Motivation image Image credit - pixabay.com
Motivation

"இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம்!"

கல்கி டெஸ்க்

-சுடர்லெட்சுமி மாரியப்பன்

ருணையின் உருவம்

கடவுளின் வெளிப்பாடு

மன்னிப்பின் உச்சம்

மனிதரின் உணர்வு... என நாம் சொல்லி கொண்டே போகும் இரக்க குணம் என்பது நம் அனைவர் வாழ்வில் இருக்க வேண்டிய முக்கிய உணர்வு. பெருகிய முறையில் வேகமான மற்றும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இந்த உலகில், கருணை பெரும்பாலும் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகத்தான் வெளிப்படுகிறது.

மனிதனாக பிறந்ததிற்கு அர்த்தம் வேண்டும் என்றால், நாம் பிறருக்கு செய்யும் ஒவ்வொரு உதவியிலும் இரக்ககுணம் நிறைந்திருக்கும் அல்லவா? அதாவது மன மற்றும் உடல் நலத்தை மேம்படுத்துவது முதல் வலுவான உறவுகளை வளர்ப்பது வரை, கருணையின் தாக்கம் எளிமையான சைகைகளுக்கு அப்பாற்பட்டது.

நாம் எதிர்கொண்ட அதே சூழல்களை மற்றவர்கள் சந்திக்கும்போது அவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். அதே போல் நாம் சந்திக்காத சூழல்களை மற்றவர் சந்திக்கும்போது அவர்கள் நிலையில் இருந்து சிந்தித்து பார்த்து அவர்களின் வலியை உணர்வது  என்பது மிகப்பெரிய கருணை உள்ளம்தான். முக்கியமாக மற்றவர்களின் உணர்வுகளை புரிந்துக்கொண்டு செயல்படுவதுதான் இரக்கத்தின் உண்மையான வெளிப்பாடு.

இரக்க உணர்வினால் ஏற்படும் நன்மைகள்:

ஒருவர் இரக்க குணத்தோடு  இருப்பது அவரை மகிழ்ச்சியாகவும், மிகுந்த பாதுகாப்பு உணர்வோடும் வைத்துக்கொள்ளும் என்று விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் கருணை உணர்வோடு இருப்பதற்கும் மனித ஆயுட்காலத்திற்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதாவது,

1. நீங்கள் இரக்க குணம் உடையவராக இருந்தால் உண்மையில் நீங்கள் வலிமை உடையவராக இருப்பீர்கள்.

2. இறக்கமுடன் இருப்பதால் நம் உடலில் மகிழ்ச்சிக்கான ஹார்மோன் அதிகமாகிறது. இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் பெருகும். இதன் காரணமாகவே மருத்துவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைப் போலவே, கருணை உணர்வோடும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

3. நேர்மறை எண்ணங்களாக உள்ள இந்த இரக்க குணம், நம்மையும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைப்பதற்கு உதவுகிறது.

4.  உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தவும், மன அமைதியை நீங்கள் பெறவும் இரக்க குணம் அவசியமானதாக உள்ளது.

5. குழந்தைகளிடையே பாதுகாப்பான இணைப்பை ஊக்குவிக்கிறது.

 6. மற்றவர்களிடம் கருணை அலையை உருவாக்குகிறது.

7. குழந்தைகளில் பச்சதாபத்தை (பிறர் நிலையில் இருந்து யோசிக்கும் உணர்வு) ஊக்குவிக்கிறது மற்றும் சமூக திறன்களையும் மேம்படுத்துகிறது.

8. உங்களை மற்றவர்களுக்கு கவர்ச்சிகரமானதாக மாற்றவும், மன அழுத்தம் மற்றும் பதட்டத்திலிருந்தும் பாதுகாக்கிறது.

9. நோய் அபாயத்திலிருந்து காத்துக்கொள்கிறது.

10. தனிநபரின் சுய நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது.

எனவே மனிதன் ஆரோக்கியமுடன் வாழ்வதற்கு இரக்ககுணம் இன்றியமையாததாக இருக்கிறது. எனவே, "இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம்" என்ற அன்னை தெரசாவின் பொன் மொழிகளுக்கு ஏற்ப நமக்காகவும் வருங்கால சந்ததியினருக்காகவும் ஒரு பிரகாசமான, இரக்கமுள்ள உலகத்தை உருவாக்குவோம்!

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT