Best Courses 
வீடு / குடும்பம்

+2 முடித்தவுடன் என்ன படிக்கலாம்? முத்தான 8 படிப்புகள் இதோ!

கல்கி டெஸ்க்

- மரிய சாரா

L.L.B

L.L.B Course

வழக்கறிஞராவதற்கான பட்டயப்படிப்பு தான் இந்த L.L.B. இந்த படிப்பு, +2 முடித்துவிட்டு சேர்ந்தால் 5 வருடங்களும், வேறு ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தபின் சேரவேண்டுமெனில் 3 வருடங்கள் எனவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. படித்து முடித்தபின்னர், மாநிலத்தின் பார் கவுன்சிலில் பதிவு செய்துகொண்டு பணியினை துவங்கலாம். மற்ற படிப்புகளைப்போலவே இதிலும் Doctor of Juridical Science (SJD) வரை படிக்கலாம்.

BSc IT (Information Technology)

BSc IT Course

+2 வில் அறிவியல் + கணிதம் பிரிவில் படித்தவர்கள் இந்த படிப்பை தேர்ந்தெடுக்கலாம். databases, networking, and software ஆகிய பிரிவுகளை முக்கிய பகுதியாக கொண்ட இந்த பட்டய படிப்பிற்கு பின்னர் IT துறையில் நல்ல வருமானத்தில் பணியில் சேரலாம். அரசாங்க பணிகளுக்கும் தேர்வாகலாம்.

Bachelor of Event Management (BEM)

BEM Course

எதற்கெடுத்தாலும் ஒரு விழா என்பது தான் இப்போதைய trend ஆகா உள்ளது. creativity மற்றும் மனிதர்களுடன் பழகுவதை விருப்பமாக கொண்டவர்கள் இந்த படிப்பை தேர்வு செய்யலாம். 3 வருட படிப்பாக வரையறுக்கப்பட்ட இந்த பட்டப்படிப்பை முடித்து Event manager, Resort general manager, Meeting planner, Wedding planner, Conference manager, Sales director, Event marketing manager, Tourism manager ஆகிய பணிகளில் சேரலாம். சுய தொழில் அமைத்தும் முன்னேறலாம்.

Commercial Pilot Training

Commercial Pilot Training course

சவாலான பணியை விரும்புபவர்களும், ஆகாயத்தில் பறக்க விரும்புபவர்களும் இந்த படிப்பை தேர்ந்தெடுக்கலாம். விமானத்தை இயக்குவதற்கான இந்த படிப்பில் சேர +2 வில் அறிவியல் பிரிவில் படித்திருக்க வேண்டும். மொத்தமாக 8-10 மாதங்கள் என இந்த படிப்பு வரையறுக்கப்பட்டுள்ளது. 80 மணி நேரங்கள் பாடத்திட்டம் சார்ந்த படைப்பாகவும், 200 மணி நேரங்கள் விமானத்தை இயக்கும் பயிற்சி வகுப்பாகவும் இந்த படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. படிப்பை முடித்தவுடன் விமானியாக பணியில் சேரலாம்.

B.Sc Psychology

B.Sc Psychology Course

மனிதர்களின் ஆழ்மனம், சிந்தனைகள் பற்றிய ஆர்வம் உள்ளவர்கள் இந்த படிப்பில் சேரலாம். +2 முடித்த பின்னர் 3 வருட பட்டயப்படிப்பாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. படிப்பை முடித்தபின்னர் கல்வி நிறுவனங்களில் பணியில் சேரலாம் அல்லது தனியாகவே பணியை செய்யலாம். தற்போதைய வாழ்வியலில் முக்கியமாக மக்களுக்கு தேவைப்படும் சேவைகளுக்கான படிப்புகளில் இதுவும் ஒன்று. Child Psychologist, Clinical Psychologist, Counselling Psychologist, and Neuropsychologist போன்ற பிரிவுகளில் சிறப்பு மேற்படிப்பினைத் தொடரலாம்.

Bachelor of Social Work

Bachelor of Social Work course

+2 முடித்து 50% மதிப்பெண்கள் பெற்றிருந்தாலே போதும் சமூக சேவை தொடர்பான கோர்ஸில் சேரலாம். 3 வருட படிப்பை முடித்த பின்னர், பள்ளி கல்லூரிகளில் ஆசிரியராக சேரலாம் அல்லது சமூக சேவையில் இருக்கும் பெரிய நிறுவனங்களில் பணியில் சேரலாம். பட்ட மேற்படிப்பு முடித்து வெளிநாடுகளிலும் பணியில் சேரலாம்.

Bachelor of Business Administration (BBA)

BBA Course

சுயதொழில் செய்யவேண்டும், சொந்த காலில் நிற்கவேண்டும், என விரும்புபவர்கள் இந்த 3 வருட பட்ட படிப்பை தேர்ந்தெடுக்கலாம். பெரிய நிறுவனங்களிலும் பணியில் சேரலாம். இதிலும் மேற்படிப்புகளும் உள்ளன.

BFA (Bachelor of Fine Arts)

BFA Course

தொலைகாட்சி, அனிமேஷன், கிராபிக்ஸ் என எதிர்காலத்தில் எப்போதுமே நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் துறையை தேர்ந்தெடுத்து அதில் தனித்து விளங்க இந்த படிப்பை தேர்ந்தெடுக்கலாம். 3-4 வருடங்கள் என இந்த படிப்பு வரையறுக்கப்பட்டுள்ளது. நன்கு படித்து முடித்தால் அனிமேஷன் துறையில் பெரிய நிறுவனங்களில் சேரலாம். சொந்தமாக நிறுவனம் அமைத்தும் சாதிக்கலாம்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT