வெற்றி என்பது நம் வாழ்வில் பல தருணங்களில் அனைவருமே அடைய விரும்பும் ஒன்று. இருப்பினும் சில மோசமான பழக்கவழக்கங்களால், வாழ்க்கையில் சிலர் தோல்வியாளர்களாகத் திகழ்கின்றனர். இந்தப் பதிவில் வாழ்க்கையில் வெற்றி பெற போராடும் நபர்களின் 8 பொதுவான பழக்கங்கள் பற்றி தெரிந்து கொள்வோம். இதன் மூலமாக அவற்றிலிருந்து விடுபட்டு தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் சாதனைக்கான பாதையில் நாம் செல்வதற்கான முயற்சிகளை எடுக்கலாம்.
பொறுப்பின்மை: தோல்வியாளர்கள் தங்கள் செயல்கள் மற்றும் விளைவுகளுக்கு பொறுப்பை ஏற்க மறுக்கின்றனர். அதற்கு மாறாக அவர்களின் தோல்விக்கு பிறரை காரணம் கூறி குற்றம் சாட்டுகின்றனர். இது அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சியைத் தடுக்கிறது.
எதிர்மறை எண்ணம்: தோல்வியாளர்கள் எதிர்மறையான எண்ணங்களில் மூழ்கிக் கிடப்பார்கள். அவர்களின் திறமைகள் மீது அவர்களுக்கு ஒருபோதும் நம்பிக்கை இருக்காது. எல்லா சமயங்களிலும் அவர்களின் பலவீனங்கள் மீது கவனம் செலுத்துவதால், எதிலும் முன்னேற்றம் காண மாட்டார்கள்.
தள்ளிப்போடுதல்: இந்த வேலையையும் சரியான நேரத்திற்கு செய்யாமல் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பார்கள். முக்கியமான வேலைகளை தள்ளிப்போட்டு செயலைத் தாமதப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள்.
தோல்வி பயம்: எதையாவது முயற்சித்தால் தோற்று விடுவோமோ என்ற தோல்வி பயம், பல புதிய விஷயங்களை முயற்சிப்பதிலிருந்து அவர்களைப் பின்வாங்க வைக்கிறது.
ஒழுக்கமின்மை: தோல்வியாளர்கள் ஒழுக்கம் மற்றும் தொடர்ந்து போராடுவதில் கஷ்டப்படுகிறார்கள். பெரும்பாலும் அவர்கள் கவனிச்சிதர்களுக்கு உட்பட்டு, மிக முக்கிய விஷயங்களில் ஈடுபாடு இல்லாமல் போகிறார்கள்.
மற்றவர்களைக் குற்றம் சாட்டுதல்: தங்களின் தோல்விகளுக்கு மற்றவர்கள் மீதும், பிற சூழ்நிலைகளின் மீதும் பழி சுமத்துவார்கள். தங்களின் தவறுகளுக்கு பொறுப்பேற்க மறுப்பதால், அவர்களது வாழ்க்கை எந்த வகையிலுமே வளர்ச்சியடையாது.
எதையும் கற்க மாட்டார்கள்: இத்தகைவர்களிடம் புதிய அறிவு மற்றும் திறன்களை வளர்த்துக் கொள்ளும் மனப்பக்குவம் இருக்காது. அனைத்துமே எளிதாகக் கிடைத்துவிட வேண்டும் என நினைப்பார்கள். மாறிவரும் உலகிற்கு ஏற்ப நம்மை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும் என அவர்கள் நினைக்காததால், வெற்றி அவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கும்.
நெகட்டிவ் நபர்களுடன் பகழுவார்கள்: ஒருவன் வாழ்க்கையில் தொடர் தோல்விகளை சந்திப்பதற்கு அவன் நெகட்டிவ் மனநிலை அதிகம் கொண்ட நபர்களுடன் பழகுவதும் காரணமாக இருக்கிறது. அத்தகைய நபர்களுக்கு எவ்விதமான வாழ்க்கைக் குறிக்கோள்களும் இருக்காது. எனவே அவர்களுடன் நாம் சேரும்போது நம்முடைய வாழ்க்கை சுழற்சியும் சவாலானதாக மாறுகிறது.
இந்த 8 பழக்கங்களில் ஏதேனும் உங்களிடம் இருந்தால், அதை ஒப்புக்கொண்டு உடனடியாக விட்டு விலகுவதற்கான முடிவை நீங்கள் எடுக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் எதையாவது சாதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும்.