motivation image 
Motivation

மன நிம்மதியைத் தரும் இவைகள் எல்லாம்!

பொ.பாலாஜிகணேஷ்

சிலர் எப்போதுமே எனக்கு மன நிம்மதி இல்லை என்று புலம்புவது பார்த்திருப்பீர்கள். ஆனால் அவர்கள் கடைசி வரை நிம்மதி தேடிக் கொண்டுதான் இருப்பார்கள். அடைய மாட்டார்கள் அதற்கெல்லாம் மிக முக்கிய காரணம் என்ன? அவருடைய வாழ்வியல்தான் காரணம்.

மன நிம்மதி இழப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். வீடு அலுவலகம் நண்பர்கள் இல்லையென்றால் நமக்கு தேவையில்லாத விஷயங்களை தலையிட்டு அதில் கூட நிம்மதி இழக்கலாம் இல்லையா? சரி. மன நிம்மதியோடு வாழ என்னதான் செய்ய வேண்டும் என்ற உங்கள் ஆதங்கம் புரிகிறது. உங்களுக்கு மன நிம்மதி எளிதில் கிடைக்க வழி செய்யும் இந்த குறிப்புகள்.

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த யாரும் இல்லை என நினைக்கிறீர்களா? அப்படி என்றால் 'மனதுடன் பேசுங்கள்'. 'வாழ்கையில் எனக்கு என்ன தேவை?' என மனதிடம் கேளுங்கள். கேட்கவில்லை என்றால் எதுவும் கிடைக்காது.

பொதுவாக 50 வயதுக்கு மேல் மன நம்மதி இல்லை என்று சிலர் புலம்புவார்கள். அதற்கு என்ன காரணம் நம் மனநிலை தான் வயதாகி விட்டாலே நம்மை எல்லோரும் ஒதுக்குகிறார்கள். நம் பேச்சை யாரும் கேட்பதில்லை என்று எண்ணம் உருவாகிவிட்டாலே போதும் நிச்சயமாக நம் மன நிம்மதியை இழந்து விடுவோம்.

மனதில் கோபம், வெறுப்பு ஏற்படும்போது யாரிடமும் பேசாதீர்கள். வெறுமனே கண்களை மூடி உங்களை சுற்றியுள்ள சத்தங்களை கேளுங்கள். இல்லையென்றால் ஹெட்போனை மாட்டிக்கொண்டு பறவைகளின் கீச்சுக்குரல், காற்றின் இசை, பூனை, நாய்களில் சத்தம், மெல்லிய இசை ஆகியவற்றை கேட்கலாம்.

மூச்சை இழுத்து விடுவதும் ஒரு தியானம்தான். மெதுவாக மூச்சை இழுத்தபடி ஒன்று முதல் பத்து வரை எண்ணுங்கள். மீண்டும் பத்து முதல் ஒன்று வரை எண்ணியபடி மூச்சை மெதுவாக விடுங்கள்.

புதிய காற்று, சூரிய ஒளி, தண்ணீர், உணவு, குழந்தைகள், மலர்கள், சாக்லேட், வாழ்க்கைப் பாடங்கள், புத்தகம், செல்ல பிராணிகள், நடை பயிற்சி, நடனம், தூக்கம் இவை எல்லாம் உங்களின் மன இறுக்கத்தை போக்கும் அற்புத மருந்துகள்.

தோல்வி உங்களுக்குள் எதிர்மறை உணர்வுகளை உண்டாக்கலாம். ஆனால், தோல்வியடையாத மனிதர்களே உலகில் இல்லை. தோல்வியே இல்லை என்றால் எப்படி உங்களால் கற்றுக்கொள்ள முடியும்? நீங்கள் தோல்வியடைவில்லை. உங்கள் முயற்சிதான் தோல்வியடைந்து என நினைத்துக்கொள்ளுங்கள்.

மனத்தளர்ச்சி ஏற்படும்போது கண்களை மூடி ‘நான் வலிமையானவன்' 'நான் கோபப்படமாட்டேன்' எனக் கூறிக்கொள்ளுங்கள். இது தவறான எண்ணங்களை நோக்கி உங்கள் மனம் செல்வதை தடுக்கும்.

இன்னும் உங்களுக்கு பிடித்த மாதிரி சொல்ல வேண்டுமென்றால் தொலைக்காட்சியில் குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூன் சேனல்களை ஒரு மணி நேரத்துக்கு பாருங்களேன் உங்கள் மனசு எவ்வளவு லேசாகிறது என்பது நீங்கள் உணர்வீர்கள்.

எது எப்படியோ மனம் நிம்மதி பெற ஆயிரம் வழிகளை நாம் தேடினாலும் சரி ஒரே வழி மனதை கட்டுப் படுத்துவதுதான். என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். மனதை அதன் வழியில் விடாமல் நம் வழி அழைத்துச் செல்வோம் மன நிம்மதியோடு வாழ்வோம்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT