வாழ்க்கை என்பது எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்தது. வாழ்க்கை அமைதியாக சென்று கொண்டிருக்கும்போது திடீரென ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளை சந்திக்கிறோம். Black Swan Events என அழைக்கப்படும் இந்த நிகழ்வுகள், நமது எதிர்பார்ப்புகளை மீறி, கணிக்க முடியாத அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளாகும்.
இத்தகைய நிகழ்வுகள் நம் வாழ்வில் நேர்மறை அல்லது எதிர்மறை மாற்றங்களைக் கொண்டு வந்தாலும், நாம் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வழி வகுக்கின்றன. இந்தப் பதிவில் Black Swan நிகழ்வுகள் நம் வாழ்க்கையை எப்படி சிறப்பாகவோ அல்லது மோசமாகவோ வடிவமைக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
இடையூறு மற்றும் குழப்பம்: கருப்பு ஸ்வான் நிகழ்வுகள் பெரும்பாலும் நம் வாழ்வில் குழப்பத்தையும் இடையூறுகளையும் கொண்டு வருகின்றன. இயற்கைப் பேரழிவுகள், பொருளாதார நெருக்கடிகள், நோய்த் தொற்றுகள் அல்லது தனிப்பட்ட துயரங்கள் நமது நடைமுறை வாழ்க்கையில் குறிப்பிட்ட பல சவால்களை எதிர்கொள்ள நம்மைக் கட்டாயப்படுத்தலாம். இந்த நிகழ்வுகள் மிகவும் மன அழுத்தம், துயரம், பயம், பதட்டம் போன்ற உணர்வுகளை ஏற்படுத்துகின்றன. இதன் மூலமாக சிக்கலைத் தீர்க்கும் திறன், மனவலிமை, நம்மை புதிதாக தகவமைத்துக் கொள்வது போன்ற திறன்கள் வளர்கிறன.
மாற்றம் மற்றும் பிரதிபலிப்பு: இத்தகைய நிகழ்வுகள் நம் வாழ்வில் பெரும்பாலும் ஒரு தடையாய் அமைந்து மாற்றத்திற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது. இவை நம் வாழ்க்கையில் புதிய முடிவுகள், வாழ்க்கை முறைகள் போன்றவற்றை புரிந்துகொண்டு, புதிய வாழ்க்கையைத் தொடங்க வழிவகுக்கிறது. இதன் மூலமாக நம்முடைய இலக்குகள், உறவுகள் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை சிறப்பாக மாற்றுவதற்கான வாய்ப்புகளை வழங்குகின்றன.
நம் வாழ்வில் நடக்கும் மோசமான நிகழ்வுகள் நாம் துன்பத்திலிருந்து எந்த அளவுக்கு வேகமாக மீள்கிறோம் என்ற திறனை சோதிக்கின்றன. புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு காண வேண்டும், கடினமான சூழ்நிலைகளை எப்படி கடந்து செல்ல வேண்டும் என்பதை நமக்கு கற்றுத் தருகின்றன. இப்படி கஷ்டங்களை சமாளிப்பதால் நமது தன்னம்பிக்கை அதிகரித்து தனிப்பட்ட வாழ்க்கையில் வளர்ச்சியை நாம் பார்க்கலாம்.
ஏதோ ஒரு பிரச்சனை என்று வரும்போதுதான் பிறரது உதவியை நம் நாட வேண்டும் என்பது தெரிகிறது. இதன் மூலமாக நாம் எப்போதும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்வோம். யாரோ ஒருவருக்கு நாம் நிச்சயம் உதவ வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை Black Swan Events நமக்கு நினைவூட்டுகின்றன.
எனவே இனி உங்கள் வாழ்வில் ஏதேனும் கஷ்டமான சூழல் ஏற்பட்டால், அதன் மூலமாக நீங்கள் பல விஷயங்களை கற்றுக்கொண்டு முன்னேற முடியும் என்பதை உணருங்கள்.