motivation image Image credit - pixabay.com
Motivation

பாராட்டினால் பலன் கிடைக்குமா? பாராட்டித்தான் பாருங்களேன், தெரியும்!

வாசுதேவன்

லரும் ஆவலுடன் எதிர்பார்ப்பதில் முக்கிய இடம் வகிப்பது, பிறரிடம் இருந்து பாராட்டு கிடைக்குமா, என்பது. பாராட்டு ஒரு சக்தி மிக்க உந்துக் கோலாக (motivating tool) அதைப் பெறுபவர்களுக்குச் செயல்படும்.

பாராட்டுவதில் பொருள், பணம் செலவு இல்லை. பாராட்ட மனம் செயல்பட வேண்டும். அதுவும் உண்மையானதாக பிரதிபலன் எதிர்பார்க்காமல் இருக்க வேண்டும்.

உடனுக்கு உடன் பாராட்டுவது ஒரு கலை. வெகு சிலராலேயே (on the spot appreciation) அத்தகையை பாராட்டுதல்களை வழங்கமுடியும்; அதுவும் இயற்கையாகவே (natural). செயற்கையாகப் பாராட்டுவதை (artificial appreciation) தவிர்ப்பது நலம்.

உண்மையான (sincere approach) மனநிறைவோடு பாராட்டுவது, சிறந்த முறையாகும். பாராட்டைப் பெறுபவர் மகிழ்ச்சி அடைவது அவரது முகபாவனையில் பிரதிபலிக்கும். அவ்வாறு பாராட்டைப் பெறுபவர் மேலும் ஈடுப்பாட்டுடன் செயல்பட, பெற்ற பாராட்டு உதவும்.

பாராட்டு, மற்றவர் செய்யும் சிறிய வேலைகள், அவர்களுடைய நடவடிக்கை, நல் பேச்சுக்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவைகளுக்கு தெரிவிக்கலாம்.

உதாரணமாக சமையல் நன்றாக செய்து இருந்தால், குழந்தைகள் ஹோம் ஒர்க் முடிக்கும்பொழுது, நல்ல ஓவியம் வரைந்திருந்தால், போட்டிகளில் பங்கு பெற்றால் (பரிசு பெறாவிட்டாலும்கூட,) பரிட்சையில் தேர்ச்சி பெறும்பொழுது, உத்தியோக உயர்வு, பிறருக்கு உதவி செய்திருந்தால் போன்ற நிகழ்வுகளுக்காக அவர்களுக்குக் கிடைக்கும் பாராட்டுதல்கள் விலை மதிப்பற்றவை. மேலும், அவர்களுடைய உண்மையான முயற்சிக்காக (sincere efforts) கிடைக்கும் பாராட்டுதல்களின் மதிப்பு பெறுபவர்களுக்கே (receiver) புரியும், தெரியும். பாராட்டுகளைப் பெற்று அனுபவித்தவர்களுக்கு ஏற்படும் மனநிறைவே அலாதியானது.

பாராட்டை அளிப்பவர்களுக்கும் மன நிறைவு (self satisfaction) ஏற்படுகின்றது. அது அளிக்கும் மகிழ்ச்சி எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காது. இதுவும் பாராட்டி அனுபவித்தவர்களுக்கே முழுமையாகப் புரியும்.

பிறரின் நல்ல செயல்களுக்கு, சாதனைகளுக்குப் பாராட்டை தெரிவிப்பதினால் ஒருவரும் குறைந்து போய்விட மாட்டார்கள். பதிலாக பாராட்டு தெரிவிப்பத்தின் மூலம், அந்தப் பாராட்டிற்கு உரியவர்களின் திறமைகளை அடையாளம் கண்டு அங்கீக்கரித்த திருப்தி கிடைக்கும். (get satisfaction for having identified the other person's talents.)

அவ்வகை பாராட்டுகளைப் பெறுபவர்களுக்கு, சற்றும் எதிர்பாரத தருணத்தில் பாராட்டைத் தெரிவித்தால் அதனால் அவர்களுக்கு ஏற்படும் பூரிப்பு தனி ரகமாக இருக்கும்.

பாராட்டு தெரிவிப்பதில் தயங்காமல், சிக்கனம் பார்க்காமல் முழு மனதோடு சில அம்சங்களைக் குறிப்பிட்டு, தாராளமாக பாராட்ட பழகிக்கொள்ளுங்கள்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT