Overcome Fear Leads To Success
Overcome Fear Leads To Success Image Credits: iStock
Motivation

வெற்றியடைய இந்த மூன்று பயங்களை கைவிடுங்கள்!

நான்சி மலர்

ம்மில் பலருக்கு வாழ்க்கையில் முன்னேற வேண்டும், வெற்றியடைய வேண்டும், நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற ஆசையிருக்கும். இருப்பினும் எந்தை வேலையையும் செய்ய தொடங்கும் முன்பு அதை நம்மால் செய்ய முடியுமா முடியாதா? என்ற பயமே ஒரு செயலை செய்ய தடையாக அமைந்துவிடும். அப்படிப்பட்ட தடைக்கற்களாய் இருக்கக்கூடிய 3 பயங்களை பற்றியும் அவற்றை போக்கக்கூடிய வழிமுறைகளையும் பற்றித் தான் இந்த பதிவில் காண உள்ளோம்.

சுயசந்தேகம்

ஏதாவது ஒரு புதிய விஷயத்தை செய்ய தொடங்கும் முன்பு சுயசந்தேகம் என்பது நம்முள் பலருக்கு வரும். நம்மால் இதை செய்து முடிக்க முடியுமா? அந்த அளவுக்கு திறமை நம்மிடம் இருக்கிறதா? போன்ற கேள்விகள் எழும். இந்த பிரச்னையை சரி செய்வதற்கு நம்முடைய பலம் என்னவென்பதை ஒரு பேப்பரில் எழுதவும். நம்முடைய பலம் என்னவென்று நமக்கு தெரிந்து விட்டால் நாம் தொடங்கும் காரியத்தில் நிச்சயம் வெற்றியடைந்து விடுவோம் என்ற நம்பிக்கை தானாகவே வந்துவிடும்.

தோல்வியை கண்டு பயம்

மற்றவர்களை காட்டிலும் வேறு பாதையை தேர்ந்தெடுக்கும்போது தோல்வி ஏற்பட்டு விடுமோ என்ற பயம் வருவது சகஜமே! அதற்குதான் நம் மீது அளவு கடந்த நம்பிக்கையை விதைக்க வேண்டும். நாம் தோல்வியடைந்தாலும் மறுபடியும் புதிதாக தொடங்கலாம் என்ற நம்பிக்கை வேண்டும். தோல்வியடைவது தவறில்லை, அதிலிருந்து கிடைத்த பாடத்தை மறக்காமல் அடுத்தமுறை அதே தவறை செய்யாமல் திருத்தி கொள்வது சிறந்தது.

அணுகுமுறையை மாற்றுங்கள்

அப்படி நடந்தால் என்ன செய்வது? இது வேலை செய்யாமல் போனால் என்ன ஆகும்? போன்ற What if? கேள்விகள் நிறைய மனதில் தோன்றும்போது அதை பற்றிய உங்களுடைய அணுகுமுறையை சற்று மாற்றுங்கள். ‘What if’ க்கு பதில் ‘Inspite of’ என்ற வார்த்தையை பயன்படுத்துங்கள்.

இதுபோன்ற சந்தேகங்கள் வருவதற்கு காரணம் அந்த விஷயத்தை பற்றிய போதிய அளவு அறிவு நமக்கு இல்லாததேயாகும். எனவே இதை ஏற்கனவே செய்து முடித்தவர்கள் எவ்வாறு செய்தார்கள், என்னென்ன சவால்களை எதிர்க்கொண்டார்கள் என்பது போன்ற விஷயங்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் அதை முயற்சிக்கும் போது உங்களுடைய வழியில் செய்யுங்கள்.

இத்த மூன்று பயங்களையும் எதிர்க்கொண்டு செயலை தொடங்குங்கள். எந்த காரியமாக இருந்தாலும் நிச்சயமாக வெற்றி கிட்டும் என்பதில் ஐயமில்லை.

பத்மாவதி தாயாரின் முற்பிறவி கதை தெரியுமா?

இவர்கள் கடவுளின் தூதர்கள்! தேசிய மருத்துவர் தினம் ஜூலை 01, 2024

நைலிச மனப்பான்மை என்றால் என்ன? அதிலிருந்து விடுபட உதவும் யோசனைகள்!

முதல் முறையாக வாகனம் ஓட்டும் அல்லது ஓட்ட தயாராகும் இளைஞர்களின் கவனத்திற்கு!

பாடல் கேட்டதால் தூக்கு தண்டனை… வடகொரியாவில் கொடூரம்!

SCROLL FOR NEXT