Focus.
Focus. 
Motivation

முதலில் இந்த 10 விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.. பின் சுய பொறுப்புணர்வு தானாக வரும்.

பாரதி

வாழ்க்கை என்பது சந்தோசம், நிம்மதி, தேவையானவை இருக்கும்போது முழுமைடையும். அதுவும் தனியாக இருக்கும்போதுதான். ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் தனிமை என்பது யாரோ ஒருவரால் நம்மிடமிருந்துப் பறிக்கப்படும். அதேபோல் சில சூழ்நிலைகளில் நிறைய மனிதர்களுடனும் தொடர்பில் இருப்போம். அந்த சமயங்களில் வாழ்க்கையில் முழுமடைய சில விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அது எந்தெந்த விஷயங்கள் என்பதைப் பார்ப்போம்.

1. காதலில் கவனம்:              

 உங்களுடைய அன்பிலும் உங்களே மேல் வைக்கும் அன்பிலும் அதிகம் கவனம் செலுத்துவந்து மிகமிக அவசியம். நீங்கள் பிறர் மேல் அன்பு வைப்பதால் அவர்களின் வாழ்விலும் பெரிய தாக்கம் ஏற்படலாம். அதேபோல் நீங்கள் தனிமையில் இருக்கும் நேரத்தில் உங்கள் மேல் அன்பு வைப்பவர்களால் உங்களுடைய வாழ்விலும் மாபெரும் தாக்கம் ஏற்படலாம். ஆனால் எப்போதும் ஒன்றை நியாபகப்படுத்திக்கொள்ளுங்கள், அன்பு மற்றும் காதல் என்பது பரிமாறுதலே, அடிமையாவது கிடையாது. அடிமையாகிவிட்டால் இரண்டு தரப்பினறுக்குமே ஆபத்துதான்.

2. நன்றியுணர்வில் கவனம்:

நன்றியுணர்வு என்ன அவ்வளவு முக்கியமா? என்று கேட்டால், கட்டாயம் மிகவும் முக்கியமானதுதான். ஏனெனில் இந்த உணர்வுத்தான் ஒருவரின் குணத்தை மற்றவர்களுக்கு வெளிக்காட்டுகிறது. அதற்கும் மேல் நம்பிக்கைக்கும் அன்புக்கும் அடித்தளமாகி நமது வளர்ச்சிக்கும் துணைப்புரிகிறது.

3. குணமாவதில் கவனம்:

ஒவ்வொரு முறையும் அடிப்பட்டு குணமாகும்போதும் மறுப்பிறவி எடுக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். முயற்சிகள் தோல்வியடையும்போது அடுத்த முயற்சிக்கு உதவுவதுதான் இது.

4. இலக்கில் கவனம்:

உங்கள் வாழ்க்கைக்கான நோக்கத்தைக் கண்டுப்பிடித்தால் கட்டாயம் உங்களின் இலக்கை கண்டுப்பிடித்து விடலாம். இலக்கை அடையும் பாதையிலிருந்து விலகாமல் இருக்க அந்த இலக்கில் கவனம் செல்லுத்துங்கள்.

5. ஆரோக்கியத்தில் கவனம்:

மன வலிமையிலும் நமது இலட்சியத்திற்கான பாதையில் செல்ல உதவி செய்யும் உடல் வலிமையிலும் எப்போதும் கவனம் வேண்டும். மனதளவில் நீங்கள் உறுதியாக இருக்கும்போது உடல் உறுதியில்லை என்றால் அனைத்தும் வீணாகிவிடும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

6. நேரத்தில் கவனம்:

ஓரு விஷயத்தை நாள் முழுக்க செய்வதும் தவறு. அதேபோல் ஒரு விஷயத்தை வேக வேகமாக செய்து அரைகுறையாக முடிப்பதும் தவறு. திட்டமிட்ட நேரத்தில் திட்டமிட்டப்படி முடிக்க உங்களை பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.

7. உறவுகளில் கவனம்:

உறவுகளை உண்டாக்குவது சுலபம். ஆனால் உறவுகளுக்குள் மனக்கசப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்வதுதான் மிகவும் கடினம். எந்த வேலைகளில் இருந்தாலும் முக்கியமான உறவுகளுடன் தொடர்பில் இருப்பது அவசியம்.

8. சந்தோசத்தில் கவனம்:

உங்களுடைய சந்தோசத்தின் சாவி உங்களிடம் தான் உள்ளது. முக்கியமான நேரங்களில் அதனைத் தவறவிட்டீர்கள் என்றால் அதை நினைத்து பிற்பாடு வருத்தப்படுவீர்கள். ஆகையால் எந்த விலைக்கும் உங்கள் சந்தோசத்தை இழந்துவிடாதீர்கள்.

9. விழும்போது கவனம்:

ஒரு விஷயத்தில் முன்னேறும்போது இருக்கும் கவனம், விழும் சமயங்களில் அதிகமாகவே இருக்க வேண்டும். விழத்தொடங்குவதற்கு முன்னரே எதில் தவறு செய்கிறோம் என்பதில் கவனம் செலுத்தினால் விழுவதிலிருந்து தப்பிக்கலாம்.

10. மனநிலையில் கவனம்:

மேல் சொன்ன அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்தினாலே போதும் மனநிலை தானாக தன்னைக் கவனித்துக் கொள்ளும்.

இந்த விஷயங்களில் எல்லாம் எப்போதும் கவனத்துடன் இருந்தாலே சுயபொறுப்புணர்வு தானாக வளர்ந்துவிடும்.

அறிவிற்கு விருந்தாகும் டொராணோவின் 2 அருங்காட்சியகங்கள்!

Food for Hair Growth: முடி வளர Diet-ல் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்!

முன்னேறுவது முடிவு அல்ல!

உயிருக்கு உலை வைக்கும் உணவுகள்!

தெக்கத்து சட்னி மற்றும் பீட்ரூட் சட்னி செய்யலாம் வாங்க!

SCROLL FOR NEXT