problems... 
Motivation

எப்படித்தான் இந்த பிரச்னைகளையெல்லாம் சமாளிப்பது…?

ம.வசந்தி

வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ஏதாவது ஒரு பிரச்னையை நாம் எதிர்நோக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கட்டாயம் என்று சொல்வதன் அர்த்தம் என்றால் பிரச்னைகள் இல்லாத மனித வாழ்வே கிடையாது என்பது உறுதிப்படுத்தப்பட்ட உண்மை.

ஆனாலும், பிரச்னை என்று வந்தவுடன் நாம் என்ன செய்கிறோம்..? முதலில் அதை எதிர்கொள்வதற்கே தயங்குகிறோம். சிலர் பிரச்னை  என்று ஒன்று வந்திருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்வதற்குக் கூட தயங்குகிறார்கள். பிரச்னைகளில் இருந்து தப்பித்துக்கொள்வதற்குதான் பெரும்பாலான மக்கள் முயற்சிக்கிறார்கள். எப்படியாவது பிரச்னைகளைத் தவிர்த்துவிட்டு, அவற்றிலிருந்து விலகிச் செல்வதற்குதான் விரும்புகிறார்கள். அப்படி விலகிச்செல்வதால், பிரச்னைகள் அதிகரிக்குமே தவிர, குறையவே குறையாது.

அதெல்லாம் சரிதான்... எப்படிப் பிரச்னைகளைச் சமாளிப்பது... 

வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ஏதாவது ஒரு பிரச்னையை நாம் எதிர்நோக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கட்டாயம் என்று சொல்வதன் அர்த்தம் என்றால் பிரச்னைகள் இல்லாத மனித வாழ்வே கிடையாது என்பது உறுதிப்படுத்தப்பட்ட உண்மை. என்று ஒன்று வந்தவுடன் முதலில் அதிக உணர்ச்சி வசப்படுவதைத் தவிர்க்கவேண்டும். என்னடா இப்படி ஆகிவிட்டதே என்று எண்ணி டென்ஷனை தலைமேல் ஏற்றிக்கொள்ளக்கூடாது. இப்படி அளவுக்கதிகமாக உணர்ச்சிவசப்படுவதனால், தவறான முடிவுகளை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவோம். இப்படிப்பட்ட மனநிலையில் எடுக்கும் முடிவுகளை எண்ணி எண்ணி பிற்காலத்தில் மிகவும் வருத்தப்பட வேண்டிய நிலை ஏற்படும். மன அமைதியுடன் நிதானத்துடன் அவசரப்படாமல் எடுக்கும் முடிவுகள் புத்திசாலித்தனமாக இருப்பதுடன் சிறந்தவைகளாக இருக்கும் என்பது நிச்சயம்

அடுத்தது சூழ்நிலையை ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் நினைப்பது போன்ற சூழ்நிலை எப்போதும் கிடைக்காது. ஆகவே இருக்கும் சூழலை அங்கீகரித்துக் கொள்ள வேண்டும். நாம் விரும்புவதுபோல எதுவும் இருக்காது. நாம் விரும்புவதுபோல மற்றவர்கள் இருக்க மாட்டார்கள் என்பதையும் புரிந்து கொள்ளக்கூடிய மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்தப் பிரச்னையுடன்தான் வாழவேண்டும் என்பதை முதலில் ஒத்துக் கொள்ளுங்கள். இப்போது பிரச்னையை எதிர்கொள்ள நீங்கள் தயாராகி விடுவீர்கள். இல்லையென்றால் விரக்திதான் மிஞ்சும், உண்மை நிலையை ஏற்றுக்கொள்ளும்போது உங்கள் மனம் அமைதியடையும். இந்த மனஅமைதி பிரச்னைக்கு சரியான தீர்வைக் கண்டுபிடிக்க மிகவும் உதவி செய்யும்.

சிலர் பிரச்னை என்று வந்தவுடன் பிறர் மீது பழிபோட ஆரம்பிப்பார்கள். எல்லாப் பிரச்னைக்கும் அவன்தான் காரணம். இவன்தான் காரணம் என்று பிறரைக் காரணம் காட்டுவதையே வாடிக்கையாக வைத்திருப்பார்கள். இப்படிப்பட்ட மனநிலையில் இருப்பவர்கள் மீது பிறருக்கு அதிருப்தி ஏற்படும். உங்களைச் சுற்றியிருக்க அல்லது உங்களுடன் ஒத்துழைப்பதைத் தவிர்க்க ஆரம்பித்து விடுவார்கள். இதனால் நீங்கள் தனித்து விடப்படுவீர்கள். பிரச்னைச் சகதியில் மூழ்கிப்போய் விடுவீர்கள். 

அடுத்ததாக எதையும் அதிகமாக ஆராய்ந்து கொண்டிருக்காதீர்கள். உங்களைச் சுற்றியிருக்கும் சூழ்நிலையையோ அல்லது நபர்களையோ பற்றி அதிகமாக ஆராய்ந்து கொண்டிருக்காதீர்கள். இப்படிப்பட்ட ஆராய்ச்சிகளில் இறங்கினால் அப்புறம் வாழ்நாள் முழுக்க ரூம் போட்டு யோசிப்பது என்பார்களே, அதுபோன்று ஆராய்ச்சியிலேயே காலத்தைத் தள்ளவேண்டிய நிலை ஏற்படும். எந்தப் பிரச்னைக்கும் முடிவு காணவே முடியாமல் போகும் நிலை ஏற்படும்.

மாற்றங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். மாற்றம் ஒன்றே மாறாதது என்று பலமுறை பலர் அழுத்துப் போகும் வரை சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள் இதுதான் உலக நியதி. எனவே வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றத்தையும் புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்ளுங்கள்.

இது அளவோடு இருந்தால் சமையலும் ருசிக்கும்; உடல் நலனும் சிறக்கும்!

மழைக்காலத்தில் மட்டும் வைரஸ் காய்ச்சல் ஏன் அதிகமாக வருகிறது தெரியுமா? 

நிர்வாகத் தலைவருக்கு அவசியம் இருக்க வேண்டிய 10 குணங்கள்!

குமாஸ்தன்: தவற விடக்கூடாத படமல்ல; பொழுது போகவில்லை என்றால் பார்த்து வைக்கலாம்!

Mutual Fund vs. Stocks: எதில் முதலீடு செய்வது சிறந்தது?

SCROLL FOR NEXT