Lamborghini car Image Credits: Peakpx
Motivation

இவர்பட்ட அவமானம்தான் Lamborghini car உருவாகக் காரணம் தெரியுமா?

நான்சி மலர்

நாம் பட்ட அவமானங்களை எப்படி துடைக்க வேண்டும் தெரியுமா? வெற்றியின் மூலமாகத்தான். இந்த நபரை மட்டும் Ferrari company founder அவமானப்படுத்தாமல் இருந்திருந்தால்,  இன்று உலகத்திலேயே சொகுசு காராக கருதப்படும் Lamborghini கார் உருவாகியிருக்க முடியாது. இதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

Ferruccio Lamborghini 1916 இத்தாலியில் ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில்தான் பிறக்கிறார். இவருக்கு சிறுவயதிலேயே மிஷின்கள் மீது ஆர்வம் ஏற்படுகிறது. சரியாக இவர் படித்து முடித்ததும், இரண்டாம் உலகப்போர் ஆரம்பம் ஆகிறது. எனவே, மிலிட்டரி Airforce ல் ஒரு சின்ன மெக்கானிக்காக வேலை பார்க்க தொடங்குகிறார். அங்கே இவர் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்கிறார். இப்போது போர் முடிந்ததும் நிறைய மக்கள் விவசாயம் செய்ய தொடங்குகிறார்கள்.

அதில் சில பணக்காரர்களிடம் மட்டுமே டிராக்டர் இருந்தது. இதை கவனித்த Lamborghini இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்திய ஸ்பேர் பார்ட்ஸை குறைந்த விலைக்கு வாங்கி எல்லோராலும் வாங்கக்கூடிய டிராக்டரை 1948 ல் உருவாக்குகிறார். மக்கள் மத்தியிலே இது நல்ல வரவேற்பு பெறுகிறது. சில வருடங்களிலேயே பெரிய டிராக்டர்  கம்பெனியாக உருவாக்குகிறார்.

இப்போதுதான் Lamborghini வைத்திருக்கும் ஒரு Ferrari காரில் அதிகமாக கிளட்ச் பிரச்னை வருவதை கவனிக்கிறார். இந்த ஒரு பிரச்னையை மட்டும் சரிசெய்துவிட்டால் உங்கள் காரின் விற்பனை எங்கோ சென்றுவிடும் என்று லம்போர்கினி Ferrari founder இடம் சொல்லும் பொழுது அவர் பதிலுக்கு இவரிடம் சொன்னது என்ன தெரியுமா?

ஒரு சாதாரண டிராக்டர் உருவாக்குகிற நீயெல்லாம் எனக்கு அறிவுரை சொல்கிறாயா? என்று கடுமையாக அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார். இதனால் கடுப்பான லம்போர்கினி Ferrari ஐ விட ஒரு சூப்பரான காரை உருவாக்குகிறேன் என்று சவால்விட்டு விட்டு வந்த லம்போர்கினி 1963ல் Lamborghini 350 GTV என்ற முதல் காரை உருவாக்குகிறார்.

அந்த காரினுடைய வெற்றியை தொடர்ந்து நிறைய மாடல்களை கொண்டு வருகிறார்கள். சில வருடங்களிலேயே Ferrariஐ விடவுமே அதிகமான காரை விற்பனை செய்யும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்கள். இன்றைக்கும் ஆடம்பர கார்களில் ஒன்றாக Lamborghini இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரிவென்ஜ்னா இப்படித்தான் இருக்கனும் இல்லையா? அவமானங்களை துடைப்பதற்கு அதைவிட பெரிய வெற்றி பெறுவதுதான் சிறந்த வழியாகும்.

ஏன் சீனாவைப் போல இந்தியா வளர்ச்சி அடையவில்லை தெரியுமா? 

கோயில்கள் செய்த கின்னஸ் சாதனைகள் தெரியுமா?

வயதான தோற்றத்தை துரிதப்படுத்தும் 10 வகை உணவுகள்!

இது பன்றியா? ஆடா?... ஒரே குழப்பமா இருக்கே! 

வாகன ஓட்டிகளுக்கான மழை கால எச்சரிக்கை!

SCROLL FOR NEXT