Warren buffett success journey. Image Credits: Reuters
Motivation

Investment என்றாலே இவர் பெயர்தான் நினைவிற்கு வரும். யார் அவர் தெரியுமா?

நான்சி மலர்

ம்மிடம் எவ்வளவுதான் பணம் இருந்தாலும், அதை எதில் Invest செய்ய வேண்டும் என்று கற்றுக்கொள்வது மிகவும் முக்கியமாகும். அப்படி நாம் போடும் பணம் பெருகவும் செய்யலாம், நஷ்டமாகவும் செய்யலாம். ஆனால், அது கற்றுத்தரும் பாடம் பிற்காலத்தில் பல கோடிகளை சம்பாதிக்கும் அளவிற்கு மதிப்புமிக்கதாகும். அப்படி தன் சாம்ராஜ்ஜியத்தை பூஜியத்திலிருந்து ஆரம்பித்த ஜாம்பவானை பற்றித்தான் இந்த பதிவில் காணப்போகிறோம்.

பதினோரு வயதில் ஒரு சின்ன பையன் Stock market ல் பணத்தை Invest செய்கிறான். ஆனால், அவனுக்கு அன்றைக்கு தெரியாது பிற்காலத்தில் Investment என்ற தலைப்பை எடுத்தாலே தன் பெயர்தான் எல்லோருக்கும் நினைவுக்கும் வரும் என்று. அந்த சின்ன பையன் வேறு யாரும் இல்லை Warren Buffett தான்.

1930 ஆம் ஆண்டு அமேரிக்காவில் வாரன் பப்பெட் பிறக்கிறார். 'தான் இறக்கும்போது கண்டிப்பாக பணக்காரனாகத்தான் இறக்க வேண்டும்' என்ற குறிக்கோளுடன் தன்னுடைய ஏழு வயதிலிருந்து கூல்டிரிங்ஸ், நியூஸ்பேப்பர் விற்று சம்பாதிக்கிறான்.

இவருடைய பதினோராவது வயதில் ஸ்டாக் மார்க்கெட் மீது ஆர்வம் வருகிறது. இதனால் தன் அக்காவுடன் சேர்ந்து 38 டாலர் என்று ஆறு ஷேரை ஒரு கம்பெனியில் வாங்குகிறார். சில நாட்களிலேயே அதனுடைய மதிப்பு 40 டாலர் வந்ததும் அதை விற்று 12 டாலர் லாபம் சம்பாதிக்கிறார். சில மாதங்களிலேயே அவர் விற்ற ஷேரினுடைய மதிப்பு 200 டாலராகிறது. இப்போதுதான் வாரன் பப்பெட்டிற்கு தான் செய்த தவறும், ஸ்டாக் மார்க்கெட்டின் மதிப்பும் புரிய ஆரம்பிக்கிறது.

இவர் படிக்கும்போதே நிறைய பின்பால் மிஷின்களை வாங்கி நிறைய சலூன்களில் வைத்து அதன் மூலம் லாபம் சம்பாதிக்கிறார். பிறகு இவர் படித்து முடித்ததும் இவருடைய ரோல் மாடலான ‘பெஞ்சமின் கிரஹாம்’ என்பவரிடம் ஸ்டாக் மார்க்கெட் பற்றி நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டு அவருடைய கம்பெனியிலேயே வேலை செய்கிறார்.

1962 ல் Berkshire Hathaway என்ற கம்பெனியில் Invest செய்ய ஆரம்பிக்கிறார். சில வருடங்களிலேயே அந்த கம்பெனியின் CEO and Chairman பதவிக்கு வருகிறார். இவருடைய 30 ஆவது வயது வரை இவருடைய Net worth 1 மில்லியன் US Dollar ஆக இருந்தது. ஆனால், இன்றைக்கு இவருடைய Net worth 136 பில்லியன் US Dollar ஆக உள்ளது. அதாவது 11 லட்சம் கோடியாகும். இவருடைய வெற்றிக்கு முக்கியமான காரணம் கட்டுப்பாடும், பொறுமையும், ஸ்டாக் மார்க்கெட்டை எப்படி கையாள வேண்டும் என்ற அறிவுமேயாகும். இன்றைக்கு பல இளைஞர்களின் Inspiration ஆக வாரன் பப்பெட் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரத்தத்திலுள்ள அசுத்தங்களை நீக்க உதவும் 9 வகை உணவுகள்!

ஆந்திரா ஸ்பெஷல் கத்தரிக்காய் ரசம் செய்யத் தெரியுமா? 

சோபியா லோரன் - உலகின் அழகிய பெண் எனும் சிறப்பு பெற்ற இத்தாலிய நடிகை!

How to Make a Yummy Indian Sweet Dessert - ‘Coconut Ladoo’

சரும ஆரோக்கியத்திற்கும் ஹார்மோன்களுக்கும் என்ன தொடர்பு? 

SCROLL FOR NEXT