உடல் எடையை குறைக்க முழுமனதுடன் உாிய வேலைகளை செய்கிற நபா்கள், கீழ்க்காணும் ரகசியத்தை மறக்கக் கூடாது.
1. தண்ணீா் நிறைய அருந்துதல் அவசியம், தண்ணீா் அருந்துவதால், கழிவுகள் அகற்றப்பட்டு சுவாசமும் சுத்தப்படுத்தப்படுகிறது.
2. உணவை மெதுவாக, நிதானமாக, உண்ணவும். விரைவாக உண்ணும் பழக்கம் கொண்டவா்கள் உடல் எடை அதிகமாக உள்ளவா்களாக, இருப்பாா்கள்.
3. இனிப்பு சுவை கலந்த குளிா்பானங்களைத் தவிா்த்து, சோடா அருந்துவது நலம்.
4. காபி பானங்களில் செயற்கை இனிப்பூட்டிகளை சோ்ப்பது நலம்.
5. காரட், காலிபிளவா், தக்காளி, வெள்ளாிக்காய், போிக்காய், சோடா, மோா் சோ்த்துக்கொள்வது நல்லது.
6. உணவுக்கட்டுப்பாட்டில் இருக்கிறபோது, காப்பி அருந்துவதை குறைப்பது நன்மையே!
7. வெண்ணைய் எடுக்கப்பட்ட பாலையே, அருந்துங்கள்.
8. காய்கறிகள், கீரை வகைகள், அதிகம் சோ்த்துக்கொள்வது சிறப்பு.
9. திணறத்திணற சாப்பிடவேண்டாம். இவைகளை கடைபிடிப்பது உடல் எடையைக் குறைக்கும்.