Stop Procrastination Easily
How To Stop Procrastination Easily? Image Credits: MoveMe Quotes
Motivation

தள்ளிப் போடுவதை தடுக்கும் வழிமுறைகளைப் பற்றி பார்க்கலாம்!

நான்சி மலர்

ங்கிலத்தில் ‘Procrastination' என்றொரு வார்த்தை உண்டு. எந்த வேலையாக இருந்தாலும் சரி, நாளை செய்து கொள்ளலாம் என்று தள்ளி போடுவதாகும். நாம் செய்ய வேண்டிய அந்த வேலை எளிமையோ அல்லது கடினமோ நாளை செய்து கொள்ளலாம் என்ற அலட்சியம் அல்லது சோம்பேறித்தனம் வருவதே Procrastination ஆகும்.

இதனால் என்ன பிரச்னை என்று பார்த்தால், எந்த வேலையுமே நகராது. வேலை அப்படியே போட்டது போட்டப்படியே  கிடக்கும். இதை எப்படி சரி செய்வது? இப்படி வேலையை தள்ளி போட்டு கொண்டே செல்வதை எப்படி தடுப்பது? அதற்கு தான் பேபி ஸ்டெப்ஸ் (Baby steps) முறையை பயன்படுத்த வேண்டும்.

இப்போது ஒரு வேலையை தள்ளிப்போட வேண்டும் என்ற இடத்தில் அதில் ஒரு சின்ன பகுதியை செய்வதுதான் பேபி ஸ்டெப்ஸ் முறையாகும். உதாரணத்திற்கு நீங்கள் ஒரு கன்டென்ட் ரைட்டர் என்றால் நீங்கள் எழுத வேண்டிய கட்டுரையில் ஒரு பகுதியை இன்று எழுதி முடிக்கலாம். நீங்கள் ஜாக்கிங் செய்ய வேண்டும் என்று நினைத்தால் ஒரு 5 நிமிடம் செய்யலாம். முழுமையாக ஒருவேலையை தள்ளி போடுவதற்கு பதில் சின்ன சின்ன பகுதியாக பிரித்து செய்யலாம்.

இதனால் என்ன நடக்கும் என்றால், நாளடைவில் 5 நிமிட ஜாக்கிங் 10 நிமிடமாகும், 10 நிமிடம் 15 ஆகும். இது அப்படியே கூடிக்கொண்டே போகும். இதுதான் Procrastination ஐ தடுத்து வெற்றி பெற சிறந்த வழியாகும்.

இதுவே Parkinson’s law என்று ஒன்று உள்ளது. அதாவது இப்போது நம்மிடம் ஒரு வேலையை முடிக்க ஒருவார காலம் உள்ளது என்று வைத்து கொள்வோம். அப்போது அந்த வேலையை ஒரு வாரக்காலம் எடுத்து நாம் முடிப்போம். இதுவே அதே வேலையை முடிக்க 1 நாள்தான் நேரம் இருக்கிறது என்றாலும் அதை ஒரு நாளிலேயே முடித்து கொடுத்து விடுவோம். கேட்பதற்கு ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?

நம்மிடம் அதிக நேரக்காலம் இருக்கும்போது அதை அலட்சியமாக நாம் எடுத்து கொள்வோம். அந்த வேலையை ஒரு நாளிலே முடிக்க முடியும் என்றாலும் நேரத்தை விரயம் செய்து கடைசியாக செய்து முடிப்போம். இதுவே Deadlines, pressure இருக்கும்போது உடனேயே செய்து முடித்துவிடுவோம்.

அதனால் Procrastination செய்ய நினைத்தால் அந்த வேலை ஒவ்வொரு நாளாக தள்ளிப்போய், வாரம், மாதம், வருடம் என்று முடிக்கப்படாத வேலையாகவே மாறிவிடும். இன்றே எந்த வேலையையும் தள்ளி போடாமல் செய்யும்போது நாளைக்கு Comfort ஆக இருக்கலாம். நாளைய பற்றிய பயம் இல்லாமல் இருக்கலாம். அதுவே வெற்றி பெறுவதற்கான சிறந்த வழியுமாகும்.

நேரம் தவறாமையினால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

சிரசாசனம் செய்யும் சிவபெருமானா? எங்கே தெரியுமா?

சந்தேகம் என்னும் கொடிய நோய் வேண்டாமே..!

மலச்சிக்கலைப் போக்க உதவும் அற்புத சாறுகள்! 

மகிழ்ச்சியான வாழ்வுக்கு மனைவியர் மாற்றிக்கொள்ள வேண்டிய 3 பழக்கங்கள்!

SCROLL FOR NEXT