motivational article Image credit - pixabay
Motivation

வெற்றி அடைய கனவு காணுங்கள்!

இந்திரா கோபாலன்

னவு காண்பவற்றை அடைய முடியும் என்று உறுதியாக நம்புங்கள். முடியாது என்ற எண்ணம் தள்ளியே இருக்கட்டும். கனவை நனவாக்கும்வரை நான் ஓயமாட்டேன் என்று சூளுரைத்து முன் சென்றால் எதிர்ப்புகள் தவிடு பொடியாக்கிவிடும். முன்னேற்றம் விரைவாக வரும். கனவு காணும் அந்த எண்ணத்தை நீங்கள் அடைவதாக மனதால் உணருங்கள். மனது, உடல், செயலும் கனவை நனவாக்கும் முயற்சியில் இணைந்திருக்க இது உதவும். உங்கள் கனவினை அடைய தேவையான அறிவைப் பெறுங்கள். அதை நோக்கிய பயணத்தில் ஏற்படும் தோல்விகளை அனுபவம் ஆக்குங்கள்.  இறுதிவரை நோக்கம் குறித்த ஐயம் எழாமல் இருக்க வேண்டும்.

கனவுகள் குறித்த எண்ணங்களை தகுந்தவர்களிடம் வெளிப்படுத்தத் தயங்கக் கூடாது. அந்தக் கனவுகளை எழுதி படித்துப் பாருங்கள். மனதின் கனவுகள் மனக்கோட்டைக்குள்ளேயே இருந்து விடுவது நல்லதல்ல. கனவை அடைய விரும்புகிறவர்கள் அந்த மனக்கோட்டையைத் திறக்கிறார்கள். கனவுகளை வெளிப்படுத்தும்போது அக்கனவுகளைச் சென்றடைவதற்கான பாதைகளும் திறக்கும். கனவுகள் நிஜமாக வேண்டுமெனில் அதற்கான திட்டங்கள் வரைய வேண்டும்.

எதை நோக்கி திட்டமிடுகிறோமோ அதையே பெறுகிறோம். திட்டங்கள் அறிவுபூர்வமாக வரும், திறமையாகவும், நிகழ்வாகும் கூடியதாகவும் இருக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப திட்டங்களில் மாறுதல் கொண்டு வரலாம்.  இறுதி இலக்கு குறித்த கண்ணோட்டம்  நிலையாக இருந்து, அதற்காகத் திட்டமிடும் போது  கனவு நன்றாகத்தான் செய்யும். தற்செயலாக எதுவும் நடக்காமல் இருக்க திட்டமிடல் மிகவும் உதவும். மொத்த திட்டத்தையும்  நிகழ்வாகும் கூடிய சிறு சிறு திட்டமாக்கிச் செயல் படுத்துங்கள். கனவை அடைய குறிப்பிட்ட காலக் கெடுவை திட்டமிடுங்கள்.

திட்டம் ஏட்டளவில் இருந்துவிட்டால் பயன் ஏதும் இல்லை. திட்டம் வகுத்து பின்  அத்திட்டத்தை உறுதியாக, மனமாறச் செயல் படுத்துங்கள். மற்றவர்கள் ஓய்வெடுக்கும்போது நீங்கள் முன்னேறுங்கள். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்  நீங்கள் உங்கள் கனவை அடைய உதவும். எனவே முயற்சியில் தொய்வு ஏற்படக்கூடாது. பயணத்தில் மகிழ்ச்சியைக் காணுங்கள். பயணத்தை ரசிக்கும்போது பயணம் சுமையாகாது. படிப்படியாக, நிமிடம் நிமிடமாக, முயற்சிகள் உங்கள் இலக்கை அடைய வைக்கும். நீங்கள் எதிர்பார்த்ததை போல் உங்கள் கனவு உங்களுக்கு தெரிவித்தது போல் நீங்கள் வெற்றியாளர் ஆவீர்கள்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT