10 Best Philosophers quotes for Students. 
Motivation

மாணவர்களுக்காகத் தத்துவவாதிகள் கூறிய 10 சிறந்தத் தத்துவங்கள்!

பாரதி

மார்ச் மாதம் தொடங்கிவிட்டாலே மாணவர்களுக்குத் தேர்வுகள் தொடங்கிவிடும். அதேபோல் மன அழுத்தமும் ஆரம்பமாகிவிடும். ஏற்கனவே 12ம் வகுப்புத் தேர்வுகள் ஆரம்பமாகிவிட்டன. இதனையடுத்து ஒவ்வொன்றாக அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் ஆரம்பமாகிவிடும். வருடம் முழுவதும் படிக்காமல் தேர்வுகளின் போதுப் படிக்கும் மாணவர்களுக்கும், வருடம் முழுவதும் படித்தாலும் தேர்வு சமயத்திலும் தூங்காமல் படிக்கும் மாணவர்களுக்கும்தான் இந்த தத்துவவாதிகளின் தத்துவங்கள்.

1. சாதனைகள் ஒன்றும் விபத்துகள் அல்ல. அது கடின உழைப்பு, கற்றுக்கொள்ளுதல், படித்தல், தியாகம் ஆகியவற்றின் கலவை. என்னக் கற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டுமோ அதனைக் காதலித்துச் செய்யுங்கள். – Pelle

2.  பார்ப்பதற்கு அனைத்துமே கடினமாகத்தான் தெரியும். ஆனால் அதிலும் நீங்கள் ஒன்றைச் செய்து சாதனை படைக்க வழி இருக்கும். – Stephen Hawking

3.  சாதனை என்பது சிறிய சிறிய உழைப்புகளின் கூட்டல். ஆகையால் தொடர்ந்து உழையுங்கள். – Robert Collier

4.  சாதனைக்கான ரகசியம் – அனைவரும் தூங்கும்போது படியுங்கள், அனைவரும் வெளியே சுற்றும்போது வேலைச் செய்யுங்கள், அனைவரும் விளையாடும் போது உங்களைத் தயார் செய்யுங்கள், அனைவரும் வாழ்த்துத் தெரிவிக்கும்போது கனவு காணுங்கள். – William A. Ward

5. அதிகாரம் உங்களைத் தேடி வராது, நீங்கள் தான் அதை எடுத்துக்கொள்ள வேண்டும். (படிப்பின் மூலம்) – Beyonce

6. தோல்விகளை நீங்கள் சமாளித்துக் கடந்து வரலாம். ஆனால் நீங்கள் தோல்வியைடந்துவிடக் கூடாது. உண்மையில், நீங்கள் தோல்விகளைத் தாண்டி வந்தால் மட்டுமே முன்னேற்றப் பாதையில் பயணிக்க முடியும். – Maya Angelou

7.  தோல்விகளே மறுபடியும் முழுப் புத்திசாலித்தனத்துடன் முயற்சி செய்யத் தூண்டுகின்றன. – Henry Ford

8.  தோல்வியைச் சந்தித்து உடைந்துப்போனப் பல மனிதர்களுக்கு விளங்குவதில்லை அவர்கள் வெற்றிக்கு மிக அருகில் சென்று அதனை விட்டுவிட்டார்கள் என்று. – Thomas Edison

9.  எப்போது உங்களின் முழுப் பொறுப்புகளையும் நீங்களே எடுத்துக்கொள்கிறீர்களோ, அப்போது மற்றவர்களை குற்றம் சொல்ல மாட்டீர்கள். அந்த நாள் நீங்கள் நிச்சயம் உயரத்திற்கு சென்றுவிடுவீர்கள். - O.J.simpson

10.  படிப்பதற்குப் போதுமான நேரம் இல்லை என்று கூறாதீர்கள். ஏனெனில் அதே நேரம் தான் மதர் தெரசா, ஹெலன் கில்லர், டா வின்சி போன்றவர்களுக்கும் இருந்தது. - H. Jackson Brown

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT