Happy seniors 
வீடு / குடும்பம்

நீண்ட ஆயுளுக்கான 9 வாழ்க்கை ரகசியங்கள்!

ம.வசந்தி

ருவரை நாம் வாழ்த்தும்போது ‘நீடூழி வாழ்க’ என்றுதான் வாழ்த்துகிறோம். இந்த நீண்ட ஆயுளுக்கு மரபணுக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்றாலும், வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களும் முக்கியமானவை. மரபணுக்களைத் தவிர, நீண்ட ஆயுளுக்கான 9 வாழ்க்கை ரகசியங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. சரிவிகித டயட்: தினமும் சாப்பிடும் மூன்று வேளை உணவையும் சரியான விகிதத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

2. புகை, குடிப் பழக்கத்துக்கு தடை: புகைப் பழக்கமும் குடிப் பழக்கமும் இதய நோய் மற்றும் பக்கவாதத்தை ஏற்படுத்தி மரண அபாயத்தை அதிகரிக்கிறது. ஆதலால் இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

3. உடல் எடையை பராமரித்தல்: எவ்வளவு வயதானாலும் நம் உடலுக்கு ஏற்ற எடையை பராமரிப்பதில் கொஞ்சமும் சமரசம் செய்து கொள்ளக்கூடாது.

4. தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்: தினமும் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம் . மேலும், ஒவ்வொரு நாள் காலையிலும் 80 சிட் - அப்களை செய்ய வேண்டும்.

5. மூளைக்கு வேலை கொடுக்கவும்: மூளைக்கு வேலை கொடுக்கும் வித்தியாசங்களைக் கண்டுபிடிப்பது, புதிர் போட்டிகள் போன்றவற்றை கண்டுபிடித்து மூளையை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

6. சமூக ரீதியாக இணைந்திருங்கள்: வாரந்தோறும் மதிய உணவு மற்றும் இரவு உணவை நண்பர்களோடும், உறவினர்களோடும் குடும்பத்தோடும் அமர்ந்து உண்ணுங்கள். அவர்களுடன் அடிக்கடி தொடர்பிலேயே இருங்கள்.

7. மகிழ்ச்சியை தேடுங்கள்: நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதைச் செய்யுங்கள். உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்படியான விஷயங்களை தயங்காமல் செய்யுங்கள்.

8. உங்களை கவனித்துக் கொள்ளுங்கள்: உங்கள் தலைமுடி மற்றும் நகங்களை அழகுபடுத்துவதன் மூலம் அழகாக இருப்பதையும் உங்களுடைய தோற்றத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

9. வயதாவதைப் பற்றி நேர்மறையாக சிந்தியுங்கள்: வயதாவதைப் பற்றிய நேர்மறையான உணர்வுகளோடு, அதாவது வயது என்பது எண் என்ற நினைப்பிலேயே வாழ்ந்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துங்கள்.

முதுமையிலும் மேற்கண்ட ரகசியங்களை கடைபிடித்து இளமையோடும் மகிழ்ச்சியோடும் வாழுங்கள்.

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT