பிறர் சொல்வதைக் கேட்டு நடப்பது ஒரு ரகம், பிறரென்ன சொல்வது நமக்கு நாமே என்று நினைப்பவர்கள் இன்னொரு ரகம்.
இவ்விரு ரகங்களை சேர்ந்தவர்கள் பல நேரங்களில் தங்களைச் சுற்றி கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகளைக் கண்டுகொள்ளாமல், ஏதோ கடவுளே வழிகாட்டியதுபோல் செயல்படுவார்கள். இப்படிப்பட்டவர்கள் 360 டிகிரி பரந்த மனப்பான்மையோடு எப்படி தங்களை மாற்றிக்கொள்ளலாம். அதனால் என்னென்னப் பயன்களை நாம் அனுபவிப்போம் என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
ஆர்வத்தையும் திறந்த மனப்பான்மையையும் வளர்ப்பது:
ஒரு பரந்த கண்ணோட்டத்தை வளர்ப்பது, எதிலும் சிறந்தவராக உங்களை இருக்கச் செய்யும். அதற்கு பலதரப்பட்ட கருத்துகளைக் கேளுங்கள், அர்த்தமுள்ள உரையாடல்களில் ஈடுபடுங்கள், பல்வேறு கலாசாரங்கள் மற்றும் சூழல்களுக்கு உங்களை வெளிப்படுத்தி பாருங்கள். பரவலாகப் படிப்பது மற்றும் புதிய அனுபவங்களை ஆராய்வது உங்கள் வாழ்க்கைக்குச் சம்பந்தமான பார்வையைக் கணிசமாக விரிவுபடுத்தும்.
மனதில் தோன்றியதைப் பகிருங்கள்:
மாற்றுக் கண்ணோட்டங்களைக் கருத்தில்கொண்டு உங்கள் மனதில் தோன்றுகின்ற விஷயங்களை உங்களுக்கு ஏற்ற புரிதலை உண்டாகி அதை பிறரிடம் கேள்விக்குள்ளாக்குங்கள். பொறுமையைக் கடைப்பிடித்து, மற்றவர்களுடன் இதைப் பற்றி ஆலோசித்து, செயலில் ஈடுபடும்போது பல்வேறு சிக்கல்கள் வந்தாலும், உங்களுக்குத் தேவையான பல வழிகள் புலப்படலாம்.
தொடர்ச்சியான கற்றல்:
பரந்த மனப்பான்மையை பராமரிக்க வாழ்நாள் முழுவதும் கற்றல் மிகவும் அவசியம். பிற படிப்புகளைக் கற்பது, பட்டறைகளில்(Workshop) கலந்துகொள்வது மற்றும் நடப்பு நிகழ்வுகளை பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்வது, உங்கள் மனதை சுறுசுறுப்பாகவும் புதிய தகவல்களை ஏற்றுக்கொள்ளவும் உதவுகிறது, இதுவே உங்களின் நெகிழ்வுத்தன்மையையும்(Flexibility) தகவமைப்பு திறனையும் வளர்க்கிறது.
360-டிகிரி மனநிலையின் நன்மைகள்:
பரந்த மனப்பான்மையுடன் இருப்பது பல வழிகளில் தலைதூக்கும் சிக்கல்களைத் தீர்க்கும் திறன்களை மேம்படுத்துகிறது. இது பலதரப்பட்ட மக்களுடன் தொடர்பு கொள்ளவும், ஈடுபடவும் உங்களுக்கு தேவையான பயனுள்ள தகவல் பெறவும் மற்றும் உங்களுக்கு தேவையான ஒத்துழைப்பை உருவாக்கவும் ஊக்குவிக்கிறது.
குறுகிய மனப்பான்மையால் வரும் இழப்புகள்:
குறுகிய மனநிலையானது உங்களுக்காக திறந்திருக்கும் பல வாய்ப்புகளைத் தவற வழிவகுக்கும். சில நேரங்களில் சிறிய தவறுகளே நடந்தாலும் அது மோதல்களாக மாறி, அதை பற்றிய தவறான புரிதல்களை உங்களுக்கு ஏற்படுத்தும். காலப்போக்கில் அதுவே புதிய யோசனைகளை தடுத்து ஒட்டுமொத்த உங்களின் வளர்ச்சியையும் தடுக்கலாம்.
குறுகிய மனப்பான்மையிலிருந்து பரந்த மனப்பான்மைக்கு மாறுவதற்கு, தற்போது உங்களுக்கு நீங்களே வைத்திருக்கும் வரம்புகளை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். மாற்றத்தை உணர புதிய அனுபவங்களை தேடுங்கள். பிறர் கருத்துகளுக்குச் செவிசாயுங்கள். பலதரப்பட்ட நபர்களுடன் உங்களை இணைத்து வைத்துக்கொள்ளுங்கள். மாற்றத்தை ஏற்றுக்கொண்டு, உங்களுக்கான சுய பிரதிபலிப்பை புரிந்துகொள்வதன் மூலம், நீங்கள் நேர்மறையான மாற்றத்தை நோக்கி எளிதாக பயணிக்க முடியும்.
வாழ்க்கை என்பது அனைவருக்கும் ஒரு முறை மட்டுமே. அதை எப்படி பயனுள்ளதாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாற்றிக்கொள்ளலாம் என்பது நம் கையில் இருக்கிறது. இதை பலரும் பலவிதமாக புரிந்துகொள்ளலாம். ஆனால், இந்த 360 டிகிரி மனப்பான்மையை நாம் இளம் வயதிலே நாம் கற்றுக்கொண்டாலே, நாம் எதற்கு இவ்வுலகில் படைக்கப்பட்டோம் மற்றும் எதற்காக நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் போன்றவற்றுக்கான விடையை நாம் வாழும் நாட்களிலே கண்டுபிடித்து விடலாம்.