Affair 
வீடு / குடும்பம்

கள்ளக்காதலின் மிக மோசமான பின் விளைவுகள்!

ரேவதி மகேஷ்

கணவன் மனைவி உறவு!

கணவன் மனைவி உறவு என்பது மிகவும் புனிதமான ஒன்று. ஆனால் சமீப காலங்களில் அதைக் கொச்சைப்படுத்தும் விதமாய் நிகழும் விஷயங்கள் பல நம்மை வேதனையில் ஆழ்த்துகின்றன.

எந்த செய்தியைப்படித்தாலும் கள்ளக்காதல், அது சம்பந்தமான கொலைகள், வழக்குகள் என நிறைந்து கிடக்கின்றன.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற தாத்பரியத்தை மையமாகக் கொண்டே நம் பாரதத் திருநாட்டில் திருமண பந்தத்தில் இணைகின்றனர். ஆயின் பல வளர்ந்த மேல் நாடுகளில் அதுபோல் பந்தங்கள் குறைவே. ஆனால் இப்போது நம் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. திருமணம் தாண்டிய உறவுகள் மிகக்கேவலமான முறையில் அதிகமாகி விட்டன.

பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளில் பிறன் மனை நோக்காமை எனும் அதிகாரத்தில் உள்ள பத்து குறள்களிலும் அடுத்தவன் மனைவியை தவறாகப்பார்க்கலாகாதென ஆணுக்கு வலியுறுத்துகிறார்.

தொல்காப்பியத்திலும் கற்பு என்பது ஆண் பெண் இருவருக்கும் சமம் என்றே பாடப்படுள்ளது. அதில் கற்பித்தல் தலைப்பில் ஒருவனுக்கு ஒருத்திதான் எனக்கூறும் பாடல் வரி உள்ளது.

ஒழுக்கம் தவறுவதால்தான் பல விதமான பால்வினை நோய்கள் நாட்டில் பலருக்கும் உண்டாகின்றன. பிறன் மனை நோக்குதல் வெறும் ஒரு ஆண் பெண் குடும்பம் மட்டுமே சம்பந்தப்பட்ட விவகாரமல்ல. ஒட்டுமொத்த சமுதாயத்தையே குட்டிச்சுவராக்கும் வலிமையான பேய் போன்றது அது.

கள்ளக்காதலின் மிக மோசமான பின் விளைவுகளை ஏராளமாக பட்டியலிடலாம்.

  1. நோய்களுக்கு பலியாகுதல்

  2. அப்பாவிக்குழந்தைகள் அனாதையாகுதல்

  3. தனி மனித பொருளாதாரம் சீர்குலைதல்

  4. வேலை செய்யும் பொது இடங்களைப் பாழாக்குதல்

  5. மனதளவில் ஏமாற்றமும் தனிமையும்

  6. தற்கொலை எண்ணங்கள் தோன்றுதல், செயல்படுத்துதல்

  7. அப்பாவி தாய் தந்தை உறவினர்களைத் தவிக்கவிடுதல்

  8. அமைதியான வாழ்வை கொலைக்களமாக மாற்றுதல்

  9. குடும்பங்கள் சிதறுதல்

  10. விவாகரத்து வழக்குகள், கொலை வழக்குகள் இன்னும் நீளமாக சொல்லிக்கொண்டே போகலாம்.

இது போன்ற தேவையற்ற நிகழ்வுகள் அமைதிப் பூங்காவான வாழ்வில் புயலாக மாறி சீரழித்து விடுகின்றன. ஒரு முறை ஏற்பட்ட சபலத்தினால் செய்த தவறு கூட ஆயுள் முழுக்க அத்தவறிழைத்தவர்களை தினம் தினம் வேறு வழிகளில் கொல்கின்றது.

எனவே திருமணம் எனும் புனிதமான பந்தத்தில் இணைந்த கணவன் மனைவி இருவரும் ஒருவொருக்கொருவர் அன்னியோன்யம், பரஸ்பரம் விட்டுக்கொடுத்தல் மட்டுமின்றி மிக முக்கியமாக உண்மையாக ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என வாழ்ந்தால் பல்லாண்டு காலம் பேரன் பேத்திகளோடு சீரும் சிறப்புமாக வாழலாம்!

அதிகம் காரம் சாப்பிடுறீங்களா? உங்களுக்கு ஆபத்து காத்திருக்கு! 

கோபம், வேகம், அனைத்துக்கும் அணை கட்டிவிட்ட அறிஞர் அண்ணாவின் பதில்!

Why Does My Pet Do That? Understanding Common Behaviors!

Laxman Temple: சூர்ப்பனகை மூக்கை லட்சுமணன் அறுத்த இடம்தான் இது!

சிறுகதை: சகுனம்!

SCROLL FOR NEXT