Smart People
Smart People 
Motivation

Smart People: புத்திசாலிகள் இந்த 5 விஷயங்களைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள்! 

கிரி கணபதி

தகவல்கள் அதிகம் நிறைந்த இன்றைய நவீன உலகில் முக்கியமானவற்றில் கவனம் செலுத்துவது ஒரு விலைமதிப்பற்ற திறமையாகும். புத்திசாலிகள் தங்களது கவனத்தை சரியான விஷயங்களைப் புரிந்து கொள்வதற்கு ஒதுக்குவது மூலமாக தேவையற்ற கவனச்சிதறல்களைத் தவிர்க்கின்றனர். இந்த பதிவில் புத்திசாலிகள் ஒருபோதும் கவனம் செலுத்தாத 5 விஷயங்கள் என்னவென்று தெரிந்து கொள்வோம். 

  1. எதிர்மறை ஆற்றல் மற்றும் மனிதர்கள்: புத்திசாலிகள் எதிர்மறை விஷயங்களால் அவர்களது மனநிலை மற்றும் வாழ்வில் ஏற்படும் தாக்கங்கள் பற்றி நன்கு தெரிந்தவர்கள். எதிர்மறையான நபர்களைக் கண்டுகொள்ளக்கூடாது என்பதில் அவர்கள் தீவிரமாக இருக்கின்றனர். எனவே எதிர்மறையான விஷயங்களை விட்டு விலகியே இருந்து, நேர்மறையான நபர்களுடன் பழகுவதை விரும்புகின்றனர். 

  2. பயனற்ற வதந்திகள்: வதந்திகள் கேள்விப்படுவதற்கு கவர்ச்சியாக இருந்தாலும், அதனால் உறவுகள் மற்றும் செயல்பாடுகளில் ஏற்படும் தீய விளைவுகளை புத்திசாலிகள் அடையாளம் கண்டுகொள்கின்றனர். புத்திசாலிகள் அவர்களின் வாழ்விற்குத் தேவையில்லாத வகுந்திகளைப் பரப்புவதையோ அல்லது கேள்விப்படுவதையோ தவிக்கிறார்கள். இதற்கு மாறாக அர்த்தமுள்ள உரையாடல்களில் கவனம் செலுத்தி தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கான வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்கின்றனர். 

  3. தோல்வி பயம்: வெற்றிக்கான பயணத்தில் தவிர்க்க முடியாத பகுதி தோல்வி என்பதை புத்திசாலிகள் அறிவார்கள். தோல்வி பயம் தங்களின் இலக்குகளை நோக்கி நகர்வதிலிருந்து தடுக்கிறது என்பது இவர்களுக்குத் தெரியும். தோல்வியை இவர்கள் ஒரு மதிப்பு மிக்க கற்றல் வாய்ப்பாகக் கருதி தங்களின் யுக்திகளை மாற்றியமைத்து, வாழ்க்கையில் முன்னேறப் பயன்படுத்திக் கொள்கின்றனர். 

  4. மற்றவர்களுடன் ஒப்பிடுதல்: தன்னை மற்றவர்களுடன் ஒப்பிடுவது தங்களின் சுயமரியாதை மற்றும் தனிப்பட்ட முன்னேற்றத்தை பாதிக்கும் என்பது புத்திசாலிகளுக்குத் தெரியும். ஒவ்வொரு நபரின் பயணமும் தனித்துவமானது என்பதை புத்திசாலிகள் புரிந்து கொள்கிறார்கள். மேலும் ஒவ்வொருவருக்கும் பலம் பலவீனங்கள் என அனைத்தும் வித்தியாசப்படும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். அவர்கள் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டு தங்கள் நேரத்தையும் சக்தியையும் வீணாக்க மாட்டார்கள். அதற்கு மாறாக சுய முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி தங்களது சொந்த சாதனைகளைக் கொண்டாட விரும்புவார்கள். 

  5. கவனச்சிதறல்கள்: அதிகப்படியாக டிவி பார்ப்பது, வீடியோ கேம் அல்லது சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துவது வளர்ச்சியைத் தடுக்கும் என்பது புத்திசாலிகளுக்குத் தெரியும். அவர்கள் தங்களின் நேரத்திற்கும் கவனத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் இலக்குகளுக்கு பிரச்சனை கொடுக்கும் கவனச்சிதறல்களைத் தவிர்ப்பார்கள். அவற்றிற்கு பதிலாக வாசிப்பு, உடற்பயிற்சி, அர்த்தமுள்ள உரையாடல்கள் போன்ற அவர்களை முன்னேற்றம் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

தேனுடன் லவங்கப்பட்டை சேர்ந்து வழங்கும் 11 அற்புதப் பலன்கள்!

சிவபெருமானை எந்த மலர் கொண்டு வழிபட என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

கனமழையின் போது ஏசி பயன்படுத்தலாமா? நன்மைகளும், தீமைகளும்! 

நதியின் நடுவில் ஈரக் கருவறை உள்ள கோயில் எது தெரியுமா?

ஒருவர் ஏன் கட்டாயம் மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

SCROLL FOR NEXT