வீடு / குடும்பம்

Nihilism (இல்லாமைத் தத்துவம்) நமக்கு என்ன கற்பிக்க முயல்கிறது? 

கிரி கணபதி

எளிமையா சொல்லணும்னா, "வாழ்க்கையில் எதுவுமே ஒரு மேட்டரே இல்ல" இதுதான் இல்லாமைத் தத்துவம்.

இல்லாமைத் தத்துவம் உண்மையா?

இதை எடுத்தோம் கவிழ்த்தோம் என்றோ பாகுபடுத்தி அல்லது உண்மை பொய் என்றோ கூறிவிட முடியாது. ஒவ்வொரு நபரும் தன் வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பொறுத்து இதனுடைய அர்த்தமானது மாறுபடும்.

வாழ்க்கையை குறுகிய காலத்தில் நாம் பார்க்கும்போது அர்த்தமுள்ள பல விஷயங்கள் நம் வாழ்வில் நடப்பதை உணர முடியும்.

·         இன்று உங்கள் வேலையில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

·         அடுத்த மாதம் உங்களுக்கு புதிய வேலை ஒன்று கிடைக்கலாம்.

·         நாளை உங்களுக்கு பிடித்தவர் உங்கள் காதலை ஏற்றுக் கொள்ளலாம்.

·         அடுத்த ஆண்டு உங்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகலாம்.

·         அடுத்த வாரம் உங்கள் நண்பர்களுடன் சுற்றுலா செல்ல நீங்கள் யோசனையில் இருப்பீர்கள்.

இதுபோன்ற குறுகிய கால நிகழ்வுகள் நம் வாழ்வை அர்த்தமுள்ள ஒன்றாக உணர வைக்கும்.

இதையேஅனைத்தும் நீண்டகால கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, நம் வாழ்வில் சரியாகத் தான் இருக்கும் என்று கூறிவிட முடியாது. அடுத்த 10, 20 ஆண்டுகளில் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்பதை யாராலும் கணிக்கவே முடியாது.

·         அடுத்த பத்து ஆண்டுகளில் உங்கள் வேலை முற்றிலுமாக மாறி இருக்கலாம்.

·         உங்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படலாம்.

·         நெருங்கிய உறவு யாரையாவது நீங்கள் இழந்திருக்கலாம்.

·         ஏன், நீங்களே இருப்பீர்களா என்பது தெரியாது. 

இதுபோன்று நம் வாழ்வில் நீண்ட நாட்களுக்குப் பிறகு, என்ன நடக்கும் என்று தெரியாதபோது, இந்த இல்லாமைத் தத்துவம் உண்மை என்பது போல் தெரியும்.

சுருக்கமாக, குறுகிய காலத்தில் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும். ஆனால் நீண்ட கால அடிப்படையில் வாழ்க்கை அர்த்தமற்ற ஒன்றாக மாற வாய்ப்புள்ளது.

இல்லமைத் தத்துவம் வாழ்க்கையில் நீங்கள் முன்னேற்றம் அடைவதற்கு உதவுமா?

இந்த தத்துவத்தை கடைப்பிடித்தால் நீங்கள் சுதந்திரமாக வேணுமானால் இருக்கலாம். ஆனால், எந்த வகையிலும் இது உங்களை முன்னேற்றாது என்பது தான் இதற்கு ஒரே பதிலாக இருக்க முடியும்.

வாழ்க்கை அர்த்தமற்றது என்பதை மனதில் கொண்டு, அதனால், நான் என் இஷ்டத்துக்கு வாழ போகிறேன்.

யார் சொல்வதையும் கேட்கப் போவதில்லை.

படிக்க மாட்டேன். வேலைக்கு செல்ல மாட்டேன்.

இந்த சமூகம் பின்பற்றும் எதையுமே பின்பற்ற மாட்டேன்.

எனக் கூறிக்கொண்டு, ஊரை சுற்றித் திரிந்தால், வாழ்வில் என்ன முன்னேற்றம் கிடைக்கும் சொல்லுங்கள் பார்க்கலாம்?

ஒருவேளை உணவு வேண்டும் என்றாலும் அதில் யாரோ ஒருவருடைய உழைப்பு என்பது நிச்சயம் இருக்க வேண்டும்.

உணவு வேண்டுமெனில் பணம் வேண்டும். பணம் வேண்டும் என்றால் உழைக்க வேண்டும். உழைக்க வேண்டும் என்றால் திறமையோ படிப்போ நிச்சயம் இருக்க வேண்டும்.

இவை அனைத்தையும் விட்டுவிட்டு  I am Different என்று எத்தனை நாட்கள் நம்மால் காலத்தை கழிக்க முடியும் என்று சொல்லுங்கள் பார்க்கலாம். என்னதான் அதுபோன்று வாழ்வது நமக்கு சுதந்திரத்தை ஏற்படுத்தினாலும், வாழ்க்கையின் எதார்த்தம் நம்மை நன்றாக "வைத்து செய்து விடும்". ஏனென்றால் நம்மைச் சுற்றி இருக்கும் பெரும்பாலானவர்கள் இந்த இல்லாமைத் தத்துவத்திற்கு அப்பாற்பட்டு, கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று வாழ்க்கையை ஓர் வட்டத்தினுள் வாழ்பவராகவே இருக்கிறார்கள்.

நமக்கு எனவே கிடைத்த ஒரு வாழ்க்கையை நம் விருப்பப்படி வாழ்ந்து பார்க்கலாம் என்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு உண்மையிலேயே ஒரு விஷயத்தின் மீது விருப்பமோ ஆசையோ இல்லாத பட்சத்தில், பிறர் சொல்வதையோ செய்வதையோ கேட்டுக்கொண்டு எதையுமே முடிவெடுக்க வேண்டாம். எதுவாக இருந்தாலும் உங்களுக்கு ஒரு விஷயம் மகிழ்ச்சி தரும் என்றால் அதை தாராளமாக முயற்சி செய்யுங்கள். ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்தாலும், அந்த வேலை உங்களுக்கு ஆத்மார்த்தமான மகிழ்ச்சி தருகிறது என்றால், இந்த இல்லாமைத் தத்துவம், முரண்பாட்டுக் கொள்கைகள், அது இது என்று அனைத்தையும் தூக்கி தூர போட்டுவிட்டு, மகிழ்ச்சியாக உங்கள் வேலையை செய்யுங்கள்.

நம் வாழ்க்கை அர்த்தமுள்ளதா அல்லது அர்த்தமற்றதா என்பது, நாம் வாழும் முறையில் தான் உள்ளது என்பதை முழுமையாக நம்புங்கள்.

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

SCROLL FOR NEXT