Motivational articles 
Motivation

உங்கள் திறமையை தேக்கி வைக்காதீர்கள்!

இந்திரா கோபாலன்

ல திறமையானவர்களை நீங்கள் கவனித்திருக்கலாம். கிடு கிடுவென்று உயர்ந்து வருவார்கள்.  சடாரென்று ஒரு கட்டத்தில் நிலைகுத்தி நின்று விடுவார்கள். கிடைத்திருப்பதை விட்டு விடக் கூடாது என்று அச்சத்துடன்  கெட்டியாக பிடித்துக் கொண்டு விடுவார்கள். அதற்கு அப்புறம் வளர்ச்சி எப்படி இருக்கும்?. 

குட்டி மண்தொட்டியில் வேரோடு  வைத்து விற்கப்பட்ட மண் தொட்டியை வாங்குகிறீர்கள்.  பத்திரமாக நிழலில் வைத்துப் பார்த்துக் கொண்டால் அது ஓரளவுக்கு வளரும். பிறகு ஒரு கட்டத்தில் போதிய இடமின்றி  அது தன் வளர்ச்சியை குறுக்கிக் கொள்ளும். அதே செடியை பூமியில் நட்டிருந்தால் இது பெரிய விருட்சமாக மாறி  கிளைகளை எல்லா திசையிலும் அனுப்பியிருக்கும். உங்கள் வாழ்வும் அப்படித்தான். வளர வேண்டும் என்ற முனைப்பு உங்களுக்குள் இருக்கிறது.   இப்போதிருக்கும் மணல்தொட்டியை நீங்கள் உடைக்கப் தயங்குவதால் செடி வளர முடியாமல் தவிக்கிறது. உங்களைச் சுற்றி  நீங்களே பின்னக் கொண்டிருக்கும் வலைகளில் இருந்து விடுபட்டால்தான் வளரச்சி என்பது சாத்தியம். 

அரசனைத்தேடி ஒரு இளைஞன் அவ்வப்போது அரண்மனைக்கு வருவான்.  அவனுக்கு ராஜமரியாதை தந்து நிறைய செல்வங்கள் கொடுத்து அனுப்புவான் அரசன். அத்தனையும் தொலைத்துவிட்டு மீண்டும் வந்து நிற்பான். அரசனும் முகம் கோணாமல் அவனுக்கு வாரி வழங்குவார். ஒருமுறை அமைச்சர் "மன்னா, நீங்கள் தரும் செல்வத்தை தவறான நண்பர்களோடு வீணடித்து வருகிறான்.  எதற்காக மீண்டும் மீண்டும் அவனுக்கு தருகிறீர்கள்" என்றான்.  அதற்கு அரசன்" அமைச்சரே, நான் பிறந்தபோதே என் தாய் இறந்து போனாள். அரண்மனைப் பணியில் இருந்த இவன் தாய்தான் எனக்கு தாய்ப்பால் கொடுத்து  வளர்த்தாள். அதனால் இவனை என் சகோதரனாகவே நினைக்கிறேன்" என்றார்.

அடுத்தமுறை அந்த முட்டாள் இளைஞன் மன்னனிடம் "உன்னைச் சுற்றி புத்திசாலிகள் இருப்பதால்தான் என்னைவிட மேன்மையாக இருக்கிறாய். அந்த அமைச்சரை என்னுடன் அனுப்பு. என்னாலும் ராஜ்யம் ஆகமுடியும்" என்றான். அரசன் திணறினான். உடனே அமைச்சர் "உங்களுடன் பால் குடித்து வளர்ந்த சகோதரனுக்கு உதவ என் சகோதரனை அனுப்புகிறேன்" என்றார்.

மறுநாள் ஒரு எருமைக்கடாவை இழுத்து வந்தார். எல்லோரும் சிரிக்க அமைச்சர் "இவனும் நானும் ஒரே எருமைக்தாயின் பாலைத்தான் குடித்தோம். மன்னனின் சகோதரனுக்கு அமைச்சராக இருக்க  இந்த சகோதரனை அனுப்புகிறேன்" என்றார்.

நாம் ஒரே தாயின் பாலை குடித்து வளர்ந்திருக்கலாம்.  ஆனால் நம் உடலை, மனதை, உணர்ச்சிகளை எப்படி திறம்பட பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்துதான் நம் வளர்ச்சி அமையும்.

உலக நடப்பை அறிந்து வைத்திருக்கும்  நீங்கள் உன் உங்களுடைய திறமையின் வீச்சு பற்றி முழுமையாகத் தெரியுமா? திறமையை இருபத்தி நாலுமணி நேரமும் கூர்மையாக வைத்திருக்க முதலில் பயிற்சி செய்ய வேண்டும். பழக்க வசத்தால் அது உங்கள் இயல்பான குணமாகிவிடும். பிறகு எந்த சந்தர்ப்பத்திலும் பயன்படத் தயாராக இருக்கும். மோட்டார் வாகனத் தொழிலில் சாதனை புரிந்த ஹென்றிஃபோர்டை ஜீனியஸ் என்று சொன்னபோது அவர் "அதிமேதாவித்தனமாவது மண்ணாங்கட்டியாவது, உங்களிடம் இருக்கும் அதே புத்திசாலித்தனம்தான் என்னிடமும் இருக்கிறது. உழைத்து அதை நான் பயன்படுத்தினேன் அவ்வளவுதான்" என்றார். 

கிடங்கில் குறிக்கப்பட்டிருக்கும் தானியம் விநியோகம் செய்யப்படாத வரை அது மக்கி குப்பைக்குதான் போகும். அதேபோல் திறமைகளை தேக்கி வைக்காமல் பயன்படுத்திக் கொண்டே இருந்தால்தான் பலன் புதிய வாய்ப்புகளை துணிச்சலோடு எதிர்கொள்ளப் பழகினால்தான் உங்கள் திறமையும் முழுமையாக பரிமளிக்கும்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT