Do you know what is Love bombing? Image Credits: HealthCentral
வீடு / குடும்பம்

காதலர்களே, Love bombing என்றால் என்னவென்று தெரியுமா?

நான்சி மலர்

காதலில் எப்போதும் புரிதல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தல், இருவருக்கு நடுவிலே ஆரோக்கியமான உறவை உருவாக்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவது காதலில் மிகவும் அவசியமாகும். ஆனால், தற்போது இருக்கும் காதலில் Love bombing போன்று கட்டுப்படுத்தும் Manipulative யுக்திகளும் நிகழ்கின்றன. இப்படி ஒன்று இருக்கிறது என்பதே பல பேருக்குத் தெரிவதில்லை. அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

Love bombing என்றால் காதலர்களுக்குள் நடக்கும் எமோஷனலாக ஒருவரை மற்றவர் Manipulate செய்யும் யுக்தியாகும். இதில் Love bombingஐ பயன்படுத்துபவர் இன்னொரு நபருக்கு அளவுக்கு அதிகமான அன்பைத் தருவார், அதிகமாகப் புகழ்வார், அதிகமான காதல், கவனம், பரிசுகள் என்று எல்லாவற்றையுமே இன்னொரு நபருக்கு அளவிற்கு அதிகமாகவே தருவார்.

காதலின் ஆரம்பக் காலத்தில் இது இன்பமாகவேயிருக்கும். தன்னுடைய காதலர் தனக்கு அதிக கவனம் கொடுப்பதும், எந்நேரமும் தன்னுடனேயே இருக்க நினைப்பதும், காதல் வசனம் பேசுவதும் போன்ற விஷயங்கள் நடக்கும். இதனால் Love bombing செய்யும் நபரிடம் இன்னொருவர் எமோஷனலாக சார்ந்து இருக்கும் நிலை வந்ததும் Love bombing செய்யும் நபர் விலகிச் செல்ல ஆரம்பிப்பார்.

ஒருகட்டத்தில் இது அனைத்துமே மாறிவிடும். பேசுவது குறைந்துவிடும், கவனிப்பு குறைந்துவிடும். உங்களுடைய பார்ட்னர் உங்களைக் கட்டுப்படுத்தத் தொடங்குவார். காதல் பேச்சு மாறி கோபம், வெறுப்பு வரத் தொடங்கும். உங்களிடமிருந்து விலகிப் போகத் தொடங்குவார்கள். இதை காதலர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை. நண்பர்கள், நெருங்கிய சொந்தங்கள் என்று எல்லோருமே இந்த யுக்தியை பயன்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது.

இதனால் இன்னொரு நபர் எமோஷனலாக பாதிக்கப்படுவார், Abuse, control போன்றவை அந்த உறவில் நிகழும். இத்தனை நாட்களாக You are my soulmate, You complete me போன்ற வசனங்களைக் கேட்டுவிட்டு திடீரென்று அனைத்து காதலும் குறையும்போது இன்னொரு நபர் எமோஷனலாக பாதிக்கப்படுவார். எனவே, Love bombing ஆரோக்கியமற்ற டாக்ஸிக் உறவை உருவாக்கக்கூடியதாகும்.

Love bombingல் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள், உங்களுடைய உள்ளுணர்வு சொல்வதை கேளுங்கள், அதிகமான Red flags இருக்கும் உறவிலிருந்து விலகுவது சிறந்தது, உங்களுடைய Boundariesஐ சரியாக அமைத்துக் கொள்ளுங்கள், Love bombing செய்யும் நபரிடமிருந்து விலகியிருப்பது நல்லது, No சொல்வதற்குக் கற்றுக்கொள்ளுங்கள்.

உண்மையான காதலில் துய்மையான அன்பும், மற்றவரின் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பண்பும் இருக்கும். அதைப் புரிந்துக்கொண்டு காதல் செய்யும்போது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT