Different types of staircase
Different types of staircase Image Credits: Design Cafe
வீடு / குடும்பம்

உங்கள் வீட்டின் அழகுக்கு அழகு சேர்க்க படிக்கட்டுக்களை இப்படி அமைக்கலாமே!

நான்சி மலர்

ங்கள் வீட்டில் இன்னும் பழைய மாடல் படிக்கட்டுக்களைத்தான் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதை நிறுத்திவிட்டு, தனித்துவம் வாய்ந்த மார்டன் படிகளுக்கு மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவை என்னவென்பதைப் பற்றித்தான் இந்தப் பதிவில் காண உள்ளோம்.

Helical staircase: இந்த Helical staircase ஸ்பைரல் படிகளை போன்றேதான் இருக்கும். ஆனால், பார்ப்பதற்கு வளைவு, நெளிவுகளுடன் நேர்த்தியாகக் காணப்படும். உங்கள் வீட்டில் நிறைய கார்னர் இருந்தால் இதுபோன்ற படிக்கட்டுகளை பயன்படுத்துங்கள்.

Cantilevered staircase: இந்தப் படிகளைப் பார்க்கும்போது காற்றில் மிதப்பது போல இருக்கும். ஒரு பக்கம் சுவற்றுடன் சேர்ந்து இருக்கும், இன்னொரு பக்கம் அப்படியே விடப்பட்டிருக்கும். இந்தப் படிக்கட்டுகளை Steel conceal செய்திருப்பார்கள். அதனால் மிகவும் உறுதியாக இருக்கும். Minimalist ஆக வீடு இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்தப் படிகள் கச்சிதமாக பொருந்தும்.

Ribbon staircase: இது பார்ப்பதற்கு தனித்துவமாக இருக்கும். ரிப்பன் பகோடா பார்த்திருப்பீர்கள் அல்லவா? இதுவும் கிட்டத்தட்ட பார்க்க அதுபோலவே அழகாக இருக்கும். இதை 10mm தடிமனான மெட்டல் ஷீட்டிலே கட்டியிருக்கிறார்கள்.

Split staircase: பெரிய மாளிகைகளில் இதுபோன்ற படிக்கட்டுக்களை அமைத்திருப்பார்கள். ஒருவழிப்பாதையாக மேலே சென்று இரண்டாக பிரிவது போல அமைந்திருக்கும். உங்கள் வீடு பார்ப்பதற்கு ஆடம்பரமாக தெரிய வேண்டும் என்றால் கண்டிப்பாக இதுபோன்ற படிக்கட்டுகளை பயன்படுத்துங்கள்.

Glass staircase: கண்ணாடியால் ஆன படிகட்டுகளை சிறிதாக இருக்கும் வீடுகளுக்கு பயன்படுத்தலாம். Glass, mirror போன்றவற்றை வீட்டில் பயன்படுத்துவது இடத்தை அடைக்காது. இந்தப் படிக்கட்டுகள் பார்ப்பதற்கு நளினமாகவும், நேர்த்தியாகவும் இருக்கும். கண்ணாடி படிக்கட்டுகள் அதன் பாதுகாப்பிற்கும், நிலைப்புத் திறனுக்கும் பெயர் போனதாகும்.

Ladder staircase: இதுபோன்ற ஏணிப் படிகட்டுக்கள் பயன்படுத்துவதற்கு முக்கியக் காரணம் சுலபமாக வந்து செல்வதற்காகவேயாகும். இதை Library, lofts, docks போன்ற இடங்களில் எளிதாகப் பொருட்களை எடுப்பதற்காகவும், வைப்பதற்காகவும் கட்டப்பட்டதாகும். இதன் எளிமையான வடிவமைப்பு காரணமாக இந்தப் படிக்கட்டை அமைப்பதற்கான விலையும் குறைவேயாகும்.

Escape staircase: எல்லா வீடுகளிலும், ஸ்கூல், ரெஸ்டாரெண்ட் போன்ற இடங்களில் அவசியம் வைக்கக்கூடிய ஆபத்துக்காலத்தில் உதவும் படிகட்டுக்கள்தான் Escape staircase ஆகும். ஏதேனும் நெருப்பு பிடித்துக்கொள்வது போன்ற அசம்பாவிதம் வீட்டிலோ அல்லது ரெஸ்டாரெண்ட் போன்ற இடங்களில் நடக்கும்போது மக்களை வெளியேற்ற இந்த வகை படிக்கட்டுகள் பெரிதும் உதவுகிறது. இது பொதுவாக கட்டடத்தின் வெளிப்புறத்திலேயே அமைந்திருக்கும்.

குழந்தைகளுக்கு தாயின் சேலையில் தொட்டில் கட்டுவதன் காரணம் தெரியுமா?

நேர்த்திக்கடனாக உருவ பொம்மை செலுத்தும் அதிசயக் கோயில்!

டைனோசர்கள் அழிந்த நாள் எப்படி இருந்திருக்கும் தெரியுமா? 

ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்பைஸஸ் இன்ஃபியூஸ்ட் வாட்டர்  நன்மை தருமா?

மார்பக புற்றுநோய் அறிகுறிகள் என்ன? எப்படி தடுக்கலாம்?

SCROLL FOR NEXT