Wife is a gift ... Image credit - pixabay
Motivation

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!

க.பிரவீன்குமார்

வாழ்வில் திருப்புமுனை என்பது திருமணமே. அத் திருமணத்தில் கணவன் மனைவி உறவானது ரயில் தண்டவாளங்கள் இணைந்து செல்லும் நெடும் பயணம். எப்படிச் சரியாக வழி நடத்தி செல்வது என்பது இருவர் கையிலுமே உள்ளது. இல்லற வாழ்க்கை நன்முறையில் அமைய உங்கள் வாழ்க்கைத் துணையிடம் இந்த குணங்கள் இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான். அதைப்பற்றி இதில் பார்ப்போம். 

1. உங்களுடைய பணத்தை வீணாகச் செலவு செய்யாமல் அதைக் கொஞ்சம் சேர்த்து வைக்க அறிவுறுத்துவார்கள். எந்த அளவுக்கு என்றால்  அவர்களுக்காகச் செலவு செய்து கொள்வதை விடவும் சேமிப்பு முக்கியமானது என்று, உங்களுக்கு ஒவ்வொரு முறையும் உணர்த்துவார்கள்.

2. கணவன் மனைவி உறவில் அமைதியான உறவை விரும்புவார்கள். ஒருபோதும் ஏன் என்னைப் பார்க்க வரவில்லை? ஏன் என்னிடம் பேசவில்லை? ஏன் என்னைக் கண்டு கொள்ளவில்லை? என்ற விவாதங்களை முன் வைக்க மாட்டார்கள்.  சுமூகமான உறவையே மேற்கொள்ள விரும்புவார்கள்.

3. நீங்கள் ஏதேனும் செயல் ஒன்றை செய்து. அதில் நீங்கள் தவறு செய்துவிட்டாலும் அல்லது தோல்வி அடைந்து விட்டாலும். அதை அவர்கள் தவறாகவும் அவர்கள் தோல்வியாகவும் எடுத்துக்கொண்டு உங்களுக்கு ஒரு ஆறுதலாக இருப்பார்கள். அதை வைத்து உங்களை மதிப்பிடமாட்டார்கள்.

4. வாழ்வில் எந்த ஒரு நல்ல நிகழ்வு நடந்தாலும் தீய நிகழ்வு நடந்தாலும். அதில் உங்களுடனே சேர்ந்து பயணிப்பவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு இடத்திலும் உங்களை விட்டுக் கொடுக்கமாட்டார்கள்.

5. ஆண்களின் மிகப்பெரிய உணர்ச்சி அழுகை. நாம் அழுதால் அவள் என்ன நினைப்பாள் என்று இல்லாமல். அதை தன் மனைவியிடம் எந்த தயக்கம் இன்றி வெளிப்படுத்தலாம் என்ற உணர்வு இருந்ததென்றால், மனைவி நிச்சயமாக அவருக்கு ஒரு நல்ல தோழியாக உள்ளார் என்று அர்த்தம்.

இந்த ஐந்து அறிகுறிகள் உங்கள் மனைவியிடம் இருந்தால் நிச்சயமாக நீங்கள் அதிர்ஷ்டசாலிதான். இல்லை என்றால் கவலைப்படவேண்டாம். இதை நீங்கள் அவர்களுக்குச் செய்தால் போதும் உங்கள் மனைவி, அதிர்ஷ்டமான கணவர் கிடைத்துள்ளார் என்று சந்தோசப்படுவார்.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT