ஒருவர் ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றி எந்நேரமும் யோசித்துக் கொண்டேயிருப்பது அவரை அதிகமாக நெகட்டிவ் பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது. இதனால் டிப்ரெஷன், பதற்றம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இப்படி Over thinking செய்வதை நிறுத்துவதற்கு சிறந்த வழிமுறைகள் இருக்கின்றன. அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
அதிகமாக Over thinking செய்வது நம்மை முக்கியமான முடிவுகளை எடுக்க விடாமல் தடுக்கிறது. தற்போது இருக்கும் நிகழ்கால மகிழ்ச்சிகளை அனுபவிக்க முடியாமல் போகிறது. அதிகமாக யோசிப்பதால் உடலில் உள்ள சக்திகள் உறிஞ்சப்படுகின்றன.
எந்நேரமும் தேவையில்லாத விஷயத்தைப் பற்றி யோசித்து மனவருத்தம் அடைவது, கெட்ட எண்ணங்களை உருவாக்கிக் கொள்ளுதல் போன்ற பிரச்னைகளைத் தடுக்க தினமும் ஒரு 20 நிமிடம் நீங்கள் யோசிக்க வேண்டியதற்கான நேரத்தை ஒதுக்குங்கள்.
அந்த நேரத்தில் நீங்கள் என்ன யோசிக்கப் போகிறீர்கள்? என்ன வருத்தப்பட போகிறீர்களோ? அவை அனைத்தையும் செய்து முடித்துவிடுங்கள். யோசிப்பதற்காக ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்ததும் உங்கள் வேலையில் சுறுசுறுப்பாக கவனம் செலுத்த ஆரம்பியுங்கள்.
இந்த 20 நிமிடம் முடிந்து வேலை செய்யும் சமயங்களில் Over thinking thoughts வந்தால், ‘அதை அடுத்த 20 நிமிடம் ஒதுக்கும்பொழுது சேர்த்து யோசித்துக் கொள்கிறேன்’ என்று அந்த எண்ணங்களை தடுத்துக்கொண்டே வந்தால் தேவையில்லாத வீண் யோசனைகள், எண்ணங்களை புறக்கணிக்க முடியும்.
அதிகமாக யோசிக்கும் Over thinking பிரச்னையை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டே வர முடியும். எனவே, உங்களுடைய எண்ணங்களை அலைபாய விடாமல் சரியாக கட்டுக்குள் வைத்துக்கொள்ள இந்த ஒரு முறையை முயற்சி செய்துப் பாருங்கள்.
மேலும், யோகா, தியானம், உடற்பயிற்சி போன்றவற்றை செய்வதால் வீண் சிந்தனைகள் வராது. வாழ்க்கையை கன்ட்ரோல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை நிறுத்திக்கொள்ளுங்கள். சில விஷயங்கள் கைமீறிப் போகும்போது அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.
சும்மாவே இருந்து நேரத்தை வீணாக்குவதும் Over thinking செய்ய ஒரு முக்கிய காரணமாகும். எனவே, யோசிப்பதற்கு நேரமே கொடுக்காமல் வேலையில் பிஸியாக இருங்கள். கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு நிகழ்காலத்தை மகிழ்ச்சியாக வாழ பழகிக்கொள்ளுங்கள்.