வீடு / குடும்பம்

மழைக்காலத்தில் துவைத்த துணி காயவில்லையா? இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!

ஆர்.ஜெயலட்சுமி

ந்த கிளைமேட் ஆக இருந்தாலும் துணி துவைக்காமல் நம்மால் இருக்க முடியாது. வெயில் காலம் என்றால் துவைத்த துணி எல்லாம் ஈசியாக காய்ந்துவிடும். ஆனால், மழைக்காலத்தில் துணி துவைத்து காயவைப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். காற்றில் எப்போதும் ஈரப்பதம் இருந்துகொண்டே இருக்கும். சூரிய ஒளியும் அவ்வளவாக இருக்காது. இவ்வளவு தடைகளையும் தாண்டி சிறிது சிறிதாக காய்ந்தாலும் கூட அடுத்த மழை வந்து துணிகளை நனைத்துவிடும். சரி எப்படித்தான் மழை காலத்தில் துணியை காய வைப்பது என யோசிக்கிறீர்களா? இப்படி செய்யலாமே!

துணியை காய போடும் முன் சிறிது நேரம் துணிகளை கொடியில் போட்டு தண்ணீரை நன்றாக வடிய வைத்து பின்னர் முடிந்தவரை நன்றாக பிழிந்துவிட்டு காய போடுங்கள். துணி காயும் நேரம் கட்டாயம் குறையும்.

வீட்டில் டேபிள் பேன் இருக்கும் பட்சத்தில் அதன் காற்று துணிகள் மீது படுமாறு வைத்தால் சீக்கிரம் காய்ந்துவிடும். வீட்டில் ஹீட்டர் இருந்தால் காயவைப்பது இன்னுமே எளிது.

அவசரமாக ஏதேனும் ஒரு டிரஸ் நீங்கள் காய வைக்க வேண்டும் என்று இருந்தால், இந்த வழி உங்களுக்கு உதவலாம். ஹேர் ட்ரெயரை கூல் செட்டிங்கில் வைத்து குறைந்தது ஆறு இன்ச் இடைவெளியில் துணிகள் மீது காட்டி காய வைக்கலாம். ஆனால், சொட்ட, சொட்ட நீர் வடியாமல் சிறிது ஈரமாக இருக்கும்போது இதை நீங்கள் முயற்சிக்கலாம். மிதமான சூட்டில் ஈரத்துணிகள் காய்வது மட்டும் இல்லாமல் சுருக்கங்களும் நீங்கும்.

கனமான துணிகளை மழைக்காலத்தில் அடிக்கடி நனைக்கக்கூடாது. அதன் அழுக்கு பகுதிகளில் மட்டும் சோப்பு போட்டு அழுக்கினை நீக்கிவிட்டு சிறிது தண்ணீரில் காட்டி உலர வைக்க வேண்டும்.

சுலபமாக காயும் கனமில்லாத ஆடைகளாக அணிந்த சேலையானாலும் சரி. சுடிதார் ஆனாலும் சரி அதை துவைத்து காய போட்டால் சீக்கிரமாக காய்ந்துவிடும்.

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

Alia bhatt beauty tips: நடிகை ஆலியா பட் அழகின் ரகசியம் இதுதான்!

6 Super Cool Facts About The Moon!

SCROLL FOR NEXT