1. உங்களுடைய வாழ்க்கையில் காசு, பணம் என்று சம்பாதித்து நல்ல நிலையில் நீங்கள் இருந்தாலுமே அதை முழுமையான வெற்றி என்று சொல்லிவிட முடியாது. எப்போதுமே காசு, பணம் சம்பாதிப்பதை விட அதை தேவையானவற்றிற்கு எப்படி நல்ல விதத்தில் செலவு செய்து பாதுகாக்கிறோம் என்பதிலேயே உண்மையான வெற்றி அடங்கியுள்ளது.
2. இந்த உலகத்திலேயே மிகவும் மோசமான போதை கம்ஃபர்ட் ஸோனில் இருப்பது தான். கம்ஃபர்ட் ஸோனில் இருந்து பழகிய ஒருவரால் நிச்சயமாக வளர முடியாது. அவர்கள் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டுமெனில் கம்ஃபர்ட் ஸோன் என்னும் போதையிலிருந்து வெளிவர வேண்டும்.
3. அதிகமாக மக்கள் தங்கள் வாழ்க்கையில் டிப்ரஸனை கொண்டு வருவதற்கான காரணம் தன்னை அடுத்தவர் களுடன் ஒப்பிட்டு பார்ப்பதாலேயேயாகும். ‘அவங்ககிட்ட எல்லாம் இருக்கு என்கிட்ட எதுமேயில்லையே’ என்று யோசித்து ஸ்ட்ரெஸ் ஆவதை விடுத்து அடுத்து என்ன செய்தால் வாழ்க்கையில் உயரலாம் என்று யோசித்தாலே ஜெயித்து விடலாம்.
4. நம்மால் எல்லோரையுமே 100% சந்தோஷப்படுத்த முடியாது. ஒருத்தவங்களுக்கு பிடிச்சது இன்னொருத்த வங்களுக்கு பிடிக்காது. இதுதான் மக்களுடைய குணம் அதை புரிஞ்சிக்கணும். அதைவிட்டுட்டு எல்லோரையும் சந்தோஷப்படுத்த நினைத்தால் நம்மையே நாம் இழக்க வேண்டியிருக்கும். அதை புரிந்து கொண்டு நடந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
5. நம்முடைய வாழ்க்கையில் இதுதான் ஒருவருடைய எல்லை என்று வகுக்க எதுவுமில்லை. நம்முடைய எல்லை எதுவரை என்பதை நம்முடைய மனமே முடிவு செய்கிறது. எனவே யாரேனும் நம்முடைய எல்லையை வரையறுக்க முயற்சித்தால் அதை ஏற்றுக்கொள்ளாதீர்கள்.
6. உங்களுக்கு என்று ஒரு கனவை வைத்து கொண்டு அதை நோக்கி பயணியுங்கள். நம்முடைய கனவை நாம் செயல்படுத்த போராட போகிறோம். இதில் அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசிப்பது நம்முடைய கனவை நாமே கொல்வதற்கு சமமானது.
7. உங்களுடைய முதல் அடி சின்னதாக இருப்பதை நினைத்து வருத்தப்படாதீர்கள். எடுத்ததுமே அகலக்கால் வைப்பது அறிவான செயலாகாது. மிகவும் உயரத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் முதல் அடி வைப்பதை பற்றியே யோசிப்பார்கள். அப்படி வைக்கும் அடி சிறியதா அல்லது பெரியதா என்பதில் கவலையில்லை. ஏனெனில் எதுவுமே செய்யாமல் இருப்பதற்கு ஏதேனும் செய்வது சிறந்ததல்லவா?
8. வாழ்க்கையில் வெற்றியை எந்த அளவுக்கு கொண்டாடுகிறோமோ அதே அளவு தோல்வியையும் கொண்டாடுங்கள், ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் அது தான் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்ற தூண்டுதலை கொடுக்கும் முதல் படியாகும். இந்த 8 ரூல்ஸையும் உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்து பாருங்களேன். நிச்சயமாக நீங்களும் மாற்றத்தை உணருவீர்கள்.