Nelson Mandela 
Motivation

Nelson Mandela Quotes: நெல்சன் மண்டேலா கூறிய 15 பொன்மொழிகள்!

பாரதி

தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் இருந்தவரும், தென்னாப்பிரிக்காவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது குடியரசுத் தலைவரும் தான் நெல்சன் மண்டேலா. தென்னாப்பிரிக்காவில் சிறுபான்மையினராக இருந்த வெள்ளையர்கள் அங்கு பெரும்பான்மையாக இருந்த கறுப்பினத்தவர்களை அடிமைப்படுத்தி ஆண்டனர். இதை எதிர்த்து கறுப்பினத்தவர்களின் உரிமைக்காக முதலில் அறவழியிலும் பின்னர் ஆயுதப்போராட்டம் மூலமாகவும் போராடியவர் நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela).

அந்தவகையில் இவரின் 15 பொன்மொழிகள் பற்றி பார்ப்போம்.

1.  ஞானிகள் அமைதியாக இருக்கும்போது முட்டாள்களின் எண்ணிக்கை பெருகும்.

2.  பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவுவதற்காக ஒருவர் தனது நேரத்தையும் சக்தியையும் கொடுப்பதை விட சிறந்த பரிசு எதுவும் இருக்க முடியாது.

3.  தைரியம் என்பது பயம் இல்லாமல் இருப்பது அல்ல, ஆனால் பயத்தை வெற்றிக் கொள்வது என்பதை நான் கற்றுக்கொண்டேன். பயமே இல்லாதவர் தைரியமான மனிதர் அல்ல, ஆனால் பயத்தை வென்றவரே தைரியமான மனிதர்.

4.  செய்து முடிக்கும் வரை மட்டுமே அது சாத்தியமற்றதாகத் தோன்றும்.

5.  என் வெற்றியை வைத்து என்னை மதிப்பிடாதீர்கள். எத்தனை முறை கீழே விழுந்து மீண்டும் நான் எழுந்தேன் என்பதை வைத்து என்னை மதிப்பிடுங்கள்.

6.  இந்த உலகை மாற்றுவதற்கு உங்களால் பயன்படுத்தக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி.

7.  நீங்கள் ஒரு மனிதனுடன் அவரால் புரிந்துக்கொள்ளக்கூடிய மொழியில் பேசினால், அது அவருடைய தலைக்குச் செல்லும். நீங்கள் அவருடன் அவருடைய மொழியில் பேசினால், அது அவருடைய இதயத்திற்குச் செல்லும்.

8.  மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்று சமுதாயத்தை மாற்றுவது அல்ல - உங்களை நீங்களே மாற்றிக் கொள்வது.

9.  பின்னால் இருந்து வழிநடத்துங்கள் - மற்றவர்கள் தாங்கள் முன்னால் இருப்பதாக நம்பட்டும்.

 10. நம் உலகில் வறுமை, அநீதி மற்றும் அதிகப்படியான சமத்துவமின்மை நீடிக்கும் வரை, நாம் எவரும் உண்மையிலேயே ஓய்வெடுக்க முடியாது.

11. நம்பிக்கை ஒரு சக்திவாய்ந்த ஆயுதம், அதை உங்களிடமிருந்து பறிக்கக்கூடிய சக்தி, இந்தப் பூமியில் யாரிடமும் இல்லை.

12.  உடற்பயிற்சி என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன அமைதிக்கும் முக்கியமானதாகும்.

13.  கடந்த கால விடயங்களை குறை கூறுவதால், அவை சிறந்ததாக மாறிவிடாது.

14. மக்களால் தங்கள் வயிற்றுக்கு உணவிட முடியாவிட்டால், அவர்களுக்கு ஒரு இருப்பிடம் இல்லாவிட்டால், அறியாமை மற்றும் நோய்கள் அவர்களைத் தொடர்ந்து கொண்டே இருந்தால், சுதந்திரம் என்பது அர்த்தமற்றது.

15. பணம் வெற்றியை உருவாக்காது, அதை உருவாக்குவது சுதந்திரம்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT