Motivation image Image credit - pixabay.com
Motivation

நமது எண்ணங்களை சீர்படுத்துவது எப்படி.?

இந்திரா கோபாலன்

ப்பொழுதும் உங்கள் சிந்தனை  நல்ல  வழியில் செல்கிறதா அல்லது தாறுமாறான வழியில்  செல்கிறதா என்பதை கவனியுங்கள். அர்த்தமற்ற சிந்தனைகள், பகற்கனவு போன்றவை வலுவிழந்த மனதின் அறிகுறியாகும். எப்போழுதும் ஆசை உணர்வுகள் போன்றவற்றை அடக்கி ஆள வேண்டும். ஒரு எஜமானன் எப்படி ஒரு வேலைக்காரனை அடக்கி ஆளுவானோ அப்படி அடக்கி வைக்க வேண்டும். நாம் சோம்பேறியாய் பகற்கனவு காணும் போது ஆழ்மனது உங்களை ஆளுமை செய்கிறது.

நம்முடை ஆளுமையையும்  நன்னடத்தையும் உருவாகுவதற்கு  நம் மனதில் நல்ல நேர்மறை எணணங்கள் நிறைந்திருக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் தோன்றினாலும் அதை நேர்மறை எண்ணங்களாக மாற்ற வேண்டும்.

விருப்பு, வெறுப்பு, துவேஷம், பயம்  பழி வாங்குதல், பொறாமை போன்ற தீய உணர்ச்சிகள் நம் எண்ணங்களுடன் சேர்ந்து  தீமை விளைவிக்கும். உலகில் எதுவும் காரண காரியமின்றி நடப்பதில்லை. எவ்வளவு கொடுமையாக இருந்தாலும் நடப்பது  நல்லதற்கே என்று எண்ணுங்கள். அவை யாவும் நிரந்தர மற்றவை. ஆன்மிக முன்னேற்றம் ஏற்படும்போது நம் பிரச்னைகளுக்குத் காரணம் நாம் என்பதை உணர்வோம். எந்த நிலையிலும் மன அமைதியை இழக்காதீர்கள். எல்லா கஷ்டங்களையும் ஒரு சாக்ஷியாகப் பாருங்கள். பற்றற்ற பாரபட்சமற்ற நிலையில் செயல்படுங்கள். 

நம் உள்ளும் புறமும்  ஒன்றாயிருக்க வேண்டும். எண்ணம் செயல் சொல் ஒன்றாயிருக்க வேண்டும். இது நல்லவர்களுக்கு அடையாளம். மனிதர்களுக்கு இரண்டு முகங்கள் காணப்படும். ஒன்று நிஜமும். மற்றொன்று பிறருக்குத் காட்டும் பொய்யான முகம்.

இந்த இரண்டு முகங்களே  அவர்களின் ஸ்திரத் தன்மையைப் பாதிக்கிறது. 

நேரம் கிடைக்கும்போது அமைதியாக இருக்கப் பழகிக் கொள்ளுங்கள். மனதை வெளிப் பொருளில் கவனம் செலுத்துவதை விட்டு  மன ஓட்டத்தை கவனிக்கும்போது மனம் அமைதி படும். கண்களை மூடி நம் மூச்சு ஓட்டத்தின் மீது  கவனம் செலுத்தினால்  மனம் அமைதிப்படும். இதனால் மனச் சஞ்சலங்கள் நின்று  மனம் அமைதிபட்டு சரியாக சிந்திக்க முடியும்.  மனதில் அமைதியோடு உடலும் அமைதிபெறும். 

தியானத்தையும், யோகம் செய்வதையும் மேற் கொள்ள வேண்டும். சரியான முறையில் தியானம் செய்தால் மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கி மனம் தூயதாகி வலுப்படும். தூய மனதில் நல்ல எண்ணங்களே தோன்றும். மனதின் எண்ண ஓட்டங்களைப் கட்டுப்படுத்தும். மனம் தூய்மையும் அமைதியும் அடையும்.

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

மைக்ரோ கீரைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு? சாகுபடி முறை இதோ!

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

SCROLL FOR NEXT