் கோபமாக இருக்கும்போது பேசும் விஷயங்கள் வெறுப்பை அதிகரிக்கும்.

மனதில் பட்டதை அப்போதே பேசி தீர்க்கவும்: எல்லா உறவிலும் நடக்கும் இயல்பான தவறுகளில் ஒன்று தவறாகப் புரிந்து கொள்ளுதல் மற்றும் கம்யூனிகேஷன் கேப். ஆனால், இது காலப்போக்கில் பெரிய பிரச்னைக்கு வழிவகுக்கும். எனவே, உங்கள் துணையிடம் உங்கள் உணர்ச்சிகளை மறைக்காதீர்கள். நீங்கள் நினைப்பதை அப்போதே பொறுமையாக பேசித் தீர்ப்பது நல்லது.

எல்லா விஷயத்திற்கும் பெரிய தவறாக எண்ணுதல்:  தற்போதைய காலத்தில் அனைவரின் வாழ்க்கையும் பிஸியாகவும், பரபரப்பாகவும் மாறிவிட்டது. இருப்பினும் தனது துணைக்கு தேவையான நேரத்தை ஒதுக்குவது மிகவும் அவசியம். இதனால் உங்கள் இருவருக்கும் இடையிலான அன்பு அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்வீர்கள். அதேசமயம், சிறிய சிறிய தவறுகளை பொருட்படுத்த வேண்டாம். எல்லா தருணத்திலும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருங்கள்!

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT