motivation image
motivation image Image credit - pixabay.com
Motivation

நன்றி சொல்லிப் பாருங்கள்... நீங்கள் உயர்வீர்கள்!

பொ.பாலாஜிகணேஷ்

னித பண்புகளிலேயே மிக உயர்ந்த பண்பு நன்றி கூறுதல். நான் பிறருக்கு கூறும் நன்றியால் என்ன லாபம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். நீங்கள் நன்றி கூறும் இடத்தில் உயர்ந்து நிற்கிறீர்கள். அந்த உயரம் உங்களுக்கு தெரியாது. நன்றி கூறினால் உங்கள் இமேஜ் மட்டும் அல்ல உங்கள் வாழ்க்கையின் வளர்ச்சியும் உயரும்.

நன்றி' என்ற வார்த்தை தமிழ் அகராதியிலே மிகவும் வலிமையான வார்த்தை என்றே கூறலாம். நாம் ஒருவருக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பின்றி செய்கிற உதவியாக இருந்தாலும், நமக்கு மற்றொருவர் செய்கின்ற உதவியாக இருந்தாலும், 'நன்றி' என்ற வார்த்தையின் அடிப்படையிலேயே செய்யப்படுகிறது.

''நன்றியையும் பாராட்டையும்'' மனதில் நினைத்தால் மட்டும் போதாது. உடனே அதை வெளிப்படுத்த வேண்டும். நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவருக்கு அதை உடனே தெரிவித்து விட வேண்டும்.

நன்றி, பாராட்டு உரியவருக்குக் கொடுக்கும் போதுதான் அவர்கள் மீண்டும் அதைக் கூடுதல் மதிப்புடன் நமக்குத் திருப்பிக் கொடுப்பார்கள்.

நாம் மற்றவர்களுக்கு நன்றியுள்ளவராக இருந்து, அதை உடனே தெரிவிப்பதன் மூலம், அவர்கள் நமக்கு மீண்டும் கூடுதல் உதவியைச் செய்வார்கள்.

உங்களது நன்றியைத் தெரிவிக்காவிட்டால், அத்துடன் அவர்களின் தொடர்பு முடிந்து போகவோ அல்லது அவர்களின் உதவி குறைந்து போகவோ கூடும்.

"தேள் ஒன்று கங்கையில் மிதந்து சென்றது. அதன் மீது பரிதாபப்பட்ட ஒருவர், அதை எடுத்து வெளியில் விட முயன்றார். அது அவரைக் கொட்டி விட்டு மறுபடியும் நீரில் விழுந்தது. மீண்டும் எடுத்து விட்டார். மீண்டும் அது கொட்டிற்று. 'ஏன் இப்படிச் செய்தீர்கள்?' என்று வேறு ஒருவர் கேட்டார். அதற்கு அவர் சொன்னார்.

கடைசி வரை அது தன் சுபாவத்தை விடவில்லை. அதுபோல நன்றி செய்கின்ற எனது கடமையில் இருந்து தவறவில்லை' என்றார்.

நன்றி சொல்லும்போது அதை உண்மையாகச் சொல்லுங்கள். நன்றியைத் தெளிவாகவும் திருத்தமாகவும் சொல்லுங்கள்.

நன்றி சொல்லும்போது வார்த்தைகளை விழுங்காதீர்கள். முணு முணுக்காதீர்கள். மகிழ்ச்சியுடன் நன்றி சொல்வது, உங்களின் சொல்லில் வெளிப்பட வேண்டும்.

நன்றி சொல்பவரை, நேருக்கு நேர் அவர் கண்களைப் பார்த்துச் சொல்லுங்கள். நேருக்கு நேர் பார்ப்பது, கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்கும். சரியான இடத்தில் முறையாக நன்றி சொல்லும் பழக்கம் உங்களுக்கு ஒரு வாழ்நாள் முழுமைக்குமான சொத்தாக இருக்கும்.

வாழ்க்கையில் இனி சந்தர்ப்பங்களில் நாம் நன்றி சொல்ல வேண்டிய தருணங்களில் நன்றி சொல்வோம். வாழ்க்கையில் உயர்வோம். நன்றி!

வீட்டில் வைக்கக்கூடிய விதவிதமான அழகு ஜன்னல்கள்!

ஹெலிகாப்டர் பெற்றோரின் 8 அறிகுறிகள் எவை தெரியுமா?

“தால் பாத்தி சுர்மா” இராஜஸ்தானின் பாரம்பரிய உணவு!

எதிர்மறை எண்ணங்களை விரட்டுவது சுலபமே!

குழந்தைகளுக்கு கட்டாயம் சொல்லித்தர வேண்டிய வெளி பாதுகாப்பு குறிப்புகள்!

SCROLL FOR NEXT