முட்டை என்பது உலகெங்கிலும் பல வீடுகளில் விரும்பி உண்ணப்படும் பிரதான உணவாகும். குறிப்பாக அவற்றில் இருக்கும் புரதச்சத்துக்கு முட்டைகள் மிகவும் பிரபலமானவை. அத்தகைய முட்டைகளை பலர் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவ்வாறு செய்வது தவறு. அதுபற்றிய உண்மைகளை நீங்கள் தெரிந்துகொண்டால் இனி முட்டைகளை பிரிட்ஜில் வைக்க மாட்டீர்கள்.
முட்டை ஓடுகளில் காற்று செல்ல அனுமதிக்கும் சிறிய துளைகள் உள்ளன. முட்டைகளை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும்போது, அதிகப்படியான ஈரப்பதம் காரணமாக முட்டையின் ஓடுகளில் பாக்டீரியாக்கள் வளரலாம்.
முட்டைகள் அவற்றின் சுற்றுப்புறத்திலிருந்து வாசனை மற்றும் சுவைகளை உறிஞ்சும் தன்மை கொண்டதால், அடைக்கப்பட்ட பிரிட்ஜில் இருக்கும் வாசனைகளை முட்டை உறிஞ்சி அதன் சுவை மற்றும் தரம் பாதிக்கப்படும்.
குறைந்த வெப்பநிலை முட்டை ஓடுகளை சுருக்கி விரிசல்களை ஏற்படுத்தலாம். அந்த விரிசல்கள் வழியே பாக்டீரியாக்கள் முட்டையினுள் நுழைய வாய்ப்புள்ளது. இதனால் உணவு மூலம் பரவும் நோய்களின் அபாயம் அதிகரிக்கிறது.
முட்டையை ஃப்ரிட்ஜுக்குள் வைக்கும்போது முட்டையின் உள்ளே இருக்கும் கார்பன் டை ஆக்சைடு விரைவாக வெளியேறுகிறது. இது முட்டையின் புத்துணர்ச்சியை பாதித்து அதன் சுவையை முற்றிலுமாக மாற்றிவிடும்.
முட்டையை சேமிக்க சிறந்த வழி எது?
முட்டைகள் 20 டிகிரி செல்சியஸ் வெப்பத்துக்கு கீழே சேமிக்கப்படக்கூடாது. ஆனால் ஃப்ரிட்ஜில் அதன் வெப்பநிலை 7 முதல் 10 டிகிரி செல்சியஸில் சேமிக்கப்படுவதால், அவற்றின் தன்மை முற்றிலுமாக மாறிவிடுகிறது. எனவே முட்டைகளை பிரிட்ஜில் வைப்பதற்கு பதிலாக, சாதாரணமாக அலமாரிகளில் சேமிப்பதே நல்லது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒருவேளை நீங்கள் அதிக வெப்பமுடைய பகுதிகளில் வசியம் நபராக இருந்தால், முட்டைகளை பிரிட்ஜில் வைத்துதான் சேமிக்க வேண்டும். அதுபோன்ற தவிர்க்க முடியாத தருணங்களில் முட்டைகளை அதிக குளிர்ச்சியுடைய இடத்தில் வைத்து சேமிக்காமல், ஃப்ரிட்ஜின் கதவுப் பகுதியில் உள்ள இடங்களில் சேமிக்கலாம்.
முட்டைகளை கட்டாயம் பிரிட்ஜில் வைத்துதான் சேமிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. அப்படி சேமிப்பதால் முட்டைகளின் உண்மையான தன்மை மாறிவிடும் என்பதால், ஈரப்பதம் இல்லாத வறண்ட இடத்தில் வைத்தே முட்டைகளை சேமிக்கவும். முட்டைகளை சமைப்பதற்கு முன் அவற்றில் ஏதேனும் விரிசல்கள் உள்ளனவா? அல்லது மோசமான வாசனைகள் வருகின்றனவா? என்பதை சரிபார்த்து சமைக்கும் பழக்கத்தை எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும்.