Motivation Image Image credit - pixabay
Motivation

நல்லது நினைத்தால் வாழ்நாள் நிச்சயம் கூடும்...!

கோவீ.ராஜேந்திரன்

லகில் எதையும் பாசிடிவாக  எண்ணும் மக்கள் மற்றவர்களை விட 42 சதவீதம் அதிக நாட்கள் உயிர் வாழ்வதாக கண்டறிந்துள்ளனர். இதனை கிட்டத்தட்ட 7000 முதியவர்களிடம் 40 வருடங்களாக ஆய்வு நடத்தி கண்டறிந்துள்ளனர். வட கரோலினா பல்கலைக்கழக ஆய்வாளர்கள். இதற்கான காரணம் சொல்லும் போது பாசிடிவாக சிந்தனை செய்கின்றவர்கள் நெகட்டிவாக போசிப்பவர்களை காட்டிலும் குறைவாகவே  விரக்தியுணர்வுக்கு ஆளாகிறார்கள். இதுவே அவர்களை மற்ற நோய்கள் அண்டாதவாறு பார்த்து கொள்வதாக ஆராய்ச்சி செய்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

எதையும் பாசிடிவாக சிந்திப்பவர்கள் தங்களது உடல்நிலையை நல்ல முறையில் வைத்திருக்கவும் விரும்புவதாக கண்டறிந்துள்ளனர். வாழ்க்கையில் எதையும் பாசிடிவாக எதிர்கொண்டு வாழும் நேர்மறையாளர் 85 ம் அதற்கு மேலும் நீண்ட ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வதாக அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

நெகட்டிவாக  எண்ணுபவர்கள் கெட்ட சம்பவங்களை மட்டுமே நினைக்கிறார்கள். இதுவே அவர்களின் உடல்நல பாதிப்புகளுக்கு காரணமாகிறதாம். மாறாக நல்ல சிந்தனையாளர்கள் கெட்ட சம்பவங்களை குறைவாகவே சிந்நிப்பதால் அது அவர்களின் உணர்வுகளை அதிகம் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

எந்தவொரு கெட்ட பழக்கமும் இல்லாதவர்களுக்கு கூட இதய நோய்கள், கேன்சர் போன்ற கொடிய நோய்கள் தற்போது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகக் கூட அவர்கள் நெகட்டிவாக எண்ணுபவர்களாக  இருக்கலாம் என்கிறார்கள்.

நேர்மறையாக சிந்தித்து செயலாற்றும்  நேர்மறையாளர் களிடம் இருதயம் மற்றவர்களை விட ஆரோக்கியமாகவும், சிறப்பாகவும் இருப்பதாக அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது. நேர்மறையாளர்களின் இருதயம் ஆரோக்கியமாக இருப்பதுடன். இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவு கூட மற்றவர்களை விட நார்மலாக இருப்பதுடன்,இரண்டு மடங்கு சிறப்பாக இருதயம் செயல்பட்டு வருவதாக கண்டறிந்துள்ளனர், இல்லினாய்ஸ் பல்கலைக்கழக  ஆய்வாளர்கள்,

நேர்மறை எண்ணங்களை நமக்கு நாமே வளர்த்து கொள்வதும், நம்மிடம் நாமே நேர்மறையான கருத்துக்களை பேசிக் கொள்வதும் நமது வாழ்வில் நல்ல பலன்களை ஏற்படுத்தும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். நேர்மறையான உணர்வுகளுக்கு அதிகளவிலான சக்திகள் இருக்கிறது. அதில் உற்சாகம், ஆர்வம், நன்றியுணர்ச்சி மற்றும் பிற வகையான நேர்மறையான எண்ணங்களே முதன்மையானதாக உள்ளது இதனை "விரிவாக்கப்பட்ட சிந்தனை செயல் திறன்" என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

இவர்கள் ஒரு பிரச்னைக்கு எளிதாக தீர்வு காண்பார்கள் என்கிறார்கள் அமெரிக்க உளவியல் மருத்துவ அறிஞர்கள். தன்னைத் தானே நேர்மறையான வார்த்தைகளால் உத்வேகம் படுத்தி கொள்கிறவர்கள். வேலைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களே தங்களது வாழ்க்கையிலும், வேலையிலும் நிறைவான திருப்தி அடைந்தவர்களாக இருக்கிறார்கள் என்கிறார்கள்.

உங்கள் எண்ணங்களை நல்லவைகளாக வையுங்கள்.எதுவாயினும் சந்திக்கலாம். என்ன நடந்தாலும் எதிர்த்து நிற்கலாம். நம்முடைய வாழ்க்கை நன்றாக இருப்பதற்கு... எந்த அதிசயமும் தேவை இல்லை... நாம் எடுக்கும் முடிவுகள் சரியாக இருந்தாலே போதும். மகிழ்ச்சியும்.. நிம்மதியும்... நிலைக்க சில யுக்திகள்

இயல்பாகவே நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள் எந்த பிரச்னையாக இருந்தாலும் அதனை சாதுரியமாக எதிர்கொண்டு சமாளித்து விடுவார்கள். மகிழ்ச்சியான மன நிலையை தக்கவைத்துக் கொள்வதற்கும் முயற்சிப்பார்கள். அவர்களிடத்தில் மன இறுக்கம், மன அழுத்தம் போன்ற மன நலன் சார்ந்த பிரச்னைகள் எதுவும் எட்டிப்பார்க்காது. எப்பொழுதும் மன இறுக்கத்துடன் இருப்பவர்களிடம் ஒருபோதும் மகிழ்ச்சி நிலைத்திருக்காது. அவர்களிடம் நெருங்கி பழகுவதற்கு பலரும் விரும்ப மாட்டார்கள். அதனால் அவர்களுடன் நட்புடன் பழகுபவர்கள் குறைவாகவே இருப்பார்கள்.

பொதுவாகவே பெண்களிடத்தில் நகைச்சுவை உணர்வு குடிகொண்டிருக்கும். அதிலும் நகைச்சுவை உணர்வு கொண்டிருக்கும் பெண்களின் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சியான சூழல் நிலவும். அவர்களிடத்தில் வீட்டில் உள்ளவர்கள் சகஜமாகவும், உரிமையோடும் பழகுவார்கள்.வீட்டிலும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அப்படிப்பட்ட சந்தோஷமான மனநிலையும், எதையும் திருப்தியுடன் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமுமே வாழ்க்கையை வளப்படுத்தும்.

இத்தகைய எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் எதிர்பார்ப்புகளுடன் வாழும் மனநிலையில் நிறைய பேர் இருக்கிறார்கள். நடக்கப்போவதை சுயமாகவே யூகித்து தேவையற்ற மனக்குழப்பங்களுக்கு ஆளாகி அல்லல்படக்கூடாது.ஒவ்வொரு நாளும் கிடைக்கும் சாதாரண அனுபவங்களில் இருந்து மகிழ்ச்சியை பெறக்கூடிய கலையை கற்றுக்கொள்ள வேண்டும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT