நன்றி உணர்வு https://www.zendesk.com
வீடு / குடும்பம்

மகிழ்ச்சியின் பிறப்பிடமாக விளங்கும் நன்றி உணர்வின் மேன்மைகள்!

எஸ்.விஜயலட்சுமி

ந்த வாழ்க்கை நமக்கு அளித்த ஏராளமான நன்மைகளை நாம் பல சமயங்களில் நினைத்துப் பார்ப்பதில்லை. ஏதேனும் ஒரு சிறிய விஷயத்திற்கு மனம் கலங்கிப் போய் மகிழ்ச்சியை தொலைத்து விட்டு துன்பத்தைத் தழுவுகிறோம். அந்த மாதிரி சமயங்களில் ஒரே ஒரு நிமிடம் மட்டும் செலவழித்து வாழ்க்கை நமக்கு அளித்த நன்மைகளை எல்லாம் பட்டியல் போட்டால் துன்பமும் மனச்சோர்வும் நம்மை விட்டுப் பறந்து விடும். நன்றி என்ற ஒற்றைச் சொல் அத்தனை மகத்துவம் வாய்ந்தது. அதன் சிறப்புகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

நன்றி சொல்வதன் நன்மைகள்:

மகிழ்ச்சியின் பிறப்பிடம்: பொதுவாக, பிறர் நமக்கு செய்த நன்மைகளுக்காக நன்றி என்று மனமுவந்து சொல்லும்போது நமது மனமும், உதவியவரின் மனமும் மகிழும். மகிழ்ச்சியின் பிறப்பிடமாக நன்றி உணர்வு இருக்கிறது. நன்றி உணர்வை கடைபிடிப்பது மனச்சோர்வு மற்றும் பதற்றத்தின் அறிகுறிகளை கணிசமாகக் குறைக்கிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன. வாழ்க்கையின் நல்ல விஷயங்களை தவறாமல் அங்கீகரிப்பதும் பாராட்டுவதும் அதிக நம்பிக்கையான மற்றும் மகிழ்ச்சியான மனநிலைக்கு வழிவகுக்கும். நன்றி உணர்வை கடைப்பிடிப்பவர்கள் அதிர்ச்சி அல்லது துன்பத்திலிருந்து விரைவாக மீண்டும் வருவார்கள்.

மேம்படுத்தப்பட்ட சமூகப் பிணைப்புகள்: நன்றியுணர்வை வெளிப்படுத்துவது பரஸ்பர பாராட்டு மற்றும் நேர்மறையான தொடர்புகளை வளர்க்க உதவும். பிறர் செய்த உதவியை அங்கீகரிக்கும் வழி நன்றியுணர்வை வெளிப்படுத்துவது. இதனால் உறவும் நட்பும் வளரும். இது இணக்கமான சமூக தொடர்புகளுக்கு வழிவகுக்கும்.

உடல், மனநிலை மேம்பாடு: இது மனநிலை மேம்பாட்டிற்கு மட்டுமா உதவுகிறது? நல்ல உடல் நலத்திற்கும் வழி வகுக்கிறது. நன்றியுள்ள மனநிலையானது மனதில் ஊடுருவும் எதிர்மறை எண்ணங்களை குறைக்கிறது. அதனால் மனதில் நிம்மதி எழுகிறது. நிம்மதியான சீரான தூக்கம் வருகிறது. நன்றியுள்ள நபர்கள் தவறாமல் உடற்பயிற்சி செய்து தங்கள் உடலையும் ஆரோக்கியமாக பார்த்துக்கொள்கிறார்கள்.

மரியாதையை உயர்த்தும்: நன்றி உள்ளவர் என்று அறிவிக்கும்போது அது அவரை நேர்மறையான சுய மதிப்பிற்கு வழிவகுக்கும். பிறரின் பிரியத்திற்கும் மரியாதைக்கும் ஆளாவோம்.

தினசரி வாழ்க்கையில் நன்றி உணர்வை பயிற்சி செய்வது எப்படி?

1. ஒவ்வொரு நாளும் காலையில் ஒரு நோட்டில் நன்றியுள்ள மூன்று விஷயங்களை பட்டியலிட வேண்டும். அது நல்ல உடல் நலமாக இருக்கலாம். நல்ல வேலையாக இருக்கலாம். நல்ல குடும்பம், நண்பர்களாக இருக்கலாம்.  நம் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய நபர்களுக்கு நன்றி சொல்லி மெசேஜ் அனுப்பலாம். இமெயில் செய்யலாம்.

2. நன்றி உணர்வை பாராட்டுகளாகவோ அல்லது கருணைச் செயல்களாகவோ தெரிவிக்கலாம்.

3. தினசரி சில நிமிடங்கள் ஒதுக்கி வாழ்க்கை தந்திருக்கும் நல்ல விஷயங்களை மனக்கண்ணில் பார்த்து அவற்றுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

4. நாம் தினசரி கடந்து செல்லும் எளிய மனிதர்களுக்கு நன்றி சொல்வது அவர்களது வாழ்வை அழகாக்கும். நமது மனதில் மகிழ்ச்சியை பூக்க வைக்கும். ஆட்டோ அல்லது டாக்ஸியில் செல்லும்போது டிரைவருக்கும், தினமும் வீட்டுக்கு பூ கொண்டு வருது தரும் பெண்மணி, வீட்டில் வேலை செய்பவர், அலுவலகத்தில் பணிபுரியும் செக்யூரிட்டி போன்றவர்களுக்கு நன்றி சொல்லிப் பாருங்கள். அவர்கள் முகம் ஸ்விட்ச் போட்டது போல் மலர்வதை. நமது மரியாதையும் அவர்கள் பார்வையில் உயரும்.

5. உண்ணும்போது அருமையான உணவு சமைத்ததற்காக மனைவிக்கு நன்றி சொல்லிப் பாருங்கள். வீட்டின் மகிழ்ச்சியை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு நன்றி சொல்லுங்கள்.

சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட நன்றி சொல்வதன் மூலம் நம்மைச் சுற்றிலும் ஒரு நேர்மறையான சூழலை உருவாக்க முடியும். திருப்தியும் மகிழ்ச்சியும் அதனுடன் சேர்ந்து தொடர்ந்து வரும். நல்ல  நிறைவான வாழ்க்கையை வாழ முடியும்.

சிறுகதை: களிமண் பிள்யைாரும் மூணு யூனிட் இரத்தமும்!

சருமத்தில் இந்த அறிகுறிகளா? ஜாக்கிரதை! 

சோஹா அலிகான் முகப் பளபளப்பிற்கு இந்த மூன்று உணவுகள்தான் காரணம்!

மதங்க முனிவர் காட்சி கொடுத்த திருநாங்கூர் மாதங்கீஸ்வரர்!

சிறுகதை: குடிகாரர்களின் குடும்பம்!

SCROLL FOR NEXT