Happy couple 
வீடு / குடும்பம்

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் அறிவோம்!

பொ.பாலாஜிகணேஷ்

ம்மில் பலருக்கும் மனநிறைவு என்பது துளி கூட இல்லை. எப்பொழுதுமே எல்லா விஷயத்திற்கும், ‘இல்லை இல்லை’ என்றே சொல்லி பழக்கப்பட்டு விட்டார்கள். பொருளாதார ரீதியாக பார்த்தால் 90 சதவிகித திருப்தி அடைவது இல்லை. இதுதான் நிஜம். எவ்வளவு வந்தாலும், ‘போதவில்லை, என்னிடம் இல்லை’ என்ற பேச்சு மேலோங்கி நிற்கும்.

சிலரிடம் தேவைக்கு அதிகமாகப் பணம் இருந்தும், மனக்கவலை, மன இறுக்கம், மன உளைச்சலுடன் இருப்பார்கள். இவர்கள் மனதளவில் எதைக் கண்டும் திருப்தியடைய மாட்டார்கள். ஆனால், மகிழ்ச்சி என்பது தேடித்தேடி சேர்க்கும் பொருட்களில் இல்லை. தேடிய செல்வம் அளவுக்கு அதிகமாக சேர்ந்தாலும் இறுதிக் காலத்தில் உடன் வராது.

வாழ்க்கையில் திருப்தி இல்லாதவர்கள் முக்கியமான மகிழ்ச்சிகளை இழந்து விடுகிறார்கள். பேராசைக்கு முன்னுரை அளித்தால் அதுவே பேரழிவுக்கு முடிவுரையாகும்.

ஒரு ஊரில் ஒருவன் நன்கு வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தான். அப்போது அந்த ஊரில் புதையல் இருக்கும் இடத்தைப் பற்றிய வதந்தி பரவிக் கொண்டிருந்தது. அந்த ஊரில் உள்ளவர்கள், பாலைவனத்தில் நின்று தொலைவில் இருக்கும் மலையைப் பார்த்து நிற்கும்போது, நமது நிழல் விழும் இடத்தில் புதையல் இருப்பதாகப் பேசிக் கொண்டனர்.

இதனைக் கேட்ட அவன், உடனே வியாபாரத்தை விட்டு, புதையலைத் தேட பாலைவனத்திற்கு மறுநாள் காலையிலேயே சென்றான். தொலைவில் இருக்கும் மலையைப் பார்த்து நின்று, அவன் நிழல் விழுந்த இடத்தில் குழியைத் தோண்ட ஆரம்பித்தான். அதுவரை வியாபாரத்தின் மீது முழுக் கவனம் செலுத்தியவன், இப்போது புதையல் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தான்.

புதையலை பெறுவதற்காக காலையில் இருந்து நிழல் விழுந்த இடத்தில் தோண்டிக் கொண்டு இருந்தவனது நிழல், மாலையில் அவனைத் தாண்டி நீண்ட தொலைவு சென்று விட்டது. அதனால் ஏமாற்றம் அடைந்த அவன் அழுது புலம்பிக் கொண்டு இருந்தான்.

அப்போது அந்த வழியாக வந்த ஜென் துறவி ஒருவர், அவனது செயலைக் கண்டு சிரித்துக் கொண்டே அவனைப் பார்த்தார். பின் அவனிடம், ‘உன்னிடம் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வதை விட்டு, இல்லாத ஒன்றிற்கு ஆசைப்பட்டால் துயரம்தான் மிஞ்சும்" என்றார்.

பொருளாதாரம் மட்டுமே ஒரு மனிதனின் வாழ்வை நிறைவு செய்யாது. குடிசையில் வாழ்ந்து கூழைக் குடிப்பவர்களும் மனதளவில் மகிழ்வுடன் வாழ்கிறார்கள். அவர்கள் பொருளாதார நிறைவைப் பொருட்படுத்தாது. இருப்பதைக் கொண்டு மனநிறைவு காண்கிறார்கள். இதுவே வாழ்வு எனும் சூட்சும பூட்டின் திறவுகோல். இல்லாத ஒன்றுக்காக ஆசைப்பட்டு இன்பமான வாழ்க்கையை தொலைத்து விட வேண்டாம். இருப்பதை வைத்து மகிழ்ச்சியுடன் வாழக் கற்றுக் கொள்வோம்.

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

நடிகர் முரளி அம்மாவுக்கு இப்படி ஒரு மரணமா? கனவில் கூட யாருக்கும் இப்படி நடக்கக்கூடாதப்பா!

மழைக்காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள அருந்த வேண்டிய 4 பானங்கள்!

SCROLL FOR NEXT