To understand men First understand this 
வீடு / குடும்பம்

ஆண்களைப் புரிந்துகொள்ள முதலில் இதை புரிந்துக்கொள்ளுங்கள்!

க.பிரவீன்குமார்

* பெரும்பான்மையான ஆண்களுக்குப் பேசுவதைக் காட்டிலும் கேட்பதற்குத்தான் அதிகமாகப் பிடிக்கும்.

* அதிகமான ஆண்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டார்கள். அவை எப்படிப்பட்ட பெரும் பிரச்னையாக இருந்தாலும் சரி, தாங்கள் இயல்பாக இருப்பது போலவே காட்டிக்கொள்வார்கள்.

* ‘நான் யார்? என்னால் என்ன முடியும்?  என்னுடைய திறன் என்ன?’ போன்றவற்றை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.

* ஒரு நேரத்தில் ஒரு வேலையில் மட்டுமே கவனம் உடையவர்களாக இருப்பார்கள். அவர்களால் பெண்களைப்போல் ஒரே நேரத்தில் பல வேலைகளில் கவனம் செலுத்த முடியாது.

* விளையாட்டு, செய்திகள், பருவநிலை, காலநிலை, இன்றைய சூழ்நிலை போன்ற வெளி உலகம் சார்ந்த விஷயங்களை அறிந்துகொள்வதில் ஆண்கள் மிகவும் ஆர்வம் செலுத்துவார்கள்.

* எல்லாவற்றிலும் தனித்துவமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். அது மட்டுமின்றி, மற்றவர்கள் ஏதாவது அறிவுரை வழங்கினால் அவர்களுக்குப் பிடிக்காது.

* முக்கியமான நாட்கள், முக்கியமான விழாக்களை நினைவில் வைத்துக்கொள்வது கொஞ்சம் கடினமான ஒன்று. அதனால் முக்கியமான தினங்களை எல்லாம் மறந்து, மனைவியிடம் திட்டு வாங்கும் ஆண்கள் பலர் இங்கு உள்ளனர்.

* ‘எடுத்தோம் கவிழ்த்தோம்’ என்று ஒரு செயலைச் செய்ய மாட்டார்கள். ஒரு செயலைத் தொடங்கும்முன் அந்தச் செயலால் வரும் நன்மை, தீமைகளை நன்கு ஆராய்ந்துதான் ஒரு முடிவை எடுப்பார்கள்.

* பெண்களின் மனநிலையைப் புரிந்துகொள்வது அவர்களுக்கு சவாலாகவே இருக்கும். குறிப்பாக பெண்களின்  முக பாவனையை வைத்து அவர்களின் மனநிலையை அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ள முடியாது.

குறிப்பு: எல்லா ஆண்களும் இதேபோல்தான் இருப்பார்கள் என்று எண்ணிவிட வேண்டாம்! இவை ஆண்கள் இடையே பொதுவாகக் காணப்படும் குணாதிசயங்கள்! அவர்களுடன் பழகிப் பார்த்து அவர்களைப் புரிந்துகொள்வது சிறப்புடையதாக இருக்கும்.

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

SCROLL FOR NEXT