Motivation emage Image credit - pixabay.com
Motivation

இந்த 20 குணங்களை விட்டால் மட்டுமே கிட்டும் வெற்றி!

சேலம் சுபா

னிதர்கள் அனைவரும் நூறு சதவீதம் பர்பெக்டாக இருப்பது சாத்தியமே இல்லாத ஒன்று. ஆனால் சரியாக இருக்க வேண்டிய குணங்களை மாற்றிக் கொண்டு வெற்றி பெறுலாம். அப்படி அன்றாட வாழ்வில் நாம் இந்த 21 தீய குணங்களை கண்டிப்பாக விட்டு விட வேண்டும். அவைகள் இங்கு.


1. தற்பெருமை கொள்வது
நான் இதை செய்தேன். என்னால் மட்டுமே இது முடிந்தது. என் கல்வி அறிவு இவைகள் மற்றவரை விட மேலானது என்பது போன்ற தற்பெருமை கூடாது.


2. பிறரை கொடுமை செய்தல்
தேவையின்றி மனம் நோக பேசுதல் அல்லது பிறர் முன்னிலையில் வன்முறையில் இறங்குவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.


3. கோபப்படுதல்
சிலர் அவசியமின்றி எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள். சற்றும் சிந்தித்துப் பார்க்காமல் சூழ்நிலை அறியாமல் கோபப்படுவதை நிறுத்த வேண்டும்.


4. பிறரை போலவே வாழ ஆசைப்படுதல்

அனைவரும் ஒரே மாதிரி இருப்பதல்ல வாழ்க்கை. ஒருவரை பார்த்து அவரைப் போலவே நாமும் வாழ ஆசைப்பட்டு அதற்கேற்ற பந்தா செய்வது துன்பமே தரும்.


5. பிறர் துன்பத்தை கண்டு சந்தோஷப்படுதல்
ஒருவர் துன்பத்தில் இருக்கும்போது ஆறுதலாக நான்கு வார்த்தைகள் பேசுவதை விடுத்து அதை கண்டு உள்ளுக்குள் மகிழ்ச்சி கொள்வது என்பது பாவம்.


6. பொய் பேசுதல்
குழந்தைகளிடம் பொய் சொல்வதில் ஆரம்பித்து வாழ்வின் இறுதிவரை பொய்களிலேயே மூழ்கிக் கிடக்கிறோம். அதை விடுத்து உண்மை சொல்லி அதனால் வரும் விளைவுகளை சந்திப்பது சாலச் சிறந்தது.


7. கெட்ட சொற்களை பேசுதல்

சிலர் எப்போதும் தேவையற்ற கெட்ட சொற்களை பேசுவார்கள். சூழலுக்கு தேவையே இல்லாமல் அவர்கள் வாயிலிருந்து தாமாகவே கெட்ட சொற்கள்  வரும். இதை கவனிக்கும் குழந்தைகள் அவர்களும் இந்த சொற்களை பழகிக் கொள்வார்கள். இந்த தீய குணத்தை விட வேண்டும்.


8. இரட்டை வேட மனப்பான்மை
ஒரு சிலர் எப்போதும் இரட்டை வேட மனப்பான்மையில் இருப்பார்கள் அதாவது சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பது போல்  நல்லவர் போலவும் நடிப்பார்கள்.


9. புறம் பேசுதல்
ஒருவரைப் பற்றி  பிறரிடம் புறம் பேசுவது நம் மதிப்பைக் குறைக்கும்.

10. தகாதவர்களுடன் சேருதலும் ஆதரவு கொடுத்தலும்
தகாத பழக்கம் கொண்டவருடன் சேருதலோ அல்லது அவர்களின் நட்பில் அவர்களுக்கு ஆதரவு தருவதோ நமக்கும் வெற்றியில் பின்னடைவையே தரும்.


11. பாரபட்சமின்றி நடத்தல்
அந்தஸ்தில் குறைந்தவர்களோ, பணக்காரர்களோ அனைவரையும் சமமாக பாரபட்சம் இன்றி நடத்துவது சிறந்தது.


12. பொய் சாட்சி கூறுதல்

பொய் சாட்சி சொல்லுதல் என்பது தீய குணங்களில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம். சாதாரணமாக தோன்றும் இதனால் விளையும் தீமைகள் அதிகம் உண்மையை மறைத்து பொய்யான தகவல்களுக்கு சாட்சியாவது தீய குணம்.

13. எளியோரை கேலி செய்தல்
நம்மை விட படிப்பிலோ அந்தஸ்த்திலோ தாழ்ந்து இருப்பவரை கேலி செய்வது என்பது மனிதத்தன்மை அற்ற ஒரு செயல்.


14. வாக்குறுதியை மீறுதல்
ஒருவருக்கு  இதை செய்து தருகிறோம் என்று ஒரு வாக்கு தந்து விட்டால் அதை நிச்சயம் செய்ய வேண்டும்.  நம்மால் முடியவில்லை என்றால் வாக்குறுதி தருவதை தவிர்க்க வேண்டும்.


15. சண்டை , சச்சரவு, வாக்குவாதம் செய்தல்
சாதாரண ஒரு விஷயத்துக்கு கூட சகிப்புத்தன்மை இல்லாமல் சண்டை சச்சரவு செய்தல்  தவிர்க்கப்பட வேண்டிய விஷயம். இதனால் அன்றைய பொழுதும் வீணாவதுடன் நமது செயல்களிலும் தடை ஏற்படும்.


16. குறை கூறுதல்
நமக்கு பிடித்த செயல்களை செய்யாதவர்களிடம் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுதல் மிகப்பெரிய தவறு. அவர்கள் நலனை முன்னிட்டு தன்மையாக கூறுவது நல்லது.

17. வதந்தி பரப்புதல்
பொய்யான தகவல்களை பரப்பி மற்றவர்களுக்கு இம்சை தருதல் என்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒரு விஷயம். இதனால் நேரங்களும் வீணாகும். மனங்களும் சிதையும்.


18. கோள் சொல்லுதல்
இரண்டு நண்பர்கள் இருந்தால் இருவரிடமும் ஒரே மாதிரி சமமாக பழக வேண்டும். முக்கியமாக ஒருவரைப் பற்றி ஒருவர் கோள் சொல்லுதல் என்பது கெடுதலைத் தரும்.


19. பொறாமைப்படுதல்
நம்மிடம் பழகுபவரையோ அக்கம் பக்கத்தில் உள்ளவர்களையோ பார்த்து அவர் இப்படி நான் இப்படி இல்லை என்று பொறாமை கொள்ளுதல்.


20. பெண்களை தீய நோக்குடன் பார்த்தல்        
நம் வீட்டுப் பெண்கள் போலவே சக பெண்களை சகோதரியாகவோ அல்லது தாயாகவே காணவேண்டும். அதை விடுத்து நம்முடன் பழகும் பெண்களை தீய நோக்குடன் பார்ப்பதை ஆண்கள் தவிர்க்க வேண்டும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT