Scholars ... 
Motivation

வாழ்வில் வெற்றிபெற வழிகாட்டும் அறிஞர்கள் பொன்மொழிகள்..!

கோவீ.ராஜேந்திரன்

வாழ்க்கையில் வெற்றி பெற மூன்று வழிகள்.

1) பிறரைக்காட்டிலும் அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்.

2) பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்க கற்றுக்கொள்ளுங்கள்.

3) பிறரைக்காட்டிலும் குறைவாக எதிர்பாருங்கள்.

- வில்லியம் ஷேக்ஸ்பியர்.

போரின் போது- உறுதியுடன் இருங்கள்.

தோல்வியின்போது- எதிர்ப்புணர்ச்சியுடன் இருங்கள்.

வெற்றியின் போது- பெருந்தன்மையோடு இருங்கள்.

அமைதியின்போது - நல்லெண்ணத்துடன் இருங்கள்.

- சர். வின்ஸ்டன் சர்ச்சில்.

நாம் எப்போதும் மற்றவர்களிடம் பிரச்னைக்கான தீர்வைத் தேடுகிறோம். நம் மனதை உள் நோக்கித் திருப்பினால், சில யோசனைகளையும் தீர்வுகளையும் பெற முடியும் என்பதை மறந்து விடுகிறோம்.

மிக அதிக பிரச்னைகள் உள்ள உலகைப் பாருங்கள். பின்னர், உங்கள் பிரச்னைகள் சிறியதாகவே தோன்றும். அதிக தேவை உள்ளவர்களுக்கு சேவை செய்யுங்கள்.

'இந்தப் பிரச்னையைத் தீர்க்க என்னால் இயலாது, தெய்வீகம் எனக்கு உதவட்டும்' என விரக்தியோ கோபமோ இன்றி கூறுங்கள். பிரபஞ்சத்தில் ஒரு சக்தி உங்களுக்கு உதவப் போகிறது என்ற நம்பிக்கையுடன் இருங்கள்.

வாழ்க்கையில் நீங்கள் கடந்து வந்த கடினமான சூழ்நிலைகளைத் திரும்பிப் பாருங்கள். நீங்கள் அவைகளை விட மிகவும் சக்தி வாய்ந்தவர், பிரத்யேகமானவர்.

- குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.

சூழ்நிலை உங்களை பதற்றப்பட வைக்கின்றதா ? இல்லை சூழ்நிலயை பதற்றப்படாமல் கையாளுகின்றீர்களா ? என்பதை பொறுத்தே உங்கள் வாழ்க்கையின் வெற்றி அமைந்து இருக்கும். குழப்பமான மனநிலையிலும் நிதானமாக இருந்துவிட்டால் போதும்.நினைத்தது நிறைவேறிடும். மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை.

- ஹெலன் கெல்லர்.

ண்ணில் போடப்பட்ட அனைத்து விதைகளும் ஒரே மண்னைத் தின்று ஒரே தண்ணீரைக் குடித்து வளர்கின்றன. ஆனால் மாமரம் கொடுக்கும் பழத்திற்கும், வேப்ப மரம் கொடுக்கும் பழத்திற்கும் ருசியில் வேறுபட்டது இருப்பது போல. நாம் அனைவரும் ஒரே மூலத்திலிருந்து வந்தவர்கள்தான். ஒரே நீரைத்தான் அருந்துகிறோம், ஒரே காற்றைத்தான் சுவாசிக்கிறோம். ஆனால் வழியில் எதை சேகரித்து நம்மில் உள்ளடக்கமாக அமைத்துக் கொள்கிறோமோ அதைப் பொறுத்துத்தான் நம்முடைய தன்மை வெளிப்படும்.

நாம் எதை சேர்க்கிறோம் அற்பமானதையா? இல்லை அற்புதத்தையா ? அற்பமானது என்னும் ஆறு குணங்கள் 1. பேராசை 2. சினம் 3. கடும்பற்று 4. முறையற்ற பால்கவர்ச்சி 5. உயர்வு தாழ்வு மனப்பான்மை 6.வஞ்சம்

அற்புதம் என்னும் ஆறு குணங்கள் 1. நிறை மனம் 2. பொறுமை 3. ஈகை 4. கற்பு நெறி 5. சம நோக்கு 6. மன்னிப்பு இவை அனைத்திற்கும் அடித்தளமாக உள்ள அன்பையும் கருணையையும், அறிவாய் விளங்கும் பேராற்றலையும் உள்ளுணர்வாய் உணர்ந்தால்அற்பமான தேவையற்ற குணங்கள் நம்முள் எட்டிப் பார்காது. அற்புதமான நற்குணங்கள் நம்மோடு இணைந்து வழிநடத்துமே.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT