வீடு / குடும்பம்

தையல் மிஷினை பராமரிக்க எளிய ஆலோசனைகள் ஏழு!

கவிதா பாலாஜிகணேஷ்

ற்காலத்தில் அனைவர் வீடுகளிலும் தையல் மிஷினை பார்க்க முடிகிறது. வீட்டின் சிறு சிறு தேவைக்களுக்காக பெண்கள் வீட்டிலேயே தையல் மிஷின் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். தையல் மிஷினை சரியாகப் பராமரிக்காவிட்டால் அது விரைவில் பழுதாகி விடும். தையல் மிஷினை பராமரிக்கும் எளிய ஏழு ஆலோசனைகள் குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

1. தினசரி எண்ணெய் விடுவது அவசியம்: துணியை தைப்பதற்கு முன்பு மிஷினின் ஊசி ஷட்டில் பாயின்ட், பாபின், நூல் போடும் வட்டு போன்ற பாகங்களில் எண்ணெய் விட வேண்டியது அவசியம்.

2. பெடல்களைச் சுத்தம் செய்யுங்கள்: காலால் இயக்கும் மிஷின்களை வைத்திருந்தால் பெடல்களை தினசரி சுத்தம் செய்ய மறவாதீர்கள். அதுமட்டுமின்றி, பெடலில் இருக்கும் திருகு மற்றும் முடிச்சில் எண்ணெய் விடவும்.

3. பவர் மிஷினை பராமரிக்க: பவர் மிஷின் என சொல்லப்படும் எலக்ட்ரிக்கல் தையல் மிஷினை சுத்தம் செய்ய, ஒரு கப் தண்ணீரில் பேக்கிங் சோடாவை கலந்துக்கொண்டு அதில் காட்டன் துணியை நனைத்து மிஷினை சுத்தம் செய்யவும். பின்பு பாபின் நூல் போடும் வட்டு ஆகியவற்றில் எண்ணெய் விடவும்.

4. ஊசி தேர்ந்தெடுப்பு: விதவிதமான ஆடைகளைத் தைக்க வெவ்வேறு ஊசிகள் உள்ளன. இந்த விஷயத்தில் துணிகளுக்கு ஏற்ப ஊசியைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம்.

5. இரும்பு தையல் மிஷின்: இரும்பு தையல் மிஷினில் ஏதேனும் துரு இருந்தால், பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தி அதை எளிதாக சுத்தம் செய்து அப்புறப்படுத்த வேண்டியது அவசியம்.

6. தைக்கும் முறை: மிஷினில் துணியை தைக்கும்போது துணியை கடினமாக இழுக்க வேண்டாம். அவ்வாறு செய்வதால் துணி கிழியலாம் அல்லது மிஷினுக்கு சேதம் ஏற்படலாம்.

7. தைக்கும் துணியில் கவனம்: தடிமனான துணிகளைத் தைப்பதால் துணிகள் பலமுறை மிஷினில் மாட்டிக்கொண்டு மிஷின் பழுதடையும். இதை மனதில் வைத்து மிஷினின் சக்திக்கேற்றவாறு துணிகளைத் தைப்பது அவசியம்.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT