வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை அன்று சில ஊக்குவிக்கும் தத்துவங்களைப் படித்து ஆரம்பித்தால், கட்டாயம் அந்த வாரம் முழுவதுமே சிறப்பாக அமையும். நீங்கள் காலை எழும்போதும் இரவு தூங்கம்போதும் உற்சாகமாக இருக்க, ஊக்குவிக்கும் தத்துவங்களை படியுங்கள். சோர்ந்து விழும்போது கைக் கொடுக்க யாரும் இருப்பார்களா? என்று எதிர்பார்க்காமல், நீங்களே எழ முயற்சி செய்யுங்கள். அந்த முயற்சிக்கு மாபெரும் உதவி செய்யும் ஒன்றுத்தான் ஊக்குவிக்கும் தத்துவங்கள். அந்தவகையில் இந்த வாரத்திற்கான சில தத்துவங்களைப் பார்ப்போம்.
1. என்ன செய்ய போகிறீர்கள் என்று செய்து முடிக்கும் வரை யாரிடமும் சொல்லாதீர்கள்.
2. நீங்கள் சாதிக்கும் வரை உங்களுடைய முயற்சி யார் கண்களுக்கும் தெரியாது. நீங்கள் வெற்றியடைந்தப் பிறகே உங்கள் கதையை தெரிந்துக்கொள்ள பலரும் போட்டிப்போட்டு வருவார்கள். அதனால் வெற்றியடையுங்கள்.
3. நீங்கள் இலக்கில் வெற்றிபெற வேண்டுமென்றால், முதலில் உங்கள் மனதையும் மூளையையும் வெற்றிபெற வேண்டும்.
4. உங்கள் வெற்றிக்கு நீங்கள் போராடவில்லை என்றால், நீங்கள் மனதளவில் வலிமையாவது சந்தேகம்தான்.
5. முதலில் உங்களை நீங்கள் மன்னிக்க கற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான் மற்றவர்களை மன்னிக்கும் குணம் பிறக்கும்.
6. அதேபோல் உங்களை நீங்கள் முதலில் கவனிக்க ஆரம்பித்தாலே மற்றவர்கள் அவர்கள் சுயநலத்திற்காக உங்களைப் பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள்.
7. சில நேரங்களில் வெற்றி என்பது நீங்கள் எவ்வளவு திறமையாக இருக்குறீர்கள் என்பதைப் பொறுத்தல்ல, அதனை அடைய நீங்கள் எவ்வளவு பசியுடன் இருக்குறீர்கள் என்பதை பொறுத்தது.
8. ஒரு விஷயம் உங்களைக் காயப்படுத்தியது என்றால், வாழ்க்கை எதையோ உங்களுக்குக் கற்றுத்தருகிறது என்று அர்த்தம்.
9. குறிக்கோள் இல்லாமல் வாழ்வதற்கு பதிலாக கிடைக்காது என்று நீங்கள் நினைக்கும் ஒன்றுக்கு போராடுவது சிறந்தது.
10. ஒன்றை செய்ய பயமாக உள்ளது என்றால், பயத்துடனே செய்யுங்கள் தவறில்லை. அந்த பயம் பழகிவிட்டால் அனைத்தும் எளிதாகிவிடும்.
11. நீங்கள் முழு படிக்கட்டுகளையும் பார்த்து மலைத்து நின்றுவிடாதீர்கள். முதல் படிக்கட்டைக் கடப்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். - மார்டின் லூத்தர்.
12. ‘இந்த இலக்கை தொடங்க யார் உதவி செய்யப் போகிறார்கள்’ என்று கேட்பதை நிறுத்திவிட்டு. ‘யார் என்னைத் தடுக்கப் போகிறார்கள்’ என்ற கேள்வியைக் கேளுங்கள்.
13. கனவுகளை நிறைவேற்ற வயதை எண்ணிப் பார்க்காதிர்கள். இன்று தொடங்கினாலும் உங்களால் முடிக்க முடியும்.
14. நம்பிக்கையை நம்புங்கள். அதாவது காலை எழுந்தவுடன் இந்த நாள் முழுவதும் நல்லதுதான் நடக்கும் என்று நம்புங்கள். நேர்மறை எண்ணங்களும் நல்லது நடக்க வழிகளைக் காண்பிக்கும்.
15. உங்கள் கனவுகளை நீங்கள் தேர்ந்தெடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இல்லையேல் மற்றவர்கள் அவர்களுடைய கனவுகளுக்கு உங்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.