congratulations 
Motivation

தயங்காமல் பாராட்டி உற்றசாகப்படுத்துங்கள்!

வாசுதேவன்

பாரட்டுதல் ஏற்படுத்துவது பரவசம் மட்டும் அல்லாது பலனும் அளிக்கும். பலர் பாராட்டை எதிர்பார்த்து காத்து இருப்பது மறக்க முடியாத உண்மை. பாராட்டுவது ஒரு கலை. அதுவும் மனதார பாராட்டுவது தனிசிறப்பு பெரும்.

பாராட்டைப் பெறுபவரின் மனம் மகிழும். உள்ளம் குளிரும். அதன் பிரதிபலிப்பு அவரது முகத்தில் புன் சிரிப்பாக மாறி, நன்றிகள் கூறும் மன நிறைவோடு.

அது மட்டும் இல்லாமல் சூழ்நிலையே பிரகாசமாக தோற்றம் அளிக்கும் அந்த பாராட்டைப் பெற்றவருக்கு.

அதேசமயம் பாராட்டை தெரிவித்தவர்க்கும் மனநிறைவு ஏற்படும்.

பெற்றவர், தெரிவித்தவர் இருவருக்கு மட்டும் ஒருவித புது உணர்வு ஏற்படுத்தி motivate ஆக உதவும்.

இந்தகைய அனுபவங்களை வார்த்தைக்களினால் விவரிப்பது என்பது கடினம்.

பாராட்டிய நிகழ்வால் ஏற்படக்கூடிய ரிசல்ட்டுக்கள். பாராட்டைப் பெற்றவருக்கு உற்சாகம் ஏற்படும்.

மேலும் ஈடுபட்டு செய்யவேண்டும் என்ற சுயசிந்தனை வலுப்படும். நம்மாலும் முடியும் என்ற எண்ணம் ஏற்பட்டு புது உத்வேகத்துடன் செயல்பட தூண்டும்.

ஆர்வம் அதிகரிக்க செய்து மேலும் கற்றுக்கொண்டு அவற்றை உபயோகிக்கவும், முயற்சி செய்யவும் வழி வகுக்கும்.

ஆக மொத்தம் பாராட்டைப் பெற்றவர்களுக்கு நேர்மறை சிந்தனை அதிகரித்து செயல்பட தூண்டும்.

பாரட்டுப்பவர்கள் உண்மையான எண்ணத்தோடு சிறிதும் தயக்கம் காட்டாமல் பாராட்ட வேண்டும்.

பாராட்டுவதில் சிக்கனம் கடைப்பிடிக்காமல் தாராளம் காட்டி பாராட்டுவது சிறப்பாக இருக்கும்.

செயல்பட்டவரின் நிறைகளை சுட்டிக்காட்டி அவர் மேலும் ஈடுபட்டு செயல்பட தூண்டும்.வகையில் அமைய வேணடும் பாராட்டுதல்கள்.

கைதட்டி அல்லது முதுகில் தட்டி பாராட்டுவது, சாதித்தவர் செய்த செயல்பாட்டை சுட்டிக் காட்டி, உயர்வாக பேசி பாராட்டுவது என்பது வேறுபடும, ஒவ்வொருவரின் சாதனைகள், சூழ்நிலைகள் ஆகியவற்றைப் பொறுத்து.

பாராட்டுபவர்கள் பிரதிபலன் எதுவும் எதிர்பார்க்காமல், மனதார, உடனடியாக (spontaneous appreciation from the heart) பாராட்ட பழகிக் கொண்டால் அதன் மூலம் கிடைக்கும் மனநிறைவு தனி லெவல்.

பத்தே நிமிடத்தில் சுடச்சுட வெஜ் கட்லெட்டும், சோயா கட்லெட்டும் செய்வோமா?

குழந்தைகளிடம் அடிக்கடி கேள்வி கேட்கும் பெற்றோரா நீங்க? அப்போ இதை நோட் பண்ணிக்கோங்க!

குறுநாவல்: 'அம்புஷ்' அத்தியாயம் - 5

நம் கைகளையும் கொஞ்சம் கவனிப்போமா?

சுவாமி ஐயப்பன் வேட்டையனாக காட்சித்தரும் இடம் எது தெரியுமா?

SCROLL FOR NEXT