Motivation Image pixabay.com
Motivation

நேரம் நம் வாழ்க்கையில் எப்படியெல்லாம் வீணாகிறது தெரியுமா?

ஜி.இந்திரா

தூக்கம்

தேவைக்கு அதிகமாக தூங்குவதால் நேரம் மட்டுமல்ல ஆரோக்கியமும் வீணாகிறது. ஒரு மாறுதலுக்கு 1மணி நேரம் தாமதமாக படுக்கச் சென்று1மணிநேரம் முன்னதாக எழுந்திருக்கலாமே.

வெறும் சோம்பல்

டற் சோம்பல், மனச் சோம்பல்  எதுவானாலும் பொழுது பயனற்றுப் போகிறது. எந்த வேலையும் நடை பெறவில்லை.  எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. எப்படி முன்னேற்றம் வரும்.

எதிலும் தெளிவில்லை

ந்த லட்சியமும் இல்லை. எண்ணங்களில் தெளிவில்லை. எதிலும் தீவிரமாய் இல்லை. தினமும் காலையில் எழுந்தால்  என்ன செய்யலாம் என்று தெரியவில்லை. செயல் திட்டங்களில் ஆரம்பம் முதல்  கடைசி வரை தெளிவில்லாமல் இருந்தால்  நேரம் இறக்கை கட்டிப் பறந்து விடும். நமது வளர்ச்சிக்கு உதவாத  செயல்களில் எல்லாம் ஈடுபட்டுக் கொண்டிருந்தால்  வருடங்களே கூட வீணாகலாம்.

காலம் கடத்துவது

நினைத்தோம் முடித்தோம்  என்று இல்லாமல் அவர் வரட்டும், நல்ல நாள் நேரம் வரட்டும், சனிப் பெயர்ச்சி நடக்கட்டும், குரு வரட்டும், இருக்கும் வேலைகள் முடியட்டும் என்று  வரிசையாக காரணங்களைக் கண்டுபிடித்து மணிகளை,நாட்களை, ஓட்டுபவர்கள் வீணாக்குகிறோம் என்று தெரியாமலேயே  வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒத்திப் போடுவது

ன்ன ஆகுமோ என்ற விளைவுகளைப் பற்றிய பயம், என்ன நினைப்பார்களோ என்ற விமர்சனம் பற்றிய பயம், எப்படி ஆரம்பிப்பது, யாரை அணுகுவது, இப்ப என்ன அவசரம்  என்று இப்படி பல காரணங்களால் காரியங்களை ஒத்திக் போட்டுக் கொண்டிருந்தால் காலம் போன காலத்தில் கடவுளே நினைத்தாலும் காப்பாற்ற முடியாது. 

தயக்கம்

ல்ல திட்டம் இருக்கும். ஆனால் தன் மீது முழு நம்பிக்கை இல்லாததால் திட்டம் பற்றிய சந்தேகம் முழுமையாக  போகாததால்   வருடங்களை விழுங்கிக் கொண்டிருப்பவர்கள்  வளர்ந்து கொண்டிருப்பவர்களைப் பார்த்து  நின்ற  இடத்திலேயே  நிற்க வேண்டடியதுதான்.

முடிவெடுத்தல்

முடிவெடுக்கும் காலத்தை ஓட்டுவது, தவறாக முடிவெடுப்பது. இதெல்லாம் எங்கே கொண்டு விடும் ? இன்று முடி வெட்டலாமா, இக் கடிதத்தை இன்று எழுதலாமா, இன்று என்ன கலர் டிரஸ் போடலாம்  என்று தினசரி காரியங்களுக்கெல்லாம் முடிவெடுக்கத் திணறினாள் தாமதம் செய்தால்  நேரம்  என்ன நின்று கொண்டா இருக்கும்.?.

இப்போது தெரிகிறதா நம்முடைய நேரம் எப்படி தொலைகிறதென்று...

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு!

SCROLL FOR NEXT