some simple tips to lose weight effortlessly https://tamil.boldsky.com
வீடு / குடும்பம்

சிரமமின்றி உடல் எடையை குறைக்க சில எளிய ஆலோசனைகள்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

யட்டில் இருப்பவர்கள் கூட அடிக்கடி அதிர்ச்சியாகும் விஷயம், ‘அடடா இந்த மாசம் ஒரு கிலோ கூடிடுச்சே, என்ன செய்யலாம்?’ என கவலை கொள்வர். எந்த விதமான கஷ்டமும் இன்றி உடல் எடையைக் குறைக்க சில எளிய ஆலோசனைகள் இந்தப் பதிவில் காண்போம்.

மனக்கட்டுப்பாடு அவசியம்: உடல் எடையைக் குறைப்பதற்கு மனக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். டிவி, மொபைல் பார்த்துக்கொண்டு சாப்பிடும்போது அதன் அளவு தெரியாமல் போய்விடும். எனவே, சாப்பிடும்போது உணவில் மட்டும் கவனம் செலுத்துவது அவசியம்.

உணவுக் கட்டுப்பாடு: இனிப்புகள், எண்ணெயில் பொரித்த பண்டங்கள் அதிகம் சாப்பிடாமல் ஒரு நாளைக்கு இரண்டு துண்டுகள் என அளவாக சாப்பிடலாம். சாப்பிட்டதும் சூடான வெந்நீர் அரை கப் அருந்துவதுடன், எக்ஸ்ட்ராவாக அன்று 15 நிமிடங்கள் வாக்கிங் செல்வது நல்லது.

ஊட்டச்சத்து நிரம்பிய உணவுகளை சாப்பிடுதல்: குறைந்த கலோரி மற்றும் அதிக ஊட்டச்சத்துக்கள் அடங்கிய உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். காலை உணவை தவிர்ப்பதால் உடல் முக்கிய ஊட்டச்சத்துக்களை இழக்க நேரிடும். சோர்வு, தலைசுற்றல், குறைந்த இரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படலாம். எனவே, காலை உணவை தவிர்ப்பது நல்லதல்ல.

எளிமையான இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளுதல்: ‘ஒரே வாரத்தில் 10 கிலோ எடையை குறைக்கிறேன் பார்’ என தீவிரமாக முயற்சிப்பது ஆபத்தானது. நம்மால் முடிந்த இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதை அடைய முயற்சிக்க வேண்டும்.

அதிக புரத உணவுகளை எடுத்துக்கொள்வது: இ‌‌து நீண்ட நேரத்திற்கு உங்கள் பசியை கட்டுப்படுத்த உதவும்.

மன அழுத்தத்தை நிர்வகித்தல்: மன அழுத்தம் கார்டிசோல் என்ற ஹார்மோனை தூண்டும். இது உங்கள் பசியை அதிகரித்து அதிக அளவில் உண்ண வைக்கும். மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உடற்பயிற்சி, தியானம், யோகா கடைபிடிக்க சிறந்த பலனைப் பெறலாம்.

பேக்கிங் உணவுகளைத் தவிர்த்தல்: கண்டிப்பாக டின்களில் அடைக்கப்பட்ட கூல்ட்ரிங்ஸ், டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுகள் மற்றும் பேக்கிங் உணவுகளை தவிர்க்க வேண்டும். இவை தவிர, இன்னும் சில எளிய ஆலோசனைகளையும் பார்க்கலாம்.

* சாப்பிடுவதற்கு முன்பு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர் அல்லது சூப் எடுத்துக் கொண்டால் அதிக உணவு உட்கொள்வதை தவிர்க்க முடியும்.

* நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை எடுத்துக்கொள்வது நல்லது. இதனால் சீக்கிரம் வயிறு நிறைந்த உணர்வு ஏற்பட்டு அதிகம் சாப்பிட தோன்றாது.

* அடிக்கடி வெதுவெதுப்பான (warm water) தண்ணீர் அருந்தலாம். ஒரே நேரத்தில் அதிகம் நீர் பருகுவதைத் தவிர்த்து சீரான இடைவெளியில் தண்ணீர் குடிப்பது நல்ல பலனைத் தரும்.

* எந்த விருந்திற்கு பிறகும் உணவு பழக்கத்தை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வருவது நல்லது. உடற்பயிற்சிகளையும், உணவு கட்டுப்பாடுகளையும் இன்னும் கெடுபிடியாக மேற்கொள்ள வேண்டும்.

*உடல் எடையை குறைக்க சரியான தூக்கம் மிகவும் முக்கியம். ஏழு மணி நேர தூக்கம் என்பது அவசியம். இது நம் உடல் மற்றும் மனதை சோர்வில்லாமல் பிரஷ்ஷாக வைத்துக்கொள்ள உதவும்.

* இஞ்சி, சுக்கு, தனியா, சீரகம் இவையெல்லாம் உடல் எடையை குறைக்க உதவும். அவற்றை தண்ணீரில் தட்டிப்போட்டு கொதிக்க விட்டு காலை, மாலை என வெறும் வயிற்றில் அரை கப் குடிக்க நல்ல பலன் கிடைக்கும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT