Dick Clark... 
Motivation

ஒரு வழி இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு வேறு வழி!

சேலம் சுபா

"If you fall down, get up and walk again. If you can't walk, crawl. If that idea fails, have another one. It doesn't happen by accident. It takes a lot of hard work.
"நீங்கள் விழுந்துவிட்டால் எழுந்து மீண்டும் நடங்கள். உங்களால் நடக்க இயலாவிட்டால் தவழுங்கள். அந்த யோசனையும் தோற்றால், இன்னொன்றை மேற்கொள்ளுங்கள். ஒரு விபத்து போல் எதுவும் நடைபெறாது. அதற்குக் கடின உழைப்பு தேவை."-Dick Clark.

அமெரிக்க ஆளுமை டிக் கிளார்க் கூறிய தன்னம்பிக்கை மொழி இல்லை வழி இது. மனித வாழ்க்கை என்பது பூ போட்டு, சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் மென்மையான மலர் பாதை அல்ல. முற்களும், கற்களும், மேடு பள்ளங்களும் நிறைந்த சவாலான பயணத்திற்கான பாதை. இதில் விழுவதும் எழுவதும் அவரவர் மனோதிடம், எண்ணங்கள், செயல்களுக்கு ஏற்ப மாறுபடும்.

இரு பெரும் தொழிலதிபர்கள். அவர்கள் இருவரும் ஒன்றாகவே படித்து ஒன்றாகவே தொழிலைத் தொடங்கியவர்கள். இருவரும் ஒரு சவாலை மேற்கொள்கிறார்கள். 5 வருடங்கள் கழித்து இருவரும் சந்திக்கலாம் என்பதே அது. ஐந்து வருடங்கள் கழிந்தது. இருவரும் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அதில் ஒருவர் மிகப்பெரிய செல்வந்தராகி பாதுகாப்பு காவலர்களுடன் வருகிறார். மற்றவர் சாதாரண உடையில் மிக எளிமையாக  வருகிறார். இருவரும் ஒருவரை ஒருவரை பார்த்து ஆச்சரியம் கொள்கின்றனர். அவரவர் கதைகளை பகிர்ந்து கொள்கின்றனர் செல்வந்தருக்கு தொட்டதெல்லாம் பொன்னாகி அவர் மேற்கொண்ட தொழில் பயணம் வெற்றிச் சிகரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எளிமையானவருக்கோ நன்றாகச் சென்ற தொழில் பெருந்தொற்று காரணமாக வீழ்ச்சி கண்டது.

தன் நண்பரின் வளர்ச்சி கண்டு பெருமையுடன் பாராட்டி மகிழ்கிறார். இவருக்கு மனது சங்கடப்பட்டாலும் வெளிக்காட்டாமல் அடுத்து நண்பரின் திட்டம் என்ன என்று கேட்டு உதவி தரத் தயார் என்கிறார்.

மென்மையாக அதை மறுத்த அவரோ "இன்னும் நான் முழுமையாக வீழவில்லை. முன்னேறுவதற்கான உழைப்பும் வலிமையும் இருக்கு தேடினால் ஒன்றில்லை விட்டால் மற்றது என ஏராளமான வழிகளும் இருக்கு நண்பா. மீண்டும் 3 வருடம் கழித்து இதே போல் சந்திப்போம்" என கெத்தாக சொல்லி விட்டு ரப்பர் செருப்பு அணிந்த கால்களால் தலை நிமிர்ந்து உறுதியாக நடந்தார்.

செல்வந்த நண்பர் தன்னுடன் வந்தவரிடம் சொன்னார். "என் நண்பனே வெற்றி பெற்றவன்".

வீழ்வது தவறில்லை..வாழ்வதற்கு ஆயிரம் வழிகளைத் தரும் பிரபஞ்சத்தை ஏமாற்றி முயற்சி செய்யாமல் வீழ்ந்தே கிடப்பது தான் தவறு. ஜுரோவிலிருந்து துவங்கும் வாழ்க்கை பெரும் அனுபவங்களுடன் உங்களை     ஹீரோவாக்கும் நீங்கள் மனம் வைத்தால்!

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT