Motivation Image Image credit - pixabay.com
Motivation

நீங்கள் வேலை செய்யும் இடத்தில் "கெத்தாக" இருக்க உதவும் 10 விஷயங்கள்...!

கோவீ.ராஜேந்திரன்

1) நீங்கள் வேலை பார்க்கும் இடத்திற்கு, உங்கள் வேலை செய்யும் நேரத்திற்கு முன்னாள் சென்று விடுங்கள். குறிப்பாக  உங்கள் மேலதிகாரி வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் நீங்கள் உங்கள் சீட்டில் இருக்க வேண்டும்.  அவசியம் இருந்தாலொழிய "சிக்" லீவு எடுக்காதீர்கள்.

2) உங்களால் எந்த வேலையை தெளிவாக செய்ய முடியும் என்பதற்கு ஒரு ஆதாரம் இருக்க வேண்டும். அதாவது இதை நிச்சயமாக இவர் சரியான முறையில் செய்வார் என்று மற்றவர்கள் உங்கள் மீது ஒரு நல்ல கருத்து சொல்லும் படி ஒரு விஷயம் உங்களிடத்தில் இருக்க வேண்டும். உங்கள் நிறுவனத்தின் கொள்கைகள் என்ன, செயல்பாடுகள் என்னவென்பதையும் புரிந்து கொள்ளுங்கள். எந்த விதிமுறை மீறல்களையும் தவிர்ப்பதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

3) தீர்வு ஏற்படும் என்று தெரிந்தால் மட்டும் ஒரு பிரச்னை விஷயமாக உங்கள் மேலதிகாரியை அணுகுங்கள். அலுவலகத்தில் நீங்கள் இருக்கும் நேரத்தில் ப்ரொஃபஷனலாக இருங்கள். உங்கள் உடன் பணிபுரிபவர்களுடன் பேசும்போதும், உங்களின் அதிகாரிகளிடம் பேசும்போதும், நீங்கள் நல்ல நடத்தைகளை பின்பற்ற வேண்டும்.  பிசினஸ் என்றால்  உங்கள் வாடிக்கையாளரிடம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள்.

4) உங்களுக்கு தோன்றும் நல்ல யோசனைகளை உடனே அவ்வப்போது ஒரு டைரியில் அல்லது சுய குறிப்பு புக்கிலோ குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். நீங்கள் சார்ந்த துறையின் புதிய ட்ரெண்டுகளை தெரிந்துகொள்ளுங்கள். நிறுவனங்கள் குறித்த விவரம், போதிய பயிற்சி என உங்களின் திறன் மற்றும் அறிவை வளர்த்துக் கொண்டிருங்கள்.

5) அலுவலக ரகசியங்களை யாரிடமும் சொல்லக்கூடாது. பெரும்பாலும் யாரும் ரகசியங்களை பாதுகாப்பதில்லை. ரகசியங்களுக்கு மரியாதை கொடுங்கள். நிறுவனம் குறித்த மிகவும் முக்கிய விஷயங்களிளெல்லாம் ரகசியங்களாக கடைபிடியுங்கள்.

6) ஒரு வேலையை எந்த நேரத்தில் உங்களால் சிறப்பாக செய்ய முடியும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். காலையிலா, மாலையிலா  ஒர்க் பிரசர் இருக்கும் போதா, நீங்கள் ரிலாக்ஸாக இருக்கும் போதா என்பதை அறிந்து அதன்படி உங்கள் வேலையை தரம் பிரித்து தொடங்குங்கள். உங்களின் வேலைகளில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பாருங்கள். உங்களின் நேரத்தை திறம்பட கையாண்டு, நம்பகத்தன்மை மற்றும் சார்பின்மையை உருவாக்குங்கள்.

8) ஒரு வேலையை நீண்ட நேரம் அல்லது ஓயாமல் செய்து கொண்டிருந்தால் அதற்கு பெயர் கடின உழைப்பு அல்ல, அதற்கு பெயர் "போரிங்".உங்களை தொடர்புகொள்ளும் வழிகளை எப்போதும் திறந்து வைத்திருங்கள். வெளிப்படையாகவே அவை எப்போதும் இருக்கட்டும். சரியான நேரத்தில் இமெயில்களுக்கும், அழைப்புகளுக்கும், குறுந்தகவல்களுக்கும் பதில் கொடுங்கள். தேவைப்படும்போது தெளிவான விளக்கம் பெறுங்கள்.

9) நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில்" இது என்னுடைய வேலை அல்ல "என்று ஒரு நாளும் சொல்லாதீர்கள். உங்கள் பொறுப்புகள் மற்றும் செயல்களுக்கு உரிமை எடுத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும்போது தவறுகளை ஏற்றுக் கொள்ளுங்கள். தீர்வுகளை நோக்கி பணிசெய்யுங்கள். வாய்ப்புக்களை சுறுசுறுப்புடன் தேடுங்கள்.

உங்களிடம் இருக்கும் திறமையையும், ஆற்றலையும் நேரம் கிடைக்கும்போது பயன்படுத்த தயங்காதீர்கள். உங்கள் சாதனைகளைத்தான் யாரும் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். நீங்கள் செய்யும் முயற்சிகளை யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

10) காலை நேரத்தில் வேலை தொடங்கும் முன் அனைவருக்கும் ஒரு முன் சிரிப்புடன் வணக்கம் தெரிவித்துவிட்டு வேலையை தொடங்குங்கள். அன்றைய நாள் முழுவதும் ஒரு மனநிறைவுடன் வேலையை செய்யலாம்

பிரச்னைகளை ராஜதந்திரங்களுடன் கையாளுங்கள்  பிரச்னைகள் மற்றும் கருத்துவேறுபாடுகளை நல்ல முறையில் சமாளியுங்கள். அதற்கான பதில்களை திறந்த மனதுடன் கேட்டுப்பெறுங்கள். சமரசம் செய்ய முயற்சி செய்யுங்கள்.

பணியிடத்தில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள். தேவையான பொருட்களை சரியாக பயன்படுத்துவது மற்றும் ஏதேனும் பிழை நேர்ந்தால் அதுகுறித்து உடனடியாக எடுத்துக்கூறுவது என பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக கையாளுங்கள்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT