Motivation image 
Motivation

தயக்கம் இன்றி பழகுங்கள் வெற்றி நிச்சயம்!

இந்திரா கோபாலன்

சிலர் எல்லோருடனும் கலகலப்பாக பழகுவார்கள். சிலர் தேர்ந்தெடுத்த சிலருடன் தான் பழகுவார்கள். அதிகமாக எல்லை  மீறி சிலர் பழகிஅவமானத்தை அள்ளிக் கொண்டு வருவார்கள். தன் வயதுக்கொத்த சம வயதுக்காரர்களிடம் மட்டுமே சிலர் பழகுவார்கள். தம்மைவிட வயதானவர் களுடன்  பழக நேர்ந்தால் சிலர் கிண்டலடிப்பார்கள். சிலரது இயல்பு தம்மை விட சின்னப்  பையன்களிடம் மட்டுமே பழகுவார்கள். இவர்களில் யார் செய்வது சரி ?யார் செய்வது தவறு? முதல் விஷயம். தயக்கம் இன்றி பிறருடன் பழகுங்கள்.

விமானத்தில் பேருந்தில்  ரயிலில் பயணம் செய்யும்போது பலர் ஊமைகள் போலவே பயணிப்பது உண்டு. மேலை நாட்டவர்கள் விமானப் பயணம்போது குட்மார்னிங் சொல்லி இன்முகத்துடன்  புன்னகை புரிவார்கள். மேற்கொண்டு பேசுவது உன் விருப்பம் என்று பந்தை நம் பக்கம் தள்ளி விடுவார்கள். தேவையற்ற தயக்கம், கேட்பதா வேண்டாமா  என்ற குழப்பம் , இவை முன்னேற்றத்தின் எதிரிகள். மற்றவரும் மனிதர்தான். அளவாக அறிவாகப் பேசினால்  யாரும் வெறுக்க மாட்டார்கள். மனதிற்குள் இரண்டு மூன்று முறை பேசிப் பார்த்துக் கொண்டு பேசுங்கள்.தவறில்லை.

இராமனால் தூது அனுப்பப்பட்ட அனுமன் சீதையிடம் பேசுமுன் ஒத்திகை பார்த்துக் கொண்டதாக வால் மீகி  எழுதுகிறார். எதிர் தரப்பில் இருப்பவர் பயந்து விடக்கூடாது .வெறுப்படைந்து விடலாகாது. சந்தேகப்பட்டு விட்டால் சகலமும் கெட்டுவிடும். எனவே சொல்லின் செல்வன் ஆகிய அனுமனே ஒத்திகை பார்க்கிறார் என்றால் நாம் ஒத்திகை பார்த்துக் கொண்டு பேசலாமே. தீர்க்கமாக ,தீர்மானமாக  தெளிவாகப் பேசுகிறவர்கள், பழகுகிறவர்கள் அபரிமிதமான வெற்றி அடைவது நிச்சயம்.

ஒருமுறை சுவாமி ராமதீர்த்தர் லண்டன் பயணம் செய்தார். கப்பல் மேல்தளத்தில் நின்று கொண்டிருந்தார். ஐரோப்பியர் ஒருவரும் மேல் தளத்திற்கு வந்தார். சுவாமி புன்னகை புரிந்து அவரிடம் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார். லண்டனில் சுவாமி தீர்த்தர் எங்கே தங்கப் போகிறார் என்று அறிய ஐரோப்பியர் விரும்பினார்.

நண்பர் வீட்டில் என்றார். அவர் முகவரி கேட்க தெரியாது என்றார் சுவாமிகள்.ராம் தீர்த்தர். உடனே இவர் அவரின் இடம் முகவரி இன்றி எப்படி நீங்கள் கண்டுபிடிப்பீர்கள் என்று கேட்டதற்கு சுவாமிகள் அவரைக் கண்டுபிடிப்பது கஷ்டமே இல்லை. இதோ என் எதிரில் நிற்கும் நீங்கள்தான் அந்த நண்பர் என்றார். ஐரோப்பியர் திகைத்து நானா .நான் எப்படி உங்கள் நண்பராக முடியும் என்று இழுத்தார்.சுவாமியோ " நீங்களும்  மனிதன். நானும் மனிதன்.நாம் நண்பராவதற்கு இதைவிட வேறு தகுதி என்ன வேண்டும்." என்றார். ஐரோப்பியரும் மகிழ்ந்து தன் வீட்டில்  தங்க வைத்தார். தயக்கம் இன்றி கூச்சமின்றிப்  பழகுவது வெற்றிக்கான வித்து.

இன்னொரு விஷயம். நம்மைவிட சிறியவர்கள் உடன் பழகினால் மனம் இளமையாக இருக்கும். பெரியவர்களுடன் பழகினால் அறிவு விருத்தி ஆகும். முதியவர்களுடன் பழகினால் வெற்றி கிடைக்கும்.

நம்மை விடச் சிறியவர்களுடன் பழகினால் மனது இளமையாகவும். பெரியவர்களும் பழகினால் அறிவு விருத்தியாகும். சமமானவர்கள் உடன் பழகினால் மகிழ்ச்சி அதிகமாகும். தயக்கம் இன்றிச் பழகுங்கள்.வெற்றி நிச்சயம்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT