முயற்சியுடன் விடாமுயற்சி அதிசயங்கள் நிகழ வழிவகுக்கும். முயற்சி ஒருவரின் உள்ளத்தில் இருந்து எழுந்து செயலில் ஈடுபட வைக்கும். விடா முயற்சி எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் துவளாமல் தொடர்ந்து செயல்படவும் உந்து கோலாக இருக்கும்.
நம்பிக்கை, தன்னம்பிக்கை தேவை. நம்பிக்கை உங்களால் முடியும் என்கிற பொழுது தன்னம்பிக்கை உங்களால் கட்டாயம் முடியும் என்று உற்சாகப்படுத்தும். இவை இரண்டும் மட்டும் போதாது. பிறரின் திறமைகளிலும் நம்பிக்கை வைத்துக்கொள்ள பழகிக் கொள்ளவும். அதனால் கிடைக்கும் ரிசல்ட் அனுபவித்தவர்களுக்கு புரியும்.
தயார்படுத்திக்கொள்வது உங்களின் தலையாய கடமை. ஏற்படும் பல்வேறு வளர்ச்சிகளுக்கு பொறுத்தமாக விரைவாகவும், தேவையான அளவும் தயார் படுத்திக்கொண்டால்தான், மாறி வரும் இன்றைய கால கட்டத்தில் முன்னேற முடியும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டியது அத்தியாவசியம்.
குறைத்து மதிப்பு இடாதீர்கள், உங்களையும் பிறரையும். உங்கள் மதிப்பை எப்பொழுதும் உயர்வாக எண்ணும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளுங்கள். பிறரின் தயவு இல்லாமல் உயர முடியாது. எனவே பிறரின் திறமைகளையும் உயர்வாக கருத கற்றுக் கொள்ளுங்கள்.
உங்கள் வாழ்கையை வாழப்போவது தாங்கள் மட்டும் என்பதை என்றும் மறக்காதீர்கள். பிறர் உங்களுக்காக ஆலோசனை கூறலாம், பிரார்த்தனை செய்யலாம், முடிந்த அளவு உதவலாம். அவ்வளவுதான்.
வாழ்க்கைபாதை ரோஜாாக்களை விட முட்கள் அதிகம் கொண்டவை என்பது நினைவில் இருக்கட்டும். தாங்கள் எதிர் கொள்ளும் மகிழ்ச்சி, மனநிறைவு, துக்கம், வேதனை உங்களுக்கு புரிகிற மாதிரி வேறு யாராலும் மற்றும் நீங்கள் அனுபவிக்கிற மாதிரி வேறு யாராலும் உணரவும் முடியாது.
நேர்மறை ரிசல்டுக்கள் எதிர் பாப்பது உசிதம் (expecting positive results desirable). ஆனால் நாம் பயணிக்கும் மாற்றங்கள் நிறைந்த வாழ்க்கை பாதையில் ஏமாற்றாங்களும், தோல்விகளும் தடங்கல்களாக வர வாய்ப்புகள் உண்டு என்பதை மறக்காமல் இருந்தால் முன்னேற்றம் அடைய உதவும். (in this dynamic world, coming across disappointments, failures cannot be avoided should never be forgotten).
உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். (self motivation) பிறரையும் உற்சாகப்படுத்தி பழகுங்கள். பிறரை மனதார குறையில்லாமல் பாராட்ட பழகிக்கொள்ளுங்கள். (appreciate others efforts) அதன் பலன் உங்கள் முன்னேற்றத்திற்கு எப்படி உதவுகின்றது என்று உங்களுக்கே புரியும்.
நேரம் பொன்னானது உங்களுக்கு மட்டும் அல்லாமல், மற்றவர்களுக்கும் என்பதை உணர்ந்து இருக்கும் நேரத்தை எப்படி அதிகப்படியாக உபயோக்கிக முடியும் என்று சிந்தித்து செயல் படவும். தினசரி நடை முறை வாழ்க்கை தாங்கள் கற்றுக்கொள்ள பெரிதும் உதவும்.
வாழ்க்கையில் கிடைக்கும் முன்னேற்றத்தின் ரிசல்ட்டுக்களும் நிரந்தரம் கிடையாது. அதேபோன்று உடனுக்கு உடன் தேவையான முடிவுகளும் கிட்டாது என்பதை உணர்வது மிக மிக அவசியம் . எனவே பொறுமை என்ற குணத்தை தவறாமல் பழகிக் கொள்ளவும். (develop patience quality) .
இந்த பத்து யோசனைகளும் வாழ்க்கையில் முன்னேற உதவும்.