Some easy ways to reduce anger 
வீடு / குடும்பம்

பொங்கி வரும் கோபத்தை புஸ்வானமாக்க சில யோசனைகள்!

பொ.பாலாஜிகணேஷ்

ணவன், மனைவி சண்டை என்பது குடும்பத்தில் இயல்பான ஒன்றுதான். இது வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது போல் எல்லோர் வீட்டிலும் நடக்கும் விஷயம். சரி சண்டை நடந்து முடிந்து விட்டது. எப்படி சமாதானம் ஆக்குவது? அதுதானே பெரிய சிக்கல்’ என்று நீங்கள் நினைப்பீர்கள் இல்லையா? சமாதானம் அடைவதில் ஆண்கள் முதல் இடத்தில் இருக்கிறார்கள். ஆண்களை சுலபமாக சமாதானப்படுத்தி விடலாம். ஆனால், பெண்களை சமாதானப்படுத்துவது என்பது பல கட்டங்களாகச் சென்று பல சவால்களை நாம் சமாளிக்க வேண்டும். அதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

அமைதி: கோபத்தில் இருக்கும் உங்கள் துணையை சமாதானம் செய்ய நினைப்பது தவறான செயல். கோபத்தில் இருக்கும்போது அவர்கள் உங்கள் பேச்சை கேட்காமல் போகலாம். எனவே, அவர்கள் கோபப்படும்போது எதுவும் பேசாமல் அமைதியாக இருங்கள். அவர்களாகவே சமாதானமடைந்து அமைதி நிலைக்குத் திரும்புவார்கள். அதுவரை நீங்கள் பொறுமை காப்பதே சிறந்தது.

வார்த்தைகளில் கவனம்: எதற்கு எடுத்தாலும் கோபப்படும் துணை அமைந்தால் அவர்களுடன் பேசும்போது வார்த்தைகள் பயன்பாட்டில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் வார்த்தை, உங்கள் பேச்சு அவர்களை கோபத்திற்கு தூண்டலாம். கோபமாக இருக்கும்போது வார்த்தை பிரயோகிப்பில் கவனம் அவசியம். இல்லையெனில் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோல் ஆகிவிடும்.

குணாதிசயங்களை சுய பரிசோதனை செய்யுங்கள்: உங்கள் மீது அல்லது நீங்கள் செய்யும் செயல்களில் எது உங்கள் துணைக்கு அதிக கோபத்தை தூண்டுகிறது என்பதை ஆராயுங்கள். பின் அந்த செயலை தவிர்க்கப் பாருங்கள் அல்லது அடுத்த முறை துணை கோபப்படாதவாறு அந்த செயலைச் செய்யுங்கள். தவறு இருப்பின் உங்களை மாற்றிக்கொள்ள முயற்சிப்பது பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

கோபத்தின் பின்னணியை ஆராயுங்கள்: நீங்கள் சரியானவற்றை செய்தாலும் உங்கள் துணை கோபப்படுகிறார் அல்லது எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறார் எனில், அதை உளவியல் ரீதியில் அணுகுங்கள். அதாவது அவரின் கோபத்திற்குப் பின் ஆழமான வலி, சோகம், பயம் இப்படி ஏதேனும் உள்ளதா என அமைதி நிலையில் இருக்கும்போது அவருடன் உரையாடுங்கள். மனம் விட்டுப் பேசுவதால் கோபத்திற்குத் தீர்வு கிடைக்கலாம்.

இனிய பேச்சு அவசியம்: ‘கோபக்காரனுக்கு புத்தி மட்டு’ என்பார்கள். அப்படி உங்கள் துணை கோபத்தில் இருக்கும்போது அறிவு வேலை செய்யாது. எனவே, அவர் அமைதியாக இருக்கும்போது பகுத்தறிவுடன் இனிமையாக சில விவாதங்களை மேற்கொள்வது கோபத்தை குறைக்க உதவும்.

2030ல் இந்தியாவே மாறப்போகுது… டேட்டா பயன்பாடு பன்மடங்கு உயரும்! 

ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியமான 5G உணவுகள்!

உதடுகளுக்கு தேங்காய் எண்ணெய் தடவுவதால் இவ்வளவு நன்மைகளா? 

கடின சூழல்களை கடந்து வெற்றி பெற்ற தமிழ் சினிமாவின் கனவு நாயகன்!

3 வகையான திக்குவாய் பிரச்சனை - குணப்படுத்தும் முறைகள்!

SCROLL FOR NEXT