motivation image
motivation image Image credit - pixabay.com
Motivation

அறிவு முக்கியமா? அன்பு முக்கியமா..?

இந்திரா கோபாலன்

றிவும் திறமையும் இருந்தால் புகழ் பெற்று விடமுடியும் என்கிறார்கள்.இவை எல்லாம் இருந்தும் புகழ் பெறாதவர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் ஏன் புகழ் பெறவில்லை. மனித சமூகத்தின் மீது அன்பும் கருணையும் இருந்தால்தான் பெரும் புகழ் கிட்டும்.

உலகில் மிகப்பெரிய  புகழ் பெற்ற ஏசுநாதர் என்ன செய்திகள் சொல்லிவிட்டார். அவர் கண்களில் கருணை இருந்தது. அவர் தொடுகையில் அன்பு வெள்ளமாக ஓடியது. எனவேதான் அவர் மனித சமூகத்தால் வணங்கப்படுகிறார்.

புத்தரும் அப்படித்தான். அவரின் அளவற்ற. கருணையை யாரும்  மறக்க முடியாது. அறிவாளிகளை பிறர் விரும்ப வேண்டும்  என்று பிறருக்கு என்ன தலையெழுத்து. அன்புள்ளவர்களைத்தான் உலகம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும். அளவற்ற புகழ் பெறும் எந்த மனிதனையும் நீங்கள் ஆராய்ந்தால் அவர்களுக்குள் மென்மை தாய்மை  கருணை சுரந்தோடுவதை உணர்வீர்கள்.

வடக்கே பக்தி இயக்கத்தில் பெரும் புகழ் பெற்றவர் சைதன்ய மகா பிரபு. அவரது கிருஷ்ண பக்திதான் பிற்காலத்தில் ஹரே கிருஷ்ண இயக்கத்தின் மூல விதை. அவர் அடைந்த பெரும் புகழை யாரும் அடையவில்லை. எதைக் கொண்டு அளந்து அவர் பக்தியை மட்டும் பெரிய பக்தி என்று உலகம் அவரை வணங்கியது.

அவர் அறிவை விட அன்பிற்கு முக்கியத்துவம் கொடுத்த கருணாமூர்த்தி. தன் அறிவை மட்டுமே நம்பி வாழும் சில வறட்டுத் திறமைசாலிகள் அன்பு, கருணை ‌என்பதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வதில்லை. சைதன்யருக்கு 16 வயது இருக்கும்போது அவரை எல்லோரும் நிமாயி என்றே அழைப்பார்கள். அவருடைய உற்ற நண்பர் பெயர்  ரகுநாத்ஜீ. இருவரும் ஒரே ஆசிரியரிடம் தில்  பயின்றார்கள். ரகுநாத்ஜீ தம் அறிவின் மீது அலாதி மதிப்பு வைத்திருந்தார். அவர் நிமாயியிடம் அன்பும் உள்ளவர். இருவரும் படகு மூலம்தான் நதியைக் கடந்து பாடசாலை போகவேண்டும். வழியில் ரகுநாத்ஜீ நிமாயியிடம் ‌ அவர் எழுதியிருந்த நியாய சாஸ்திர நூலை வாசிக்கச் சொன்னார்.

அவர் வாசிக்க வாசிக்க ரகுநாத்ஜீ அழ ஆரம்பித்து விட்டார். நிமாயி காரணம் கேட்க அவர்,"நான் எழுதிய சாஸ்திரம் தான் உலகப்புகழ் பெறும் என்று உறுதியோடு இருந்தேன். நீ என்னைவிட உயர்வாக  எழுதியுள்ளாய், எனவே உலகம் உன்னைத்தான் பாராட்டும். என்னை மறந்துவிடும் என் நூல் அழிந்துவிடும் உன் நூல் அழியாது" என்று தேம்பித் தேம்பி அழுநார்.

கருணையே வடிவான சைதன்யபிரபு,"இதற்காகவா அழுகிறாய். ஒரு நண்பனுடைய மகிழ்ச்சியை விட எனக்கு என்ன புகழ் வேண்டி இருக்கிறது. என் நூல் இருந்தால்தானே ஒப்பிடுவார்கள் "என்று கூறி சைதன்ய பிரபு தன் நூலை கங்கை ஆற்றில் எறிந்து விட்டார். அவரின் அன்பைக் கண்டு ரகுநாத்ஜீ கதறி அழுதார். அன்பே வடிவான சைதன்யர் உலகப்புகழ் பெற்றார். ஆகவே அன்புதான் உலகப்பொது மொழி.

வீட்டிலேயே சுவையான ‘நாண்’ செய்வது எப்படி?.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!

திடீரென மனிதர்களுக்கு Superpowers வந்துவிட்டால் என்ன ஆகும்? Oh My God! 

உங்கள் பார்ட்னரிடம் தவறிக்கூட சொல்லக்கூடாத 5 விஷயங்கள்!

Deep Work: செயல் திறனை சிறப்பாக்கும் தந்திரம்!

விரைவில் நட்சத்திரக் கலை விழா: ரஜினிகாந்துடன் நடிகர் சங்கத்தினர் ஆலோசனை!

SCROLL FOR NEXT